Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துபசாரம் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள பாகிஸ்தான் அணி­யினர் மற்றும் இலங்கை அணி­யி­ன­ருக்­கான விருந்­து­பசார நிகழ்வொன்று, இலங்­கைக்­கான பாகிஸ்தான் தூது­வ­ரா­ல­யத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீல் தலை­மையில் கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் உள்ள போல் ரூமில் நேற்று முன்­தினம் இரவு நடைபெற்­றது. இந்­நி­கழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரி­க்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன அதி­கா­ரிகள், வெளி­நாட்டு தூது­வர்கள், அவற்றின் பிரதிநிதிகள், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் பைஸர் முஸ்­தபா, பாகிஸ்தான் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், கிரிக்கெட…

  2. கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…

  3. நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்! இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. மார்டின் குப்டில் - ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமறிங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 3.3 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் பும்ராவின் பந்து வீச…

  4. பெண் மத்தியஸ்தரை திட்டிய கால்பந்தாட்ட வீரர் சிறுமிகளுக்கான போட்டியில் கடமையாற்ற நிர்ப்பந்தம் ஜேர்­ம­னியில் நடை­பெற்ற கால்­பந்­தாட்ட போட்­டி­யொன்­றின்­போது மத்­தி­யஸ்­த­ராகப் பணி­யாற்­றிய பெண் ஒரு­வரை திட்டி, ஆண்­க­ளுக்­கான இவ்­வி­ளை­யாட்டில் பெண்­க­ளுக்கு இட­மில்லை எனக் கூறிய கால்­பந்­தாட்ட வீரர் ஒருவர் சிறு­மி­க­ளுக்­கான கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றில் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­று­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளார். போர்ச்­சுனா டெசல்டோர்வ் கழ­கத்தைச் சேர்ந்த கெரெம் டெமிர்பே எனும் இவ்­வீரர், அண்­மையில் நடை­பெற்ற எவ்.எஸ்.வி. பிராங்பர்ட் கழ­கத்­து­ட­னான போட்­டியில் பங்­கு­பற்­றினார். இப்­போட்­டி­…

  5. கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் December 27, 2015 இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான விராக் மேர் தொடர்ந்து 50 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா லத்துரை சேர்ந்த விராக் மேர், கர்வே நகரில் உள்ள மகாலட்சுமி மைதானத்தில் கடந்த 22ம் திகதி காலை 9.30 மணிக்கு தனது பயிற்சியை ஆரம்பித்தார். இடைவிடாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அவர் டிசம்பர் 24ம் திகதி காலை 9.30 மணி வரை துடுப்பெடுத்தாடினார். 48 மணி நேரம் பயிற்சி செய்த அவர் கூடுதலாக 2 மணி நேரம் பயிற்சி செய்து பயிற்சிக்காலத்தை 50 மணி நேரமாக நீட்டித்துள்ளார். ஐந்து மணி நேரம் இடைவிடா பயிற்சிக்கிடையில் 25 நிமிடங்கள் ஓய்வு எடுத்துள்ளார். மொத்தாக அவர் 50 மணி நேரம், …

  6. 03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்த…

  7. பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை. எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது. எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற சிறுத்தை கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக…

  8. உலக சாதனை: பால் போக்பாவை ரூ.740 கோடிக்கு மான்செஸ்டர் வாங்கியது! யுவான்டஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரூ.740 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப்பேற்ற பின், ஸ்வீடன் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச்சை ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தது. தற்போது யுவான்டஸ் அணியுடன் பேரம் படிந்துள்ளது. அதன்படி, 89 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.740 கோடி) பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே…

  9. இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2-0 என கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்தனர். இதனால் இந்தப் போட்டியில் மூலம் 2.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட இது அதிகமாகும். …

  10. ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…

  11. வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…

  12. வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர் ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைக…

  13. டோனியின் ஓய்வு மிகப்பெரிய நான்கு பேரின் ஓய்வு போன்றது: கில்கிறிஸ்ட் சொல்கிறார் டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது…

  14. அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா...? எண்கள் சொல்லும் உண்மை! #Analysis #VikatanExclusive #INDvSL Chennai: வார்னேவால் முடியவில்லை... முரளிதரனால் முடியவில்லை... வாசிம் அக்ரம், மெக்ராத், டேல் ஸ்டெய்ன் எவராலும் முடியவில்லை. அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பௌலர் என்ற டெனிஸ் லில்லியின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. 1981-ல் அரங்கேறிய அந்தச் சாதனையை சுழல் ஜாம்பவான்கள் என்று புகழப்பட்டவர்களாலும், வேகச் சூறாவளிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களாலும் அசைக்க முடியவில்லை. கடந்த 24-ம் தேதி நாக்பூரில் அந்த 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துவிட்டார் ரவிச்சந்திரன் அஷ்வின். 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகள். அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். டெனிஸ…

  15. கோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்! கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன். தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓ…

  16. எவரெஸ்ட் மலையில் வைக்கப்படும் பிலிப் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை அவுஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பலரும் அறிந்ததே. பல்வேறு வழிகளில் அவருக்கு அவுஸ்திரேலியா தரப்பிலும் உலக அளவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ்க்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையொன்றை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேபாள…

  17. 13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/

  18. ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…

  19. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து நடப்பு சம்பியன் மியூனிச் வெளியேற்றம் பொரு­சியா டோர்ட்மண்ட் கழ­கத்­திற்கு எதி­ரான ஜேர்மன் கிண்ண அரை இறுதிப் போட்­டியில் சம­நிலை முறிப்பு பெனல்­டிகள் அனைத்­தையும் கோட்டை­விட்ட நடப்பு சம்­பியன் பயேர்ன் மியூனிச்கழகம் 2 – 0 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் தோல்வியடைந்து போட்­டி­க­ளி­லி­ருந்து ஏமாற்­றத்­துடன் வெளி­யே­றி­யது. இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற அரை இறுதி ஆட்டம் மேல­திக நேர முடி­வின்­போது 1– 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தி­ருந்­தது. இதனை அடுத்து வழங்­கப்­பட்ட பெனல்­டி­களில் தனது நான்கு பெனல்டிகளையும் பயெர்ன் மியூனிச் கோட்டை விட்­டது. ஜேர்மன் வீரரும் பயேர்…

  20. 2019 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கட்டார்! அபுதாபியில் நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கட்டார் அணி 3–1 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்யத்தை சொந்த நாட்டில் வீழ்த்தி முதன் முறையாக ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு கட்டார் அணி தெரிவாகியது. இந்நிலையில் அபுதாபியில் உள்ள, ஸாய்ட் ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி போட்டி இடம்பெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நான்கு முறை கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணியை எதிர்கொண்ட கட்டார் அணி 3– 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த ப…

  21. தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …

  22. களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்! பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. 100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 1990களில்தான் முதன் முதலாக கேரளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவில்லாதான் அவர். பின்னர் டினு யோகனன், சோபிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அறிமுகமாகி வளர்ந்து வரும் கட்டத்…

  23. இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன் [30 - November - 2007] [Font Size - A - A - A] கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒருவழியாக அணிக்கு புதிய பயிற்சியாளரை இனம் கண்டுள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான கேரி ஹேஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ஹேஸ்டனின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்பித்தோர் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரி…

    • 0 replies
    • 1.1k views
  24. 200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆ­ஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…

  25. சகல துறை வீரர்களின் தர வரிசையில் அஸ்வின் முதலிடம் December 09, 2015 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சகல துறை வீரர்களின் தர வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 3–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தர வரிசைப்பட்டியலில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.