விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
எப்போதும் வலியில் இருப்பவர் போல் தோன்றுகிறார் டன்கன் பிளெட்சர்: பாய்காட் கருத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு ரவி சாஸ்திரியை அணி இயக்குனராக நியமித்ததைப் பாராட்டிய ஜெஃப் பாய்காட், பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது கேலி விமர்சனத்தைத் தொடுத்துள்ளார். "நான் டன்கன் பிளெட்சரை ஒரு போதும் பெரிய அளவுக்கு ஆதரிப்பவன் அல்ல. மனிதருக்கு சிரிக்கவே தெரியாது. முசுட்டுத் தோற்றம் உடையவராக இருக்கிறார். எப்போதும் வலியில் இருப்பவர் போலவே அவர் இருக்கிறார். மனிதர், தான் நேசிக்கும் வேலையைச் செய்வதற்கு நிறைய பணம் அளிக்கப்படுகிறது, ஆகவே கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு ஆகியவை தேவை. அவரது முசுட்டுத்தனம் நிச்சயம் இந்திய அணியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது என்று நான் நம்புகிறே…
-
- 0 replies
- 460 views
-
-
T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட் By Mohammed Rishad - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிரென் பொல்லார்ட் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 32 வயதான கிரென் பொல்லார்ட் தற்போது மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்காக இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்டில் நொர்தம்ப்டன்ஷெயார் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்ப…
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கை அணி பிரகாசிக்கும் என எதிர்பார்க்க முடியும் - குமார் சங்கக்கார நம்பிக்கை 2016-05-17 14:03:37 இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்சிய அடையும்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்களிப்பு செய் வார் என குமார் சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ''21 வயதே உடைய குசல் மெண்டிஸ் சாதுரியமாகவும் பந்து விழும் இடத்தை சரியாகக் கணித்தும் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். அவரைக் கொண்டு கிரிக்கெட் அரங்கில் நிறைய எதிர்பார்க்கலாம். வருடங்கள் செல்ல செல்ல அவர் சிறப்பு வாய்ந்த ஒருவராக உயர்வார்'' என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பமா…
-
- 0 replies
- 540 views
-
-
நெய்மரை தக்க வைக்கிறது பார்சிலோனா: டேனி ஆல்வ்ஸ் அணி மாறுகிறார் நெய்மர் ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமானது பார்சிலோனா. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். தற்போது கிளப் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மாற்று அணிக்கு செல்ல விரும்பும்போது, அவர்கள் சார்ந்த கிளப்புகள் அவர்களை விடுவிக்கும். அந்த வகையில், பார்சிலோனாவில் விளையாடும் முக்கிய வீரரான நெய்மர் இந்த சீசனில் வேறு அணிக்கு மாறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை பார்சிலோனா அணியின் தொழில்நுட்ப இயக்குநர் ராபர்ட் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,…
-
- 0 replies
- 274 views
-
-
டி20 உலக கோப்பை ரத்தாச்சுன்னா எல்லாமே கெட்டு போயிடும் -பிசிபி தலைவர் எச்சரிக்கை.! இஸ்லாமாபாத் : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் ஐசிசி நிதி நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் ஐசிசி நிதி மற்றும் வணிக விவகாரங்கள் குழுவின் தலைவருமான ஈசான் மணி, திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை நடத்தப்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் அதன்மூலம் ஐசிசி அதன் உறுப்பினர்கள், போர்டுகள் ஆகியவற்றிற்கு அளிக்கும் நிதி பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறுவதில் சிக்கல்? ஆஸ்திரேலியா…
-
- 0 replies
- 747 views
-
-
ரசிகர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தத் திட்டம்.! ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக சர்வ தேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
சார்ஜாவில் 1991 ஒக்டோபர் 25 ஆம் நாள் நடந்த வில்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவிட்டின் அபாரமான பந்துவீச்சு! மேகதிக தகவல்களுக்கு: http://www.espncricinfo.com/ci/engine/current/match/65946.html
-
- 0 replies
- 539 views
-
-
பிரேசில் ரசிகர்களின் கலாய்ப்பு கூச்சலால் தங்கம் இழந்த பிரான்ஸ் வீரர் பதக்க மேடையில் கண்ணீர்! பிரேசில் ரசிகர்களின் கேலிக்கூச்சல் பதக்க மேடை வர தொடர வெடித்து வரும் அழுகையை அடக்க முயலும் பிரான்ஸ் போல்வால்ட் வீரர் ரெனோ லாவினெலி. | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்…
-
- 0 replies
- 367 views
-
-
முதலிடத்தில் பாகிஸ்தான்: எழுந்து நின்று பாராட்டுங்கள் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அண்மைக்கால வரலாற்றில், இரண்டு தினங்கள் முக்கியமானவை. முதலாவது, மார்ச் 4, 2009 - பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம்: இரண்டாவது, ஓகஸ்ட் 28, 2010 - பாகிஸ்தானின் அப்போதைய தலைவர் சல்மான் பட் உட்பட மூன்று வீரர்கள், பணத்துக்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்ட தினம். ஏனைய நாடுகளாக இருந்திருந்தால், இந்த இரண்டு சம்பவங்களாலும் ஏற்பட்ட விளைவுகளால், மோசமான நிலைமையை அடைந்திருக்கும். ஆனால், இரண்டாவது சம்பவம் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகுவதற்கு 6 நாட்கள் முன்னதாக,…
-
- 0 replies
- 388 views
-
-
தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார்? - ஷோயப் அக்தர் கருத்து கொல்கத்தா, 1999, டெஸ்ட் போட்டியில் அக்தர் பந்தில் பவுல்டு ஆன சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். வாசிம் அக்ரம் நடத்திய தி ஸ்போர்ட்ஸ்மென் என்ற ஷோ-வில் ஷோயப் அக்தர் தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்ற தகவலை வெளியிட்டார். “நிறைய பேட்ஸ்மென்களைக் கூற முடியும். ஆனால் அவர்களை விடவும் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான வீரர் இன்சமாம் உல் ஹக்தான். அவரை நான் வலைப்பயிற்சியில் கூட வீழ்த்த முடிந்ததில்லை. அவரை விட என்னை சிறப்பாக ஆடிய வீரர் இல்லை என்றே கூறிவிடலாம். அவரது கால்நகர்த்தல்கள் விரைவாக இருக்கும். அவர் கிரீசில் பந்தை ஆட நிலைப்படுத்திக் கொள்ளும் விதம்…
-
- 0 replies
- 630 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக பந்தை அடித்து ஆடும் செர்பிய வீரர் ஜோகோவிச். (அடுத்த படம்) வெற்றியைக் கொண்டாடும் வாவ்ரிங்கா | படம்: ஏஎப்பி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜோகோவிச், பிரான்ஸ் வீரரான மான்பில்ஸை எதிர்த்து ஆடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் இரண்டு செ…
-
- 0 replies
- 309 views
-
-
உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், சிலவேளைகளில் அடுத்துவரும் சிம்பாவே தொடருக்கான அணியில் இளையவர்கள் அழைக்கப்படலாம் எனும் கருத்து வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்,ஆயினும் அவரும் இன்னும் குணமாகவில்லை என அறியக் கிடைக்கிறது. இலங்…
-
- 0 replies
- 329 views
-
-
கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் ஓர் அரிய சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன்( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது …
-
- 0 replies
- 343 views
-
-
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம்: லயன் ஆருடம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடக்கி…
-
- 0 replies
- 297 views
-
-
பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…
-
- 0 replies
- 411 views
-
-
மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு! பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 418 views
-
-
பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார். எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ள…
-
- 0 replies
- 180 views
-
-
அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளிற்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னராக, மீண்டும் தற்போது பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் கடந்த நாட்களில் தமது நாட்டிற்காக எதிரணியாக இருந்து விளையாடிய பல வீரர்கள், இச்சுற்றுப் போட்டியில் மீண்டும் ஓன்றிணைத்துள்ளனர். ஏற்கனவே, அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தன. அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மென்சஸ்டர் யுனைடட் அணி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கைக்கு எதிரான இனவெறி வார்த்தைளே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு : டெரன் லீஹ்மன் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இனவெறி வார்த்தைகளே எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்றுநருமான டெரன் லீஹ்மன் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த லீஹ்மன் வீரர்கள் அறையில் வைத்து இனவெறி வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது மிச்செல் ஜோன்ஸன் முதல் டேவிட் வோர்ணர் வரையிலான பல்வேறுபட்ட வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு சிறப்பாக பயிற்சியளித்து வருகிறார் டெரன் லீஹ்மன். …
-
- 0 replies
- 625 views
-
-
ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை அ-அ+ ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #ICCRankings இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார். ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதி…
-
- 0 replies
- 211 views
-
-
இறுதி ஆட்டம் இலங்கைக்கு மாற்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இறுதி ஆட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இந்த இடமாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை இந்திய வீரர்கள் பிரத்தியேக விமானம் ஒன்றில் இலங்கை நோக்கி பயணமாகக்கொண்டீருக்கிறார்கள் இப்பிடி என்னுடைய நண்பர் தனது சிங்கள நண்பர் சொன்னதாகச் சொன்னார் ஏப்ரல் முதலாம் திகதி கப்சாவாக இருக்கலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! துபாய்: சயீத் அஜ்மலைத் தொடர்ந்து மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இந்த முறை ஆல் ரவுண்டர் முகம்மது ஹபீஸ் சிக்கியுள்ளார். அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால் அவரதை் தடை செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரருக்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! இதுகுறித்து ஐசிசி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச…
-
- 0 replies
- 474 views
-
-
பிரக்யான் ஓஜாவுக்கு தடை டிசம்பர் 27, 2014. புதுடில்லி: ஐ.சி.சி., நிர்ணயித்த விதிமுறையை மீறி பந்துவீசிய பிரக்யான் ஓஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்திய அணியின் சிறந்த ‘ஸ்பின்னர்’ பிரக்யான் ஓஜா, 28. டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியவர். இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) நிர்ணயித்த 15 டிகிரி அளவுக்கு கூடுதலாக முழங்கையை வளைத்து பந்துவீசுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், இவரது தவறு உறுதியானது. இதையடுத்து போட்டிகளில் பங்கேற்க இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தடை விதித்தது. இவர் விளையாடி வரும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு(எச்.சி.ஏ.,) தகவல் அனுப்…
-
- 0 replies
- 548 views
-
-
ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார். தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்…
-
- 0 replies
- 343 views
-
-
சானியா - மார்ட்டினா சாதித்த கதை! சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி, புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர் 'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும் 'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால் ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும் தாண்டி 2-வது இன்னிங்ஸில், இரண்டு பெண்கள் கைகோத்து உச்சம் தொட்டிருக்கின்றனர். ஒருவர் சானியா மிர்சா, இன்னொருவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ் மங்கை. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது பட்டங்களை வென்று, டென்னிஸ் உலகையே இப்போது திரும்பிப்பார்க்க வை…
-
- 0 replies
- 405 views
-