விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்…
-
- 0 replies
- 678 views
-
-
தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார்.…
-
- 0 replies
- 561 views
-
-
லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…
-
- 0 replies
- 464 views
-
-
சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=95464
-
- 0 replies
- 311 views
-
-
டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …
-
- 0 replies
- 247 views
-
-
முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. - படம்: ஏஎப்பி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எட…
-
- 0 replies
- 151 views
-
-
வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில் இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. …
-
- 0 replies
- 643 views
-
-
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: October 25, 2018 அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில்; முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 156 னெற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஅவுஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 89 ஓட்டங்களை மாத்திரN ம பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இ…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி November 9, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. எனினும் இரண்டா…
-
- 0 replies
- 437 views
-
-
கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …
-
- 0 replies
- 979 views
-
-
‘இங்கிலாந்துக்கான சாதனை என்பது கனவு நனவானது போலாகும்’’ இங்கிலாந்து அணிக்கான சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற சாதனைக்கு தற்போதைய அணித் தலைவர் வெய்னி றூனி சொந்தக்காரரானார். சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற யூரோ கிண்ண 2016 தகுதிகாண் போட்டியில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்டதன் மூலம் தனது 50ஆவது சர்வதேச கோலை றூனி பதிவு செய்து சேர் பொபி சார்ள்டனின் 49 கோல்கள் என்ற சாதனையை முறியடித்தார். சுவிட்ஸர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 2 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தது. வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் 82ஆவது நிமிடத்தில் இங்கி…
-
- 0 replies
- 361 views
-
-
தேசிய மட்ட கபடிப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. 15 வயது பிரிவில் கிளிநொச்சி சிவபுரம் அ.த.க பாடசாலை முதலிடத்தினையும், 19 வயது பிரிவில் கிளிநொச்சி இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் புகழ் தேடி தந்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி 19 வயது பிரிவு மாணவர்கள் திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டியில் அனுராதபுரம் மக்குளாவ மகாவித்தியாலயத்தை எதிர்த்து தேசிய மட்டத்திற்கான இறுதிப்போட்டியில் போட்டியிட்டு பத்திற்கு இருபது எனும் விகிதத்தில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டியில் பிரகாசித்த இரு வீரர்களான க.தசப்பிரியன், எஸ்.சிவராஜ் ஆகியோர் தேசிய கபடி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறி…
-
- 0 replies
- 254 views
-
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 382 views
-
-
'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…
-
- 0 replies
- 209 views
-
-
என்னிடம் வெள்ளைச் சீருடை கைவசம் உள்ளது: கிறிஸ் கெயில் சூசகம் 2015 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் பந்தை அடித்து நொறுக்கும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்ல…
-
- 0 replies
- 426 views
-
-
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…
-
- 0 replies
- 459 views
-
-
செம சேஸ்...கோலியின் ரேஸ்! டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில், உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்து…
-
- 0 replies
- 777 views
-
-
தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…
-
- 0 replies
- 571 views
-
-
மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்ட…
-
- 0 replies
- 459 views
-
-
வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…
-
- 0 replies
- 441 views
-
-
ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…
-
- 0 replies
- 403 views
-
-
-
- 0 replies
- 703 views
- 1 follower
-
-
டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது ஆண்டு 24.08.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நோர்வேயில் இருந்து 2 அணிகளும் பிரித்தானியாவில் இருந்து 1 அணியும் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர்: 1ம் இடம்: Vejle 2ம் இடம்: Grindsted 3ம் இடம்: Middel…
-
- 0 replies
- 522 views
-
-
காதலியின் முத்தத்தால் ஊக்கமருந்து தடைக்குள்ளான வீரர் காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சம்பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் ஓட்டப் பந்தய வீரரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளாரா என்பதை பரிசோதனை செய்வதற்காக அவரிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்-ஐ பயன்படுத்தியமை தெரியவந்தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திகதியிலிருந்…
-
- 0 replies
- 560 views
-
-
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா? இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்து வாழும் பலர் அந்நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேள்வியுற்றுள்ளோம். கல்வி, வியாபாரம் போன்ற துறைகளில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த பலர் முன்னேற்றம் கண்டு உலகின் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அதேபோல அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தை ஜொலிக்கச் செய்து வருகின்றமையையும் காணமுடிகின்றது. விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, …
-
- 0 replies
- 827 views
-