விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து ! நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி …
-
- 6 replies
- 1.5k views
-
-
7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். இதனையடுத…
-
- 0 replies
- 697 views
-
-
7 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்து வெற்றி! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டத்தையும்…
-
- 0 replies
- 802 views
-
-
அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதிப்படுத்தியது பாகிஸ்தான்! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 228 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்று 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் …
-
- 0 replies
- 468 views
-
-
அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது. லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ஆரொன் பிஞ்ச் இன் சதத்தின் உதவியுடன் இலங்கை அணிக்கு கடின இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்ரேலிய அணி சார்பாக, ஆரொன் பிஞ்ச் 5 ஆறு ஓட்டங்கள், 15 நான்கு ஓட்டங்கள் உள்ள…
-
- 2 replies
- 967 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 42ஆவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று லீட்ஸ்- ஹெடிங்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5.3ஆவது ஓவரின் போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. அணி 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற…
-
- 0 replies
- 531 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது தென்னாபிரிக்கா! அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸிஸ் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 326 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ர…
-
- 0 replies
- 557 views
-
-
இங்கிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. சௌத்தம்ரனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சுக்குத் தடுமாறிய நிலையில் அவ்வணி, 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணி சார்பாக, நிக்கோலஸ…
-
- 0 replies
- 842 views
-
-
இங்கிலாந்து இந்தியாவினை 31 ஓட்டங்களினால் வென்றுள்ளது. July 1, 2019 ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களினால் இந்தியாவினை வென்றுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் நேற்றையதினம் பேர்மிங்காம் மைதானத்தில் போட்டியிட்ட நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 338 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டங்களினால் உலககிண்ணத் தொடரில…
-
- 0 replies
- 350 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது. 286 என்ற வெற்ற…
-
- 0 replies
- 706 views
-
-
இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே ! பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது. 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்…
-
- 2 replies
- 884 views
-
-
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வி…
-
- 0 replies
- 474 views
-
-
இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…
-
- 0 replies
- 468 views
-
-
இறுதி வரை போராடிய முஷ்பிகுர் ! அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடு…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்கை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-பாகிஸ்தான்-போட்ட/
-
- 0 replies
- 427 views
-
-
உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது தென்னாபிரிக்கா! இம்முறையாவது உலகக்கிண்ண தொடரில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையுடன், உலகக்கிண்ண தொடருக்குள் அடியெடுத்து வைத்த தென்னாபிரிக்கா அணி, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. பர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 25ஆவது போட்டியில், நியூஸிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதின. எதிர்பார்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, இ…
-
- 0 replies
- 827 views
-
-
சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை குவித்தது. 387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்…
-
- 0 replies
- 669 views
-
-
சமியின் ஹெட்ரிக்கின் உதவியுடன் போராடி ஆப்கானை வென்றது இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிகொண்டது. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று பகல் 3 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நாணயசுலட்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் இந்திய அண…
-
- 0 replies
- 393 views
-
-
சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 240…
-
- 0 replies
- 489 views
-
-
தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் போட்டி மழையால் கைவிடப்பட்டது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 15 ஆவது லீக் போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியில் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. இதில் தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்ட…
-
- 0 replies
- 419 views
-
-
தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணண தொடரின் 21 ஆவது போட்டி நேற்றைய தினம் கார்டிப் மைதானத்தில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரக்கா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 35 ஓட்டங்களையும், நூர் அலி சாட்ரன் 32 ஓட்டத்தையும் அதிகபட்சமாக பெற்றுக்…
-
- 0 replies
- 774 views
-
-
தொடரும் மழையின் ஆட்டம் ; கைவிடப்பட்ட அடுத்த போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பெய்து வந்த மழை காரணமாக போட்டி நாணய சுழற்சிகூட மேற்கொள்ளப்படாது இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இது என்பதும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்! இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. மார்டின் குப்டில் - ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமறிங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 3.3 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் பும்ராவின் பந்து வீச…
-
- 0 replies
- 987 views
-
-
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு இலகு வெற்றி! நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அவுஸ்ரேலிய அணி சார்பில், வோர்னரும், பின்ஞ்சும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலேயே அவுஸ்ரேலிய அணி, தடுமாற்றமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன…
-
- 0 replies
- 384 views
-
-
நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து! நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது. 306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை ம…
-
- 0 replies
- 579 views
-