விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
$100 மில்லியன் பரிசு பெறப்போகும் முதல் வீரர் யார் December 27, 2015 டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பணம் பரிசாக பெறும் வீரர்களில் முதல் இரண்டு இடங்களுக்கு சுவிஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெடரர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 17 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள பெடரர் இதுவரை பரிசு மூலம் 97.3 மில்லியன் டொலர் பணம் சம்பாதித்துள்ளார். அதே போல், கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிக், 94 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். இந் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியின் வெற்றிய…
-
- 0 replies
- 504 views
-
-
கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் December 27, 2015 இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான விராக் மேர் தொடர்ந்து 50 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா லத்துரை சேர்ந்த விராக் மேர், கர்வே நகரில் உள்ள மகாலட்சுமி மைதானத்தில் கடந்த 22ம் திகதி காலை 9.30 மணிக்கு தனது பயிற்சியை ஆரம்பித்தார். இடைவிடாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அவர் டிசம்பர் 24ம் திகதி காலை 9.30 மணி வரை துடுப்பெடுத்தாடினார். 48 மணி நேரம் பயிற்சி செய்த அவர் கூடுதலாக 2 மணி நேரம் பயிற்சி செய்து பயிற்சிக்காலத்தை 50 மணி நேரமாக நீட்டித்துள்ளார். ஐந்து மணி நேரம் இடைவிடா பயிற்சிக்கிடையில் 25 நிமிடங்கள் ஓய்வு எடுத்துள்ளார். மொத்தாக அவர் 50 மணி நேரம், …
-
- 0 replies
- 600 views
-
-
ஆஸியின் சார்பாக 1000 சதங்கள் December 27, 2015 ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா சார்பாக பேர்ண்ஸ், கவாயா இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை இவர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் மூன்று வீரர்கள் இந்த ஆண்டில் மட்டும் 14 சதங்களை விளாசியுள்ளனர். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு இதேபோல் 14 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4020 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கவாஜா கடைசி நான்கு இன்னிங்சில் 448 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 149.33 ஆகும். அதற்கு முன்னர் 17 இன்னிங்சில் 377 ஓட்டங்கள…
-
- 1 reply
- 717 views
-
-
இந்த வருடத்தில் 1700 கோடிகள் சம்பாதித்த பெக்காம் December 27, 2015 இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமும் அவரது மனைவியும் இணைந்து இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1700 கோடிகளை சம்பாதித்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. பெக்காம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். குறிப்பாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்னரும் பெக்காமுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்தாட்டத்தில் சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா பெஷன் டிசைனராக உள்ளார்…
-
- 0 replies
- 443 views
-
-
தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம் கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது. "பாக்ஸிங் டே'வில் தொடங்கும் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட…
-
- 22 replies
- 1.6k views
-
-
இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்…
-
- 5 replies
- 792 views
-
-
சிக்ஸர் சிங்கம்! ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங…
-
- 1 reply
- 852 views
-
-
தரவரிசையில் முன்னேறுவதற்கான தொடரில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன 2015-12-25 12:42:12 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முன்னேறும் நோக்குடன் நியூஸிலாந்தும் இலங்கையும் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத தயாராகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டம்வரை முன்னேறி உலக சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கின்றது. இந்தத் தொடரில் 4 :…
-
- 0 replies
- 391 views
-
-
பொக்ஸிங் டே கொண்டாட்டம்: நாளை நான்கு போட்டிகள் கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாளான 'பொக்ஸிங் டே"இல், கிரிக்கெட் போட்டிகளும் களைகட்டவுள்ளன. நான்கு போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்தை, அந்நாட்டில் வைத்துச் சந்திப்பதால், வெற்றிபெறுவதற்கு, அதிகமாகப் போராடி வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால…
-
- 0 replies
- 469 views
-
-
குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையால் இதுவரை, இது உறுதிப்படுத்தப்படவில்லை. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள…
-
- 0 replies
- 314 views
-
-
2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…
-
- 0 replies
- 510 views
-
-
சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…
-
- 0 replies
- 393 views
-
-
சர்வதேச டென்னிஸ் சம்மேளன சம்பியன்களாக இவ்வருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் வருடத்தின் டென்னிஸ் சம்பியன்களாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக இவ் விருதை வென்றுள்ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களுடன் மொத்தமாக 11 சம்பியன் பட்டங்கள…
-
- 0 replies
- 562 views
-
-
ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த டோனி December 24, 2015 விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் டோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் கீப்பரான டோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன்…
-
- 0 replies
- 585 views
-
-
2015 விளையாட்டு உலகம்! 2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே... கிரிக்கெட் 2015 கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது. > ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார…
-
- 1 reply
- 891 views
-
-
தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…
-
- 0 replies
- 461 views
-
-
கதறி அழுத ரசிகைக்கு ஆறுதல் கூறிய கோலி December 24, 2015 இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலியை ரசிகை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் மும்பை வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற கோலி இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக ரசிகைகளும் உள்ளனர். இந்த நிலையில் ‘வொர்கன் பேஸன்’ நிறுனத்தின் தூதுவராக உள்ள கோலி நிறுவனம் ஒரு வருடத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவர் கோலியை திடீரென்று கட்டியணைத்துக் கொண்ட…
-
- 0 replies
- 572 views
-
-
U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…
-
- 30 replies
- 3.1k views
-
-
இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…
-
- 0 replies
- 566 views
-
-
சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…
-
- 0 replies
- 446 views
-
-
பதின்மூன்று ஓவர்களில் பத்து விக்கெட்களை இழந்தமை எண்ணிப்பார்க்க முடியாத வீழ்ச்சி என்கிறார் மெத்யூஸ் 2015-12-24 10:56:33 நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 13.4 ஓவர்களில் பத்து விக்கெட்களை இழந்தமை எண்ணிப்பார்க்க முடியாத மிக மோசமான வீழ்ச்சி என அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பத்து விக்கெட்களும் கைவசமிருக்க 126 ஓட்டங்களால் முன்னிலையில் இலங்கை இருந்தது. ஆனால், அடுத்த 82 பந்துகளில் பத்து விக்கெட்களைய…
-
- 0 replies
- 475 views
-
-
ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613
-
- 0 replies
- 380 views
-
-
நட்சத்திர வீரர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது: மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஆதங்கம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது. அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 451 views
-
-
முதல் 15 ஓவர்களில் 3 விக். அவசியம்: ஆஸி.யை வீழ்த்த கபிலின் வியூகம் ஜனவரி மாதம் ஆஸ்திரேவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முட…
-
- 0 replies
- 638 views
-
-
பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல் ஹர்ஷா போக்ளே | படம்: பாக்ய பிரகாஷ் தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் த…
-
- 2 replies
- 547 views
-