Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம் கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார். ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்ட…

  2. 16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …

  3. சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…

  4. அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை- முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இ…

  5. களத்தில் நிலைத்து நிற்கும் இலங்கை: விக்கெட்டுகளை தகர்த்தெறிவதில் நியூசிலாந்து தடுமாற்றம் இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் சுரங்க லக்மால் 16 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ்ட்சேர்ச்சில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வே…

  6. சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டெனிஸ் அணியில் ஷரபோவா இல்லை? [25 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் டெனிஸ் அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று மரியா ஷரபோவா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், ரஷ்ய டெனிஸ் அணித் தலைவர் ஷமீல் தர்பிஷசேவ் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பார்க்கும்போது அது சாத்தியம் இல்லையென்ற சந்தேகம் ஏற்படுகிறது. இத்தாலியை எதிர்த்து செப்டெம்பர் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பெடரேஷன் கிண்ண டெனிஸ் அணியில் மரியா ஷரபோவா இடம்பெறுவது சந்தேகமே என்று கூறிவிட்டார் அணித் தலைவர் தர்பிஷசேவ். கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிராக அரையிறுதி டெனிஸ் போட்டி தொடங்குவதற்கு ம…

    • 0 replies
    • 844 views
  7. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…

  8. பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…

  9. வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…

  10. பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…

  11. பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…

  12. தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்! கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது. பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத்…

  13. இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…

  14. ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770

    • 0 replies
    • 406 views
  15. இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து! By A.Pradhap - சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி, தொடரில் 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் இரு போட்டிகளிலும் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் இன்று நெல்சனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இறுதிக் கட்டத்தில் போட்டியை தம்சவப்…

    • 0 replies
    • 420 views
  16. இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…

  17. 50 ஓவர் போட்டியில் 306 ஓட்டங்கள் குவித்த வீரர் 2016-02-22 21:33:25 இந்­தி­யாவின் மஹா­ராஷ்­டி­ராவைச் சேர்ந்த மற்­றொரு கிரிக்கெட் வீர­ரான பிரித்தம் பட்டில், ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 306 ஓட்­டங்­களைக் குவித்து சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார். மும்­பையைச் சேர்ந்த பிரணவ் தன்­வாடே கடந்த மாதம் ஆட்­ட­மி­ழக்­காமல் 1009 ஓட்­டங்­களைக் குவித்து ஒரே இன்­னிங்ஸில் 1000 ஓட்­டங்­களைப் பெற்ற முதல் வீரர் என்ற உலக சாத­னைக்கு சொந்­தக்­கா­ர­ரா­கி­யி­ருந்தார். இப்­போது அவ­ரது மாநி­லத்தைச் சேர்ந்த மற்­றொரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 300 ஓட்­டங்­களைக் கடந்த முத­லா­வது வீரர் என்ற சாத­னையை நிலை­நாட்­டி­யுள்ளார்.…

  18. ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி By Mohamed Azarudeen - நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியான் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் செயற்படவுள்ளார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார். இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஐ…

    • 0 replies
    • 405 views
  19. போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ! “ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது. ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்! கால்பந்தைத் தவிர்த்து வேறு …

  20. புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதி­முறை நாளை நடை­பெ­ற­வுள்ள தென்­னா­பி­ரிக்க -–- அயர்­லாந்து மோதும் ஒருநாள் போட்­டியில் இருந்து அமு­லா­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்­றங்­களை செய்து அறி­வித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறும் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் எச்­ச­ரிக்கை, அப­ராதம் மற்றும் இடை­நீக்கம் ஆகிய விதி­களில் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை. …

  21. இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…

  22. சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…

  23. அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…

  24. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி தொடர்ந்து 9-வது வெற்றியை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முன்னணி கிளப் அணியான செல்சியா வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் அணியை எதிர்கொண்டது. இதில் 1-0 என செல்சியா வெற்றி பெற்றது. அந்த அணியின் டியகோ கோஸ்டா 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளு…

  25. மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.