விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
The names adorning just about every available spot on Indian luger Shiva Keshavan's speedsuit are written in faint gray letters, barely visible to those even nearby. They are not insignificant. For the Sochi Olympics, those names are essentially Keshavan's flag. "If I cannot represent the country," Keshavan said, "at least I can represent the countrymen." India is not officially at the Sochi Games, the nation suspended by the International Olympic Committee after it refused to ban corruption-tainted officials from running for elections. The suspension is expected to be lifted after new elections in the coming days, but likely not come in time for Keshavan and two other…
-
- 0 replies
- 620 views
-
-
டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! டி-20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளூர் அளவில் தற்போது டி10 போட்டிகள் நடைபெறும் அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், டி20 போட்டிகளின் வரவு டெஸ்ட் போட்டிகளை அழித்து விடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளைக் காண மைதானங்களுக்கு மிக குறைந்த அளவிலே மக்கள் வருகிறார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து பல்வேறு பரிந்துரைகள் வந்தது. அதில் முக்கியமான ஒரு பரிந்துரை, 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது. ஐ.சி.சி-யும் இதுகுறித்து ஆலோசித்து சோதனை அடிப்படையில் ந…
-
- 0 replies
- 314 views
-
-
செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் 'ராணிகளின் ராணி' ஜோனாதன் ஜுரேகோ பிபிசி ஸ்போர்ட் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 வெற்றிகளைப் பெற்ற அவருடைய 27 ஆண்டுக்கால தொழில்முறை டென்னிஸ் வாழ்வில் இதுவே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். நியூயார்க்கில் பரபரப்பான இரவில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிச்சிடம் தோல்வியடைந்த பிறகான உணர்ச்சிகரமான சூழலுக்கு நடுவே, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் ஆட்டதுக்கு விடை கொடுத்தார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ஸ்லாம…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காயத்தினால் வெளியேறும் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது. ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது. கேப்டன் மைக்கேல் கிளார்க் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார் விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இள…
-
- 0 replies
- 429 views
-
-
விராட்கோலி புதிய மைல்கல்; கேப்டன்ஷியில் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ? இங்கிலாந்துக்கு எதிராக சதம்அடித்த மகிழ்ச்சியில் விராட்கோலி - படம்உதவி: ட்விட்டர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது. …
-
- 0 replies
- 419 views
-
-
‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம் முதல் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் தோனி. | கெட்டி இமேஜஸ். ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது. 696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே. …
-
- 0 replies
- 559 views
-
-
மூன்று போட்டிகளையும் இழந்து 'வைட் வொஷ்' ஆனது இலங்கை இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் மூன்று தொடர்களையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்…
-
- 0 replies
- 664 views
-
-
கோஹ்லி மீது நடவடிக்கையா? கோல்கட்டா: களத்தில் அடிக்கடி கோபப்படும் கோஹ்லியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன், ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 26. களத்தில் பெரும்பாலும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இவர் தனது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, டிராவிட், அசார், ஸ்டீவ் வாக் (ஆஸி.,) உள்ளிட்ட வீரர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது, பத்திரிகையாளர் ஒருவரை தகாத முறையில் திட்டினார். இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கோஹ்லிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு…
-
- 0 replies
- 392 views
-
-
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை *விராத் கோஹ்லி ஆதரவு புதுடில்லி: அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,’) முறைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதை துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் பி.சி.சி.ஐ., என்ன செய்ய போகிறது என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கொண்டு வரப்பட்டது அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை. இதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பி.சி.சி.ஐ.,யின் அப்போதைய தலைவர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனியும் இதை கடுமையாக குறை கூறினர். இதனால் இந்தியா பங்கேற்கும் இரு நாடுகள் கொண்ட தொடர்களில் டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்…
-
- 0 replies
- 381 views
-
-
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/05/இங்கிலாந்து-அணியின்-துடுப்பாட்ட-ஆலோசகராக-மஹேல
-
- 0 replies
- 301 views
-
-
ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி! லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதிக்க கூடா…
-
- 0 replies
- 529 views
-
-
ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் குறும்பட்டியலில் ரொனால்டோ, மெஸி ஐரோப்பாவின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கான குறும்பட்டியலில் ரியல் மட்றிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோன வீரர் லயனல் மெஸி ஆகியோர் உட்பட பத்து வீரர்கள் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர். ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர் விருதை கடந்த வருடம் வென்றெடுத்த லயனல் மெசி இவ் வருடமும் அவ் விருதை வெல்வாரா என்பது உறுதியில்லை. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் ரியல் மெட்றிட் கழகம் 11ஆவது தடவையாக சம்பியனானபோது அதன் வெற்றியி…
-
- 0 replies
- 438 views
-
-
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனி…
-
- 0 replies
- 662 views
-
-
இங்கிலாந்தை வெல்ல முடியாமல் திணறும் பாகிஸ்தான்: 4-0 முன்னிலை அரைசத ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ, வின்னிங் ஷாட் அடித்த மொயீன் அலி. | படம்: ராய்ட்டர்ஸ். ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தி, தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லருக்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டதால் ஜானி பேர்ஸ்டோ அழைக்கப்பட்டார். இவர் தனது அழைப்பை நிரூபிக்கும் விதமாக 61 ரன்கள் எடுத்ததோடு பென் ஸ்டோக்ஸுடன் 103 ரன்கள் கூட்டணி அமைத்தார். பென் ஸ்டோக்ஸ் …
-
- 0 replies
- 510 views
-
-
பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா : வைத்தியசாலையில் அனுமதிப்பு (காணொளி இணைப்பு) உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11097
-
- 0 replies
- 443 views
-
-
அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். 38 டெஸ்ட்கள், 101 ஒருநாள் போட்டிகள், 45 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கொல்கத்தாவில் இன்று இந்தியா வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதில் 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பொறுப்பு கேப்டன் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அஸ்வின் தனது 400-வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 185 சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ஆடியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38…
-
- 0 replies
- 414 views
-
-
பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித…
-
- 0 replies
- 361 views
-
-
ஜானி பேர்ஸ்டோ - பேங்க்ராப்ட் ‘தலைமுட்டு’ சர்ச்சை: இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் காட்டம் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ். - படம். | ஏ.எஃப்.பி. பெர்த்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேங்கிராப்டை ‘பார்’ ஒன்றில் சந்தித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவரைத்தலையால் முட்டியதாக எழுந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் காட்டமாக கடிந்து கொண்டுள்ளார். அதுவும் பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலா…
-
- 0 replies
- 250 views
-
-
தோல்விக்குக் காரணம் சாஹலின் நோ-பால்: சுனில் கவாஸ்கர் விமர்சனம் யஜுவேந்திர சாஹல். - படம். | ஏ.பி. வாண்டரர்சில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு டேவிட் மில்லர் பவுல்டு ஆன சாஹலின் நோ-பால்தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சாஹல் நோ-பாலில் மில்லர் பவுல்டு ஆன போது அவரது தனிப்பட்ட ஸ்கோர் 7 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்பு முனை என்று நான் கருதுகிறேன். ஏ.பி.டிவில்லியர்சும் ஆட்டமிழந்து விட்டார், மில்லர் அப்போது சாஹல் பந்துகளைக் கணிப்பதில் திணறிக் கொண்டிருந்தார். இந்திய அண…
-
- 0 replies
- 352 views
-
-
விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை. …
-
- 0 replies
- 211 views
-
-
பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…
-
- 0 replies
- 289 views
-
-
மெஸி, ரொனால்டோ, எம்பாப்பே கோல் புகுத்தினர்: றியாத் அணியை 5:4 விகிதத்தில் பிஎஸ்ஜி வென்றது By SETHU 20 JAN, 2023 | 12:14 PM சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் - அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது. ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம் பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான் - படம்: ஏஎப்பி டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார். 4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் …
-
- 0 replies
- 660 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியான்டாட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை அழைத்தால் தான் அதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு தருணங்களில் மூன்று முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் மியான்டாட். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின் பயிற்சியாளர் தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. மே 15 ஆம் திகதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மியான்டாட் விண்ணப்பிக்கவில்லை. 124 டெஸ்ட் போட்டிகளில் 8832 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானி…
-
- 0 replies
- 827 views
-