விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்! உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெட…
-
- 0 replies
- 430 views
-
-
இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? : அப்ரிடி விளக்கம் இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். …
-
- 1 reply
- 429 views
-
-
குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, வேண்டும் என்றால் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்பொழுது இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தொடக்கம் அணியில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி அணிகளுக்கு வெவ்வேறு தலைவர்கள் நியம…
-
- 0 replies
- 429 views
-
-
விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடிய கோலி, இந்திய வீரர்கள் படம்: பிசிசிஐ பயிற்சி ஆட்டம் முடிந்து முதல் டெஸ்ட் போட்டிக்காக ஆன்ட்டிகுவா வந்த இந்திய அணியினர் தீவிர பயிற்சி அமர்வுக்கு முன்பாக மேற்கிந்திய முன்னாள் சூரர் விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடினர். ஒரு மாலைப்பொழுதை விவ் ரிச்சர்ட்ஸுடன் இந்திய அணி வீரர்களான கோலி, ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், ஸ்டூவர்ட் பின்னி, ரஹானே ஆகியோர் செலவிட்டனர். அந்தச் சந்திப்பின் போது விவ் ரிச்சர்ட்ஸ் இந்திய வீரர்களுக்கு நிறைய உற்சாகமூட்டினார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் அடித்த 4 டெஸ்ட் சதங்களை குறிப்பிட்டு விவ் ரிச்சர்ட்ஸ் அவரை பாராட்டி வாழ்த்தினார். மேலும் விராட் கோலியின் அதிரடி அணுகுமுற…
-
- 1 reply
- 429 views
-
-
ஃபிஃபா தயாரித்த முதல் படத்தை தியேட்டருக்கு பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆன…
-
- 0 replies
- 429 views
-
-
பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது அணிக்கு பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் தீர்மானித்தால், எந்தவொரு தயக்கமும் இன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிற…
-
- 0 replies
- 429 views
-
-
ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் - பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்து, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்துள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு பேர்போன இங்கிலாந்து அணி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் இந்திய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித்…
-
- 3 replies
- 429 views
- 1 follower
-
-
தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார் தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது, இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடருக்காக புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவரா…
-
- 1 reply
- 429 views
-
-
இந்தியா, தென் ஆப்ரிக்கா: சென்னையில் மோதல் கோல்கட்டா: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி நேற்று அறிவித்தது. இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்…
-
- 0 replies
- 429 views
-
-
விம்பிள்டன் 2021 ; பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் 2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஆம் நிலை வீரருமான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் மோதினர். 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 34 வயதான ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வ…
-
- 0 replies
- 429 views
-
-
கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார் விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இள…
-
- 0 replies
- 429 views
-
-
தென் ஆபிரிக்காவின் மூவகை கிரிக்கெட் அணிகளுக்கும் டு ப்ளெசிஸ் தலைவர் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணித் தலைவராக பவ் டு ப்ளெசிஸ் பதவி வகிக்கவுள்ளார். ஏ. பி. டி வில்லிர்ஸைத் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கடெ் அணியின் தலைவராக டு ப்ளெசிஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து இது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் அணித் தலைவராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவராக 2013 பெப்ரவரியிலிருந்தும் பவ் டு ப்ளெசிஸ் பதவி விகித்துவருகின்றார். 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா அணியைத் தலைவரா…
-
- 0 replies
- 429 views
-
-
ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் November 16, 2018 1 Min Read 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு …
-
- 0 replies
- 429 views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யா…
-
- 2 replies
- 429 views
-
-
LPL T20 2021 - ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது. ஜெப்னா கிங்ஸ் அணி சார்பாக திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஷோயப் மலிக் 47 ஓட்டங்களையும் பெற்றனர். கொழும்பு கிங்ஸ் சார்பில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கொழும்பு கிங்ஸ் அணியில்…
-
- 0 replies
- 429 views
-
-
முதலிடத்தில் ஜேர்மனி; இரண்டாமிடத்தில் பிரேஸில் பிரேஸிலிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றபோதும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தரவரிசையில், நடப்பு சம்பியன்களான ஜேர்மனி முதலிடத்தில் தொடரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ள புதிய இற்றைப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கவுள்ளதுடன், இரண்டாமிடத்தில் பிரேஸில் காணப்படவுள்ளது. இரண்டு அணிகளும் தமக்கிடையே முதலிடங்களை பரிமாறிய பின்னர் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மேற்குறித்தவாறு முதலாமிடத்தில் ஜேர்மனியும் இரண்டாமிடத்தில் பிரேஸிலும் காணப்படுகின்றன. இறுதியாக, இவ்விரண்டு அணிகளைத் தவிர்ந்த வேறொரு அணியாக, கடந்தாண்டு மார்ச்சில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலிர…
-
- 0 replies
- 429 views
-
-
தோனி கோபப்படுவார்... ஆனால் கேமரா இல்லாத போது: சுரேஷ் ரெய்னா பகிர்வு தோனி, ரெய்னா. - கோப்புப் படம். | சந்தீப் சக்சேனா. இந்திய அணிக்காக தோனியுடன் ஒருநாள் போட்டிகளில் பல வெற்றிக்கூட்டணிகளை அமைத்துள்ள சுரேஷ் ரெய்னா பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தோனியின் குணாதிசியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். “தோனி என்ன நினைக்கிறார், எண்ணுகிறார் என்பதைக் கணிப்பது கடினம், அவர் கண்கள் ஒன்றையும் வெளிப்படுத்தாது, நாம் சில வேளைகளில், ‘கொஞ்சம் உணர்ச்சியைத்தான் காட்டேன்’ என்று கூற வேண்டும் போல் தோன்றும். அவர் நிறைய முறை கோபமடைந்துள்ளார். ஆனால் கேமராவில் நீங்கள் பார்க்க முடியாது. கேமரா எப்போது ஆனில் இல்லை என்ற…
-
- 0 replies
- 429 views
-
-
டி வில்லியர்ஸ் ஒரு ஏலியனா? - சிறப்பு பதிவு தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100வது ஆட்டம் ஆகும். எந்த நாட்டை சேர்ந்த ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு டி வில்லியர்சை பிடிக்கும். யாராலும வெறுக்க முடியாத கிரிக்கெட்டரும் கூட. அதானல்தான் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று டி வில்லியர்ஸ் மைதானத்திற்குள் வந்த போது, அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்ததை காண முடிந்தது. ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கின…
-
- 0 replies
- 429 views
-
-
முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம் ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார். செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்ட…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது. . மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப் பட்டுள்ள நிலையில், இந்த பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.l…
-
-
- 4 replies
- 428 views
- 1 follower
-
-
Published By: Vishnu 06 Mar, 2025 | 10:05 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென். பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது. சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது. பொன் அணிகளின் …
-
-
- 4 replies
- 428 views
- 1 follower
-
-
எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…
-
- 0 replies
- 428 views
-
-
அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297
-
- 0 replies
- 428 views
-
-
சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…
-
- 0 replies
- 428 views
-
-
உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad - தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியி…
-
- 0 replies
- 428 views
-