விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
டோனியின் உபாதை புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைர் மகேந்திர சிங் டோனியின் வலது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாமைக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தின் பெயரில் அவர் தனக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் ஓய்வினை எடுத்துக்கொண்டார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. உபாதை குணமடையும் வாய்ப்புக்கள் உள்ள போதும் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அவரை மேலும் உபாதையடையாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிர…
-
- 0 replies
- 390 views
-
-
இந்திய-அஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸி. பிரதமர் டோனி அபாட் புத்தாண்டு தேநீர் விருந்து ஆஸி.பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள். | படம்: சிறப்பு ஏற்பாடு. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார். இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அணி வீரர்களுடன் புகைப்படம் எடு…
-
- 0 replies
- 434 views
-
-
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்றும் ஜமைக்கா நாட்டின் பொலிஸார் செவ்வாய்கிழமை மாலை அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றபட்ட பிறகு பாப் உல்மர் தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து முதலில் ஒரு மருத்துவர் நடத்திய மருத்துவ ஆய்வில், பாப் உல்மர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு முன்னைய ஆய்வை நிராகரித்தது. உல்மரின் மரணம் தொடர்பான ஒவ்வொரு விடயமும் தொழில் ரீதியாக புலனாய்வு …
-
- 0 replies
- 1k views
-
-
ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…
-
- 0 replies
- 413 views
-
-
நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? நிருபரை கலாய்த்த தோனி! உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தவுடன் நிருபர்களை சந்தித்தார் தோனி. முதல் கேள்வியே நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியாக தான் வந்தது. சட்டென்று நிருபரை அழைத்த தோனி "வாங்க வாங்க வாங்க.. இங்க வந்து உட்காருங்க.." தன் அருகில் இருக்கிற நாற்காலியை இழுத்து அந்த நிருபரை அமர சொன்னார். அவரது தோளில் கை போட்டு நான் இந்திய ஊடகத்திலிருந்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர் சகோதரனோ, உறவினரோ இந்தியாவுக்காக விளையாட ரெடியாக இருப்பாங்க அதனால் தான் இந்த கேல்வியை கெட்டிருப்பார் என நினைத்தேன் என் ஆரம்பித்தார் கேப்டன் கூல். பின்பு கேள்வி கேட்க …
-
- 0 replies
- 518 views
-
-
காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes காய்ச்சலில் ரெய்னா... முதல் ஆட்டத்தில் மிஸ்! காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார். இந்த தகவலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ரெய்னா, சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம…
-
- 0 replies
- 338 views
-
-
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி அட்டவணை வெளியீடு: பார்சிலோனா- யுவான்டஸ்; ரி.மா.- பேயர்ன் முனிச் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான காலிறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்சிலோனா யுவாண்டசையும், ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச் அணியையும் எதிர்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கிடையில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடர் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரில் யுவான்டஸ், பார்சிலோனா, டோர்ட்மண்ட், மொனாகோ, அட்லெடிகோ மாட்ரிட், லெய்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பேயர்ன் முனிச் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்…
-
- 0 replies
- 372 views
-
-
முதன்மை வீராங்கனையாக யாழ். மாணவி - கே.கண்ணன் இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு …
-
- 0 replies
- 488 views
-
-
புதிய விதி பாய்ந்தது: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டனுக்கு ஐசிசி கடும் தண்டனை இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கு புதிய விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் தண்டனை விதித்துள்ளது. தினேஷ் சந்திமால் மட்டுமல்லாது, அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சமீபத்தில் புதிய விதிகளும் தண்டனையும் ஐசிசி கடுமையாக்கிய பின், இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 315 views
-
-
தீப்பொறி பறக்கும் பார்மில் இருக்கும் ஃபகார் ஜமானை வீழ்த்துவது எப்படி? - இந்திய பவுலர்களுக்கு மைக் ஹஸ்ஸி ஆலோசனை பாகிஸ்தான் சரவெடி வீரர் ஃபகார் ஜமான். | ஏ.பி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்த ஃபகார் ஜமான் சமீபத்தில் தீப்பொறி பறக்கும் பார்மில் இருந்து வருகிறார், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு பல ஒருநாள் சாதனைகளை அந்தத் தொடரில் முறியடித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவரைக் கட்டுப்…
-
- 0 replies
- 405 views
-
-
(புதியவன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின்வெள்ளிவிழா உதைபந்தாட்டத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் போட்டியின் இறுதியாட்டம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென்.ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோல் எதையும் போடாமையால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற…
-
- 0 replies
- 522 views
-
-
ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட்' டாடி'கள்! கடந்த 5 மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 5 கிரிக்கெட் பிரபலங்கள் தந்தையாகியுள்ளனர். உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு குழந்தை பிறந்தது. சாக் ஷி கையில் குழந்தை தவழ்ந்த சமயத்தில்,தோனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். தோனியின் குழந்தையின் பெயர் ஷீவா. ஐ.பி.எல். போட்டியின் போது மைதானங்களில் தோனி, ஷீவாவை கையில் வைத்துக் கொண்டு அலைவதே தனி அழகு. கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு பெயர் மெடில்டா விக்டோரியா வாட்சன் என்று பெயரிடப்பட்டது. ஷேன் வாட்சன், அவரது மனைவி, மூத்த மகன் ஆகிய…
-
- 0 replies
- 433 views
-
-
முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு :20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை குவித்தது. 143 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்…
-
- 0 replies
- 733 views
-
-
இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2) நாள்- ஏப்ரல் 6, 2014 இடம்- வங்கதேச நாட்டின் மிர்பூரில் உள்ள ஷீர் பங்களா நேஷனல் ஸ்டேடியம் சம்பவம் - 2014 உலககோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், செம ஸ்ட்ராங்காக ஃபைனல் வந்த இந்திய அணியை அசால்ட்டாக தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி. அந்த நாள் தான் இலங்கை அணி கடைசியாக சிறந்த பெர்பார்மென்சை வெளிப்படுத்திய நாள். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கு முகம் தான். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றபிறகு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல வளைய வருகிறது இலங்கை அணி. புதிதாக அணிக்குள் வந்துள்ள இளைஞர்கள் நம்பிக்கை தரு…
-
- 0 replies
- 603 views
-
-
82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் 42 வயது கேப்டன் மிஷ்பா உல் ஹக் பெற்றுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ஜோடி சேர்ந்த மிஷ்பா உல் ஹக்கும் ஆஷாத் சபீக்கும் நிதானமாக விளையாடி, ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது. மிஷ்பா உல் ஹக் 110 ரன்களை அடித்தார். 154 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகளையும் விளாசின…
-
- 0 replies
- 499 views
-
-
20 இன் கீழ் பீபா மகளிர் கால்பந்தாட்டம்; வட கொரியா உலக சம்பியன் 2016-12-05 09:51:44 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பீபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வட கொரிய மகளிர் அணி சம்பியனானது. பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பெற்றன. பப்புவா நியூ கினியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்த்தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. 20 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 10 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக வட கொரியா சம்பியனா…
-
- 0 replies
- 330 views
-
-
மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுத வஹாப் ரியாஷ் : மனதை உருக்கும் சம்பவம் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய அரையிறுப்போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை கண் கலங்க வைத்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளையாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர்விட்டு அழுதார். பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப…
-
- 0 replies
- 378 views
-
-
பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு டுவிட்டர் பதிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, 2018 ஆம் ஆண்டில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதிலிருந்து தான் நீண்டகால மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறினார். இந்த மன அழுத்தம் காரணாக ஒசாகா போட்டிக்கு பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்புக்களை புறக்கணித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் போட்டியின்போது தனது முதல் சுற்று வெற்றியின் பின்னர் இடம்பெற்ற செய்தி மாநாட்டைத் தவிர்த்ததற்காக ஒசாக்காவிற்கு 15,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேர் நான்கு கிராண…
-
- 0 replies
- 429 views
-
-
Pyrros Dimas: பளுதூக்குதல் விளையாட்டின் டான்ஸிங் ரோஸ், வயது மூப்பு, காயங்களை தாண்டி சரித்திரம் படைத்த சூரன் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒலிம்பிக் ஐவண்ண வலையங்கள் ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார். கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை விட்டு, கிரீஸுல் குடியேறி, அந்நாட…
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது அநேகமானவர்களின் கருத்தாகும். இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பான ஆராய்வு….. இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருடத்தில் மாத்திரம் 03 தொடர்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வருடம் 26 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 12 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அதிலும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல…
-
- 0 replies
- 417 views
-
-
2023 உலகக்கோப்பை கிரிக்கெட், 2021 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் நடைபெறுகிறது உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி. - படம். | ஐசிசி. 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்தது. முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்டாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023-ல் முதல்முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்…
-
- 0 replies
- 320 views
-
-
சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டி குறித்த சர்ச்சைகள் அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டன. பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன. அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘கிரிக்கெட்டில் இவர் பரவாயில்லையே!’- கோலியின் அரைசதம் குறித்து எசெக்ஸ் கிரிக்கெட் கேலி ட்வீட் படம். | ஏ.எப்.பி. கெம்ஸ்போர்டில் இந்திய அணியும் எசெக்ஸ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி விராட் கோலி உள்ளிட்டோரின் அரைசதங்களுடன் 395 ரன்கள் எடுக்க எசெக்ஸ் அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் ரன் இயந்திரமான இந்திய கேப்டன் விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் எடுத்தார், பிறகு 93 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஒரு 3 பந்து நீங்கலாக சரளமாகவே ஆடினார், இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் எடுத்து இடது கை வேகப்பந்து…
-
- 0 replies
- 344 views
-
-
கறுப்பினத்தவரை அவமதித்தனர் : 'இனவெறி' கால்பந்து ரசிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை ! கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியுடன் லண்டனை சேர்ந்த செல்சி அணி மோதியது. முதல் லெக் ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான செல்சி அணியின் ரசிகர்கள் பாரிசுக்கு படையெடுத்தனர். போட்டியை காண பாரிஸ் நகர மெட்ரோ ரயிலில் ஆரவாரத்துடன் சென்ற செல்சி ரசிகர்கள், சூலைமான் சில்லா என்ற கறுப்பினத்தவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து அவமதித்தனர். ரயிலில் ஏற முயற்சித்த அவரை, கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தினர். ஏராளமான ரயில் பயணிகள் முன் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த ரசிகர்கள், "நாங்…
-
- 0 replies
- 209 views
-