விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மும்முனை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள்; ஒரு நாள் கிரிக்கெட் குழாமில் நரேன், பொலார்ட் 2016-05-20 11:42:47 அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் சுனில் நரேனும் கீரொன் பொலார்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேனும் சகலதுறை வீரர் கீரொன் பொலார்டும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. நடைபெறப்போகும் மும்முனைத் தொடருக்கான முதல் நான்கு போட்டிக…
-
- 0 replies
- 284 views
-
-
நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் 19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : சி குழுவில் இலங்கை, அட்டவணை வெளியீடு 19 Nov, 2025 | 07:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயம் இணை வரவேற்பு நாடுகளான ஸிம்பாப்வே, நமிபியா ஆகியவற்றில் நடத்தப்படவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் சற்று இலகுவான சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறும். போட்டியில் பங்குபற்றும் அணிகள் ஸிம்பாப்வே, நமிபியா நாடுகளை 2026 ஜனவரி 8ஆம் திகதி சென்றடையும். தொடர்ந்து 9ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெற…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ் வெற்றி மகிழ்ச்சியில் குரேஸ்மாவை கட்டித்தழுவும் ஆட்ட நாயகன் ரெனேட்டோ சான்சேஸ்.| படம்: ஏ.எஃப்.பி. யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார். சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்று…
-
- 0 replies
- 295 views
-
-
முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இணைவு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இன்று இணைந்துகொண்டார். முத்தையா முரளிதரன் இம்முறை போட்டித் தொடரின்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பிரிவின் ஆலோசகராக செயற்படுகின்றார். அவர் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது முரளி, அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு அலோசகராக செயற்பட்ட…
-
- 0 replies
- 475 views
-
-
தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. இந்தியாவில் இடம்பெற்றுவரும் முக்கிய ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் டெல்லி மற்றும் மகாராஸ்த்ரா மாநில அணிகளுக்கிடையிலான போட்டியில் புதிய இணைப்பாட்ட சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையின் சங்கா- மஹேல ஜோடி 3 வது விக்கெட்டில் 2005 ம் ஆண்டு இலங்கையில் வைத்து தென் ஆபிரிக்க அணிக்கெதிராக நிலைநாட்டிய 624 எனும் சாதனை இணைப்பாடடம், இன்றைய நாளில் முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் இறுதியில் தப்பித்துப் போயிருக்கிறது. இந்தியாவின் மகாராஸ்த்ரா மாநிலத…
-
- 0 replies
- 279 views
-
-
இங்கிலாந்தில் சங்கா மிரட்டல் இங்கிலாந்து துடுப்பாட்டக் கழகங்களுக்கு இடையில் நடைபெற்றுவரும் றோயல் லண்டன் கிண்ணத்துக்கான தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் சங்காவின் சிறப்பான செயற்படால் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் சர்ரே அணி வெற்றிபெற்றது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு (இலங்கை நேரப்படி) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்ரேயை எதிர்த்து மிடில்செக்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது சர்ரே அணி. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மிடில்செக்ஸ் அணி 9 இலக்குகள் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ராம்போல் 4 இலக்குகளை வீழ்த்தினார். பதிலுக்குக் களமிறங்கிய சர்ரே அணி சங்காவின் சிறப்ப…
-
- 0 replies
- 293 views
-
-
2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு: டு பிளிசிஸ் சூசக தகவல் இங்கிலாந்தில் 2019-ம் நடைபெறும் 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக டு பிளிசிஸ் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டு பிளிசிஸ். முன்னணி பேட்ஸ்மேன் பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கை வருகிறது சிம்பாப்பே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி இங்கு வரும் சிம்பாப்வே அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்லேகல ஆகிய மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணி தற்போது நாடு திரும்பி தங்களின் வழக்கமான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சிம்பாப…
-
- 0 replies
- 511 views
-
-
டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்! ஆறிலிருந்து அறுபது வரை மட்டுமல்ல, தள்ளாடும் தாத்தாக்கள் வரை கிரிக்கெட் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உலக கிரிக்கெட் அரங்கிலேயே மிகவும் செல்வாக்குடைய, மிகுந்த செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் போர்டு இந்தியாவினுடையது என்றால் அதற்கு இந்திய ரசிகர்கள் தரும் பேராதரவு தான் காரணம். ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரர்களின் ஆட்டத்திறன் மட்டுமல்ல, நடுவர்கள் தரும் தீர்ப்புகளும் தான் என்றால் மறுப்பதற்கில்லை. நடுவர்கள் தரும் தவறான தீர்ப்புகள் பலமுறை ஆட்டத்தின் முடிவையே மாற்றி இருக்கின்றது! இது இயல்புதான் என்றாலும், இந்த தவிர்க்க முடியாத மனிதப் பிழைகளை சரிக்க…
-
- 0 replies
- 370 views
-
-
ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வருகை - இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட் சீசன் இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த…
-
- 0 replies
- 319 views
-
-
அதிசிறந்த காற்பந்தாட்ட வீரர் தெரிவுக்கு போட்டியிடும் மூவர் உலக காற்பந்தாட்ட சம்மேளனம் , இந்த வருடத்துக்கான அதி சிறந்த காற்பந்தாட்ட வீரரைத் தெரிவு செய்ய மூவரைப் பொறுக்கி இருக்கின்றது . இந்தத் தெரிவு விபரம் , கடந்த வெள்ளியன்று FIFA வினால் இலண்டனிலிருந்து அறிவிக்கப்பட்டது . இந்த மூவர் பெயர்ப் பட்டியலில் 25 வயதான பிரேசில் சுப்பர் ஸ்டார் நெய்மர், 32 வயதான போத்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ , 30 வயதான ஆர்ஜென்டீனிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள் . பார்சலோனா கழகத்துக்காக விளையாடிய நெய்மர் , காற்பந்தாட்ட சரித்திரத்தில் சாதனை படைக்கும் 266 மில்லியன் டொலர் தொகைக்கு , பாரிஸ் கழகமொன்றினால் …
-
- 0 replies
- 378 views
-
-
FIFA உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிக் கட்டப் போட்டிகள் எவ்வாறு இருக்கும்? கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. …
-
- 0 replies
- 434 views
-
-
வியக்க வைக்கும் கிராமத்து பாடசாலையின் சாதனை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர். ஒழுங்கான மைதானம் கூட இல்லாமல் தேசிய மட்டத்தில் துணுக்காய் வலயப் பாடசாலையான கோட்டைக்கட்டியகுள அ.த.க பாடசாலை எறிபந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது. துணுக்காயில் இருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலும் கிளிநொச்சி அக்கராயனில் இருந்து பத்து கிலோமீற்றரிலும் போக்குவரத்துகள் அற்ற கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோட்டைக்கட்டியகுளம் அ.த.க பாடசாலை தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் பெறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை கோட்டைக்கட்டியகுளம் பாடசாலை எறிபந்து அணியினர் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்று ப…
-
- 0 replies
- 541 views
-
-
கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை. அர்ஜென்டினா மக்களுக்க…
-
- 0 replies
- 427 views
-
-
ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ) கேப்டன் கூல் என்று பெயர் வாங்கிய தோனி கோபமடைந்து, சக வீரர்களைக் கடிந்துகொண்ட காட்சியைப் பார்த்ததுண்டா? நேற்று அத்தகைய காட்சி ஒன்றைக் காண நேர்ந்த ரசிகர்கள், தோனியா இது என ஆச்சர்யப்பட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 0 replies
- 443 views
-
-
சாதனை படைத்தார் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய சர்வதேச சாதனையை படைத்துள்ளார். இச் சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது டி கொக் படைத்தார். இதில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டி கொக் 5 பிடியெடுப்புக்களையும் ஒரு ஸ்டம்பிங் என்று அசத்தினார். இதன் மூலம் 27 போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய விக்கெட் கீப்பிங் சாதனை புரிந்தார். மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேகப்ஸ், இங்கிலாந்தின் ஜெரைண்ட் ஜோன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 30 ஒருநாள் போட்டிகளிலேயே 50 பேரை ஆட்டமி…
-
- 0 replies
- 468 views
-
-
இந்தியா – மே.தீவுகள் T20 : இந்தியா 5 விக்கட்டுகளால் வெற்றி! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற 20 க்கு 20 போட்டியில் இந்திய அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைச் தெரிவு செய்தது. இதன்படி, துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஃபெப்பியன் எல்லன் 27 ஓட்டங்களையும், கே.எம்.ஏ.போல் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன், கே.ஏ.பொல்லாட் மற்றும் எஸ்.டி.ஹோப் ஆகியோர் தலா 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ்…
-
- 0 replies
- 712 views
-
-
பங்களாதேஷின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக் கப்டன் பதவியிலிருந்து ஹபிபுல் பஷார் ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரு போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஹபிபுல் பஷார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹபிபுல் பஷார் கூறியதாவது: ஒரு நாள் போட்டிக்கான அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதே நேரத்தில் அணியின் வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பங்களாதேஷ் அணியின் கப்டனாக இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. …
-
- 0 replies
- 810 views
-
-
ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்! நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 511 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் கடந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 366 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரச்சின் ரவீந்திரா தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெ…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
விஜய் சங்கர்: "இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது எனது கனவின் முதல்படி" சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசி…
-
- 0 replies
- 804 views
- 1 follower
-
-
கவாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை ஐ.சி.சி. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு [28 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய முன்னாள் கப்டனும் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) அதிகாரியுமான சுனில் கவாஸ்கருக்கு எதிராக ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கவுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் சைமண்ட்சை இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கிய ஐ.சி.சி. போட்டி நடுவர் மைக்புரோக்டர், வெள்ளைக்காரர்களின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டுள்ளார். பழுப்பு நிறத்தவர்களின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்று முன்னாள் கப்டன் கவாஸ்…
-
- 0 replies
- 821 views
-
-
SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை By Mohamed Arshad - தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு கொண்ட மாலைத்தீவு அணியுடனான முதலாவது போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவு செய்துள்ளது. நேபாளத்தில் இடம்பெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (02), கால்பந்து ஆட்டமும் ஆரம்பமாகியது. கத்மண்டு டசரத் அரங்கில் இடம்பெற்ற முதல் மோதலில் இலங்கை – மாலைத்தீவு அணிகள் மோதின. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான இந்த போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான சுஜான் பெரேரா, மொஹமட் பசால் ம…
-
- 0 replies
- 417 views
-
-
கிளாடியோ ரனேரி... சொல்லி அடித்த கில்லி! - லெய்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக்கதை “நம் அணியின் இன்றைய தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். நமது அணிக்கு அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் ஒரு பயிற்சியாளரை நியமித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சுமார் இரண்டு ஆண்டுகள் முன்னர் கூறினார் கிரீஸ் கால்பந்துக் கழகத் தலைவர் ஜியார்கோஸ் சர்ரிஸ். கால்பந்து தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஃபரோ ஐலாண்டு அணியிடம், 2004 ல் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸ் தோற்ற பிறகு அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். மொத்த கால்பந்து உலகமும் அதை ஆமோதித்தது. ஆனால் சரியாக 18 மாதங்கள் கழித்து, அன்று கிரீஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அதே பயிற்சியாளர்தான் இன்று மொத்த கால்பந்து உலகத்தாலும் ம…
-
- 0 replies
- 449 views
-
-
Published By: Vishnu 24 Sep, 2025 | 07:22 PM (நெவில் அன்தனி) பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார். பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவில் அதி சிறந்த வீர…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
அஸ்டன் வில்லாவை வாங்குகிறார் சீனர் அஸ்டன் வில்லா கால்பந்தாட்டக் கழகத்தை, சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்குவதற்குச் சம்மதித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது. 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்குவதற்கே அவர் சம்மதித்துள்ளார். கலாநிதி டொனி ஸியா என்ற அந்த சீனத் தொழிலதிபர், இக்கழகத்தை வாங்குவதற்கான அனுமதி, கால்பந்தாட்ட லீக்கினால் வழங்கப்பட்டவுடன், இந்த விற்பனை உத்தியோகபூர்வமாகும். 2006ஆம் ஆண்டில் 62.2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு அஸ்டன் வில்லா கழகத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரரான றன்டி லேர்னர், அக்கழகத்தை விற்பனை செய்யவுள்ளதாக 2014ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார். குறிப்பாக, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் இம்…
-
- 0 replies
- 419 views
-