Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வெளியேற்றப்பட்ட டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. வேடர் பிளீமனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக எர்லிங் பிறோட் ஹலான்ட், ஜியோவனி றெய்னா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், வேடர் பிளீமன்…

    • 0 replies
    • 514 views
  2. ரொனால்டோவுக்கு மீண்டும் தங்கக் காலணி விருது 2014ஆம் ஆண்­டுக்­கான சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான தங்கக் காலணி விருது போர்த்­துக்­கலின் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்கு வழங்­கப்­பட்­டது. 29 வய­தான ரொனால்டோ இந்த விருதை மூன்­றா­வது முறை­யாக பெற்­றுள்ளார். ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடை பெற்ற விழாவில் ரியல் மெட்ரிட் அணியின் தலைவர் புரோ­ரின்டோ பீரிஸ் இந்த விருதை ரொனால்­டோ­வுக்கு வழங்­கினார். அப்­போது பேசிய ரொனால்டோ, முதல் முறை­யாக இந்த விருதைப் பெறு­வது போன்ற உணர்வு ஏற்­ப­டு­வ­தாகக் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்:விளை­யாட்டில் இன்னும் சில காலம் வெற்­றிக்­கொடி நாட்ட முடியும் என நினைக்­கின்றேன். ஆனாலும் ஓய்­வு­பெ­றும்­போது உலகின் தலை­சி­றந்த கால்­பந்து …

  3. தோனியின் துருப்புச் சீட்டு ஷமி புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் ஏமாற்றிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் கேப்டன் தோனியின் துருப்புச் சீட்டாக உருவாகியுள்ளார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 24. இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டில் 5 விக்., மற்றுள் 4 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் மட்டும் சாய்த்தார். இதையடுத்து, கடினமான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, பந்தை ‘லேட் சுவிங்’ செய்வதில் மீண்டும் அசத்த துவங்கியுள்ளார். இதற்கான பலனை, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறுவடை செய்யத் துவங்கியுள்ளார். முதல் இரு போட்டியில் தலா 4 என, மொத்தம் 8 விக்கெ…

  4. உலகிலேயே கூலான கேப்டன் யார்? ஷாகித் அஃப்ரீடி பதில் படம்.| அகிலேஷ்குமார் கேப்டன்சியில் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் செயல்படுபவர் தோனி என்பது உலகறிந்த விஷயம், என்ன பதற்றமான சூழலிலும் அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம் அறிவின்பாற்பட்டதால் எளிதில் உணர்ச்சிவயப்பட மாட்டார். அவர் சிந்திக்கும் கேப்டன் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் கனடாவில் உள்ள டொராண்டோவில் தன் சொந்த கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கிய ‘பூம் பூம்’ அப்ரீடி ஒன் லைனர் பதில் அளிக்கும் கேள்விகளை எதிர்கொண்டார். அதில் அவரிடம் உலகிலேயே கூலஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது, உடனே பட்டென்று அதற்கு எம்.எஸ்.தோனி என்று பதில் அளி…

  5. செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி! “அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல். பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரி…

  6. 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச். இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையு…

  7. ‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம் பிரேக்பாஸ்ட் வித் சச்சசின் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் - படம்: சிறப்பு ஏற்பாடு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த போது பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்…

  8. ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி? ஆர். அபிலாஷ் இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை: டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு: போனஸ் புள்ளிகள் …

  9. சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…

  10. தோனி ஓய்வு பெற்றால் அவரை நாம் மிகவும் இழந்ததாகவே உணர்வோம்: டீன் ஜோன்ஸ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் தோனி. | படம்: பிடிஐ. தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு ப…

  11. வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற மர்ஸெய் அணியுடனான போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றதுடன், பின்னர் நேமரின் பந்துப் பரிமாற்றமொன்றை மர்ஸெய்யின் வீரர் றொலண்டோ போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தனது கோல் கம்பத்துக்குள் செலுத்த தமது முன்னிலையை பரிஸ் ஸா ஜெர்மைன் இரட்டிப்பாக்கிக் கொண்டதுடன், நேமர் கொடுத்த பந்தை எடின்சன் கவானி போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்ட…

  12. சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 5-2 என்ற கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த காலிறுதியில் லிவர்பூல் அணி, மென்சஸ்டர் சிடி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய அதேவேளை, ரோமா அணி பலம்மிக்க பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து அரையிறுதிக்குத் தெரிவாகியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி லிவர்பூல் அணியின் சொந்த மைதானமான என்பீல்ட் அரங்கில் இட…

  13. விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது. இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்…

  14. T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

  15. 41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. 307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.…

  16. நெருக்கடி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது: லஷித் மலிங்கா காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தனக்கு நெருக்கடி என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார். வேகம் குறைந்து, வயிறும் அவருக்கு முன்னால் நீண்டு கொண்டிருக்க லஷித் மலிங்காவின் தோற்றம் அவரை அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலையிலிருந்து கீழே இறக்கி விடுமோ என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. “நெருக்கடி தருணங்கள் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. பிரஷர் தருணங்கள் எனக்கு பழக்கமானவை. அதனால் நெருக்கடி பற்றி தனியாகப் பேச வேண்டினால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றே கூறுவேன். நான் எப்போதும் எங்கு விளையாடுகிறேன், சூழ்நிலைம…

  17. இலங்கை வருகிறது சிம்பாப்பே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்கு இலங்­கைக்கு இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது. அதன்­படி இங்கு வரும் சிம்­பாப்வே அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும், ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் மோத­வுள்­ளது. இந்தப் போட்­டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்­லே­கல ஆகிய மைதா­னங்­க­ளி­லேயே நடை­பெ­ற­வுள்­ளன. சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரை­யி­று­திக்கு முன்­னேறும் வாய்ப்பை தவ­ற­விட்ட இலங்கை அணி தற்­போது நாடு திரும்பி தங்­களின் வழக்­க­மான பயிற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில் சிம்­பாப…

  18. இந்தியாவின் 600-வது டெஸ்டுக்கு கேப்டன் யார்? 600 டெஸ்ட் போட்டிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடுத்த நூறு போட்டிகளில் இந்தியாவுக்கு தேவை என்ன? அதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த 500 போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 500-வது போட்டியில் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு 130வது டெஸ்ட் வெற்றி. தொடர்ந்து மூன்று மைல்கல் சதங்களையும் வெற்றியுடன் கடந்திருக்கிறது இந்திய அணி. முதல் போட்டி தொடங்கி சதம் கண்ட போட்டிகள் பற்றிய தகவலை கீழே காணலாம். 1980 களில் இருந்து சராசரியாக 10 ஆண்டுகளில் நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 9 போட்டிகள். அதில் கடந்து 20…

  19. U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…

  20. பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …

  21. 15 பந்துகளில் அரை சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர். - படம்: கே.பிச்சுமணி டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முன்னேறியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற…

  22. Published By: VISHNU 23 FEB, 2025 | 09:47 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார். 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் …

  23. ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். * ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹ…

  24. தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் அடித்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். 177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட்…

  25. டெஸ்ட் இன்னின்சில் 2 தொடக்க வீரர்களும் டக் அவுட்: சுவையான புள்ளி விவரங்கள் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் ரன் எடுக்காமல் முறையே ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான். | கோப்புப் படம். நியூஸிலாந்து அணியில் 6 முறை இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர். அது பற்றிய சுவையான புள்ளி விவரம் வருமாறு: லார்ட்ஸில் இவ்வாறு 3 முறை நடந்துள்ளது. இதில் நியூஸிலாந்து அணி 2 முறை இத்தகைய துரதிர்ஷ்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.