விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
கோலி தலைவராக செயற்பட டோணி சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து ஆடலாம் : ரவி சாஸ்திரி அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது. நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்…
-
- 0 replies
- 385 views
-
-
முதியோருக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற 92 வயதான செல்லப்பிள்ளை (கதிரவன், திருகோணமலை) 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த 92 வயதானஅல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இலங்கை மூத்தோர் மெய்வல்லுநர் சங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண மூத்தோர் மெய்வல்லுநர் ஏற்பாடு செய்த மூத்தோருக்கான அகில இலங்கை 9 ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 16, 17ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், …
-
- 0 replies
- 354 views
-
-
கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம் கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம். இந்த வார இத்தாலி நாட்டின் Serie B போட்டிகளில் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கால்பந்து போட்டிகளில் பொதுவாக வீரர்கள் முறையற்ற விளையாட்டில் ஈடுபட்டால் மஞ்சள் அட்டை மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படுவது வழக்கம். அனால் இந்த சீசனில் Serie B போட்டிகளில் கனவான் தன்மையுடன் விளையாடும் வீரருக்கு பச்சை அட்டை காண்பிக்கப்படும் எனவும் சீசன் இறுதியில் அதிக பச்சை அட்டை பெறும் வீரருக்கு சிறப்பு விருதும் வழங்கப்படும் எனவும் Serie B இன் தலைவர் ஆண்ட்ரியா அபோட அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்ற வாரம் நடை…
-
- 0 replies
- 559 views
-
-
அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…
-
- 0 replies
- 285 views
-
-
'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும். 2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர…
-
- 0 replies
- 459 views
-
-
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா? எப்போதும் பிரியாதது எதுவென கேட்டால் சென்னையும் கிரிக்கெட்டும் என உடனடியாக சொல்லிவிட முடியும் . கிரிக்கெட்டுக்கு எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது சென்னை தான். அது சென்னை சூப்பர் கிங்ஸோ, சென்னை 600028 திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய அணிக்காகட்டும், சச்சின், ஷேவாக், தோனி போன்ற நட்சத்திர வீரர்களாகட்டும் எல்லோருக்கும் திருப்பம் தருவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் தான். ஆஸ்திரேலியாவிற்கு சிட்னியை போல, இந்தியாவிற்கு சென்னை மைதானத்தை குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே சென்னையில், கிரிக்கெட்டை நேசிக்க…
-
- 0 replies
- 474 views
-
-
அபார வெற்றிகளும் இன்னிங்ஸ் தோல்விகளும் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 477 ஓட்டங்களை பெற்ற பிறகு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது இங்கிலாந்து அணி. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த அணிகளின் வரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி, 2001-இல் ஓவலில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 432 ஓட்டங்களை பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததே சாதனையாக இருந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஓர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த பிறகு இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 6-ஆவது…
-
- 0 replies
- 291 views
-
-
ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சேனல், டாட்டன்ஹாம், செல்சியா ஆகிய குழுக்களும் ஸ்பெயி…
-
- 0 replies
- 644 views
-
-
விராட் கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய ஆஸி. மீடியா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து ஆஸ்திரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில்…
-
- 0 replies
- 497 views
-
-
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், 1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பிய…
-
- 0 replies
- 455 views
-
-
மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிருக்கான யுரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்றில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோல் அடிக்கிறார் டென்மார்க் வீராங்கனை நதியா நதிம். - படம்: ஏஎப்பி நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும…
-
- 0 replies
- 347 views
-
-
Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …
-
- 0 replies
- 370 views
-
-
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் (937) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியின் நிறைவில், டெஸ்ட் துடுப்பாட்ட வரி…
-
- 0 replies
- 419 views
-
-
திமுத் காருணாரத்னவுக்கு காயம் அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது காயமேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கும்மின்ஸ் வீசிய பந்து அவர் மீது பட்டதிலேயே திமுத் காருணாரத்ன காயமடைந்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=111022
-
- 0 replies
- 838 views
-
-
பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…
-
- 0 replies
- 279 views
-
-
பீபாவுக்கு இவ்வாண்டில் $ 187 மில். நட்டம் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), இவ்வாண்டில் மாத்திரம் 187 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (87 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்) அதிகமான நட்டம் ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது. பல்வேறுபட்ட ஊழல், மோசடி, முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பீபா, அனுசரணையாளர்களிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல அனுசரணையாளர்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்தனர். முதல்நிலை அனுசரணையாளர்களான எமிரேட்ஸ், சொனி இரண்டும், இரண்டாம் நிலை அனுசரணையாளர்களான கஸ்ட்ரோல், கொன்டினென்டல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்ததோடு, அவர்கள…
-
- 0 replies
- 821 views
-
-
ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தோனி. | படம்: விவேக் பெந்த்ரே. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர…
-
- 0 replies
- 417 views
-
-
13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு! உலக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும். யார் இந்த கார்லி லாய்டு? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 20…
-
- 0 replies
- 587 views
-
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவி…
-
- 0 replies
- 228 views
-
-
T20 ல் இலங்கையின் நிலை என்ன? March 08, 2016 இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலத்தில் நம்ப முடியாத அளவு சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் (2-0) ஒயிட் வாஷ், இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக இலங்கை தொடரை இழந்தது. தற்போது நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியிலும் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் நடப்பு சாம்பியனான இலங்கை அணி முதலிடத்தில் இருந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு…
-
- 0 replies
- 569 views
-
-
கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…
-
- 0 replies
- 424 views
-
-
ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்... கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை…
-
- 0 replies
- 488 views
-
-
கொண்டாட்ட பாணியை மாற்றுங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிராக வெற்றிபெற்றபோது வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘உடற்பயிற்சி’ எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைப்பிடிக்கிறார்கள். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், ‘இது போல் நடந்து கொள்வது பாகிஸ்தான் மீது எதிர்மறை எண்ணத்தை உர…
-
- 0 replies
- 316 views
-
-
ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ? உற்சாகமாகத்தான் இங்கிலாந்து அணி இந்திய அணியை அதன் மண்ணில் எதிர்கொண்டது. புது உத்வேகத்துடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தம்மால் இந்திய அணியை மண்கவ்வ வைக்க முடியும் என்ற நம்பிக்கை முழுக்க முழுக்க இருந்தது. ஐந்து டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் தொடங்கியபோது, இங்கிலாந்து அணி தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 3 சதங்களுடன் இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களைத் தாண்டியபோது, இந்தியாவின் சுழல் பந்து வீச்சுக்கு என்ன ஆயிற்று?அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சதங்கள் தம் மண்ணில் அடித்து நொருக்கும் அளவுக்கு இந்தியாவின் அசத்தும் பந்து வீச்சுக்கு கண்திருஷ்டி விழுந்து விட்டதா என்ற கேள்வியையே பலரும் தமக்குள் கேட்டுக் கொண்டார்கள். இங்கிலாந்…
-
- 0 replies
- 365 views
-