விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …
-
- 0 replies
- 314 views
-
-
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் தோனி 'உலகக்கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார்செய்ய விராட் கோலிக்கு தேவையான நேரம் அளிப்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்த மகேந்திரசிங் தோனி, 2017-ம் ஆண்டு ஜனவரியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் தோனி கலந்துகொண்டார். அப்போது, 'இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதைத் தவறவிட்டது. அதனால்தான், வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக…
-
- 0 replies
- 493 views
-
-
சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவராக (பிபா) சுவிற்சர்லாந்தின் செப் பிளாட்டர் (வயது 71) 3 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டத்தில் பிளாட்டரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. அவர் 2011 ஆம் ஆண்டு வரை இந்த பதவியிலிருப்பார். இந்தக் கூட்டத்தில் `பிபா'வின் 208 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், தன் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். ஊக்க மருந்து, ஊழல், மோசடி, நிறவெறி ஆகிய நான்கும் கால்பந்து ஆட்டத்துக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இவற்றை தடுப்பதில் பிபா முழுக் கவனம் செலுத்தும் என்றார். --thinakkural--
-
- 0 replies
- 746 views
-
-
வங்கதேச அணி எழுச்சியில் இருப்பதால் விராட் கோலி விளையாட வேண்டும்: சுனில் கவாஸ்கர் வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலக்கு கோரியதாக செய்திகள் எழுந்ததையடுத்து அவர் விளையாடுவது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். "விராட் கோலி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஒருநாள் போட்டிகளின் போது விலகிக் கொள்ளலாம். உண்மையில் விராட் கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு தேவையே. கடந்த 4 மாதங்களாக சில வீரர்களுக்கு பணிச்சுமை கடுமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வங்கதேசத்துக்கு வலுவான இந்திய அணி செல்வது மிக முக்கியம். பாகிஸ்தானை அவர்கள் ஒருநாள் தொடரில் மிகவும் எளிதான வீழ்த்தியதைப் ப…
-
- 0 replies
- 295 views
-
-
ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இருந்தும் பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் லாகூரில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷயார்கான் கூறுகையில், வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை யு.ஏ.ஈ நாட்டில் பாகிஸ்தான் சூ…
-
- 0 replies
- 227 views
-
-
கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி கரீபியன் பிரிமியர் லீகில் தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.…
-
- 0 replies
- 341 views
-
-
ரியல் மெட்ரிட் பயிற்றுநரை நீக்காவிட்டால் தான் விலகப்போவதாக ரொனால்டோ எச்சரிக்கை! ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்திலிருந்து பயிற்றுநர் ரபாயெல் பெனிட்டஸை நீக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அக்கழகத்திலிருந்து தான் விலகப்போவதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ எச்சரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (30) 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தில் விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் கழகத்தை பார்ஸிலோனா கழகம் 4:0 கோல்களால் வென்றது. இத்தோல்வியினால், லா லீ…
-
- 0 replies
- 515 views
-
-
மார்லனுக்கு பந்து வீசத் தடை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/1006
-
- 0 replies
- 620 views
-
-
விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. 208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக…
-
- 0 replies
- 447 views
-
-
54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை! வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் ச…
-
- 0 replies
- 465 views
-
-
இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி! பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத் தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான சூழல் தற்போது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலால் இந்த நிலை உள்…
-
- 0 replies
- 681 views
-
-
ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்! கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய 2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே... லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின் உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வ…
-
- 0 replies
- 416 views
-
-
இதுவரை நீங்கள் பார்த்திராத `அற்புதமான' பெனால்டி கோல் (காணொளி) மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த பாங்காக் விளையாட்டு கிளப், 20-19 என்ற கோல்கணக்கில் சாட்ரி ஆங்தொங் அணியை வென்றுள்ளது. மிகவும் அதிசயிக்கத்தக்க இந்த கோல் அடிக்கும் காணொளி, நீங்கள் ரசிக்க. http://www.bbc.com/tamil
-
- 0 replies
- 626 views
-
-
நல்ல சம்பளம் கொடுக்காமல் வெறும் மன்னிப்பு எம்மாத்திரம்: மே.இ.தீவுளின் டேரன் சமி காட்டம் டேரன் சமி. - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். பிற டி20 லீகுகளில் ஆடும் மே.இ.தீவுகள் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் வெறும் மன்னிப்பு மட்டும் வழங்குதல் போதாது என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணியின் டேரன் சமி தெரிவித்துள்ளார். ஈஎஸ்பின் இணையத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மே.இ.தீவுகள் ஏறக்குறைய இழந்து விட்ட நிலையில் கிரிக்கெட் மே.இ.தீவுகள் வாரியம் தங்கள் அணித்தேர்வு விவகாரங்களில் பணமழை டி2…
-
- 0 replies
- 474 views
-
-
முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர். “விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியு…
-
- 0 replies
- 400 views
-
-
உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை * மத்தியஸ்தர் வெங்கட்ராகவன் "முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்". இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீ…
-
- 0 replies
- 987 views
-
-
ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்…
-
- 0 replies
- 329 views
-
-
உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...! உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான். போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது. ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு. இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில…
-
- 0 replies
- 633 views
-
-
குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது.. கோஹ்லிக்கு கிர்மானி "நறுக்" பெங்களூரு: கேப்டன் டோணிக்கு முன்னாள் இந்திய விக்கட் கீப்பர் சையத் கிர்மானி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் என்றால் இவரைப் போலத்தான் இருக்க வேண்டும். மைதானத்தில் குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக விராத் கோஹ்லியை கண்டித்துள்ளார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருபவர்கள், டோணியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கிர்மானி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கிர்மானி. ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: டோணிதான் பெஸ்ட்…
-
- 0 replies
- 290 views
-
-
காதலியை கரம்பிடித்தார் ரோஹித் December 14, 2015 இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்களது திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை திருமணம் செய்தார். தற்போது புதுமாப்பிள்ளை வரிசையில் ரோஹித்தும் இணைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிட்டா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை அணியின் வீரர்கள் மற்றும் புதுமாப்பிள்ளைகளான ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங்கிற்கு அவர்களது இல்லத்தில் விருந்தளித்தனர். ht…
-
- 0 replies
- 677 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நட…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
இந்த வருடத்தில் 1700 கோடிகள் சம்பாதித்த பெக்காம் December 27, 2015 இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமும் அவரது மனைவியும் இணைந்து இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1700 கோடிகளை சம்பாதித்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. பெக்காம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். குறிப்பாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்னரும் பெக்காமுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்தாட்டத்தில் சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா பெஷன் டிசைனராக உள்ளார்…
-
- 0 replies
- 443 views
-
-
முக்கோ முக்கேன்று முக்கி kadasiyaaka ஒரு தங்க பதக்கத்தை பிரித்தானிய பெற்றுள்ளது. துடுப்பு படகு மகளிருக்கான இரட்டையர் பிரிவில் பிரித்தானியா தங்கம் வென்று தன் தங்க வேட்டையை (??) ஆரம்பித்துள்ளது. இதன் முலம் இருபதாவது இடத்தில் இருந்து பதின்னான்காம் இடத்துக்கு மின்னேறி உள்ளது.
-
- 0 replies
- 390 views
-
-
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சிங்கர் விருது விழா; அதி சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் அசலன்க (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கிரிக்கட் போட்டிகளுக்கான சிங்கர் விருது விழாவில் வருடத்திற்கான அதி சிறந்த சிங்கர் பாடசாலை கிரிக்கெட் வீரராக காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவானார். சிங்கர் அதி சிறந்த வீரருக்கான இரண்டாம் இடத்தை ஆனந்த கல்லூரி அணித் தலைவர் ஷம்மு ஆஷான் பெற்றார். இவ் விருது விழா கொழும்பு மியூஸியஸ் கல்லூரி மண்டபத்தில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. …
-
- 0 replies
- 302 views
-