Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மெஸ்சி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி அ-அ+ இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi மும்பை: கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. …

  2. யூரோ 2024!...ஜேர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது. இந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் இன்று சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது. 2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/europe/80/106766

  3. சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி! சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம், சிட்டங்கொங் மை…

  4. இலங்கை கிரிக்கெட் மோசடி குறித்து புதிய தகவல்கள் January 23, 2019 இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தகவல்வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் தான் ஊக்கமடை…

  5. 236 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த குப்தில்- லாதம் ஜோடி! ஒருநாள் போட்டியில், 236 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் சேஸ் செய்து நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குப்தில் 116 ரன்களும், லாதம் 110 ரன்களும் அடித்து இந்த புதிய சாதனை நிகழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 303 ரன்களை ஜிம்பாப்வே அணி சேஸ் செய்து எளிதாக வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களை எடுத்தது. இதனை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களே அடித்து முடித்து விட்டனர். இதனால் நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் ஒரு ஜோட…

  6. ஃபிஃபா: தடையை நீக்கக் கோரிய பிளாட்டினி மேன்முறையீட்டில் தோல்வி செப் பிளாட்டர், மிஷேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மிஷேல் பிளாட்டினி, தன் மீது விதிக்கப்பட்டிருந்த 90-நாள் இடைக்காலத் தடையை தளர்த்துமாறு தொடுத்திருந்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அதேநேரம் அந்தத் தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை தொடர்பான நடுவர் தீர்ப்பாயம் ஃபிஃபா அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான ஃபிஃபா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவரும் சூழலில், அதன் தலைவர் செப் பிளாட்டருடன், 60 வயதான பிளாட்டினியும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். …

  7. கதறி அழுத ரசிகைக்கு ஆறுதல் கூறிய கோலி December 24, 2015 இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலியை ரசிகை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் மும்பை வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற கோலி இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக ரசிகைகளும் உள்ளனர். இந்த நிலையில் ‘வொர்கன் பேஸன்’ நிறுனத்தின் தூதுவராக உள்ள கோலி நிறுவனம் ஒரு வருடத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவர் கோலியை திடீரென்று கட்டியணைத்துக் கொண்ட…

  8. நாடு நாடாக போய் வதம் செய்தவர்கள் வதம் செய்யப்படுகிறார்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டிலேயே உதை வாங்கி¢க் கொண்டிருக்க, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அனைத்து அணிகளையும் அந்தந்த நாடுகளின் சொந்த மண்ணிலேயே சென்று வதம் செய்வது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வழக்கம். அப்படிப்பட்ட அணிக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய பின்னடைவாய் அமைந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்ரிக்க அணிக்கு கடந்த ஆண்டில் செம அடி£தான். இந்த ஆண்டு, தென்ஆப்ரிக்க அணி விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நான்கு போட்டுகளில் அந்த அணி படுதோல்வி கண்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய…

  9. நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3) சிறந்த வீரர்கள், அமைதியான வீரர்கள், வசை சொற்கள் வீசாத ஜென்டில்மேன்கள், அதிரடியும் ஆக்ரோஷமும் கொண்டவர்கள், சிக்ஸர் பிரியர்கள், ஆவேச வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் அணி, நியூசிலாந்து. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நியூசிலாந்துக்கு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு முறை கூட ஐ.சி.சி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை நியூசிலாந்து வென்றதே இல்லை. பிரண்டன் மெக்குல்லம், ஷேன் பாண்ட், டேனியல் வெட்டோரி என கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னரா…

  10. மெஸ்ஸி காயத்தால் அர்ஜென்டினா கவலை தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் வரும் 3-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சிலி, 14 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டி தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் காயத்தால் அர் ஜென்டினா அணி நிர்வாகம் மிகுந்த கவலையடைந்துள்ளது. முதல் முறையாக மெஸ்ஸி இந்த தொடரில் கேப்டனாக செயல்பட இருந்தார். கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற மெஸ்ஸி எதிரணி வீரர் மீது மோதியதில் கா…

  11. இந்திய பேட்டிங் குறித்த ஹர்பஜனின் ஜோக்: பகிர்ந்து கொண்ட முரளி கார்த்திக் இர்பான் பத்தான், ஹர்பஜன், முரளி கார்த்திக். | கோப்புப் படம்: வி.கணேசன். இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் ஹர்பஜன் சிங் என்று கூறப்படுவதுண்டு. சக வீரர்கள் பற்றியும் சில வேளைகளில் அணி பற்றியுமே அவர் தனது நகைச்சுவைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதேபோல் அவர் மற்ற வீரர்கள் போல் அப்படியே மிமிக்ரி செய்வதிலும் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு. 2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 21…

  12. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தியை நோக்காக கொண்டு திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் கடந்த 9 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நோமன்ட்ஸ் மற்றும் ஜோஸ் விளையாட்டு கழகம் ஆகியன பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோமன்ட்ஸ் கழகம் முதலில் துடுப்பாட முடிவு செய்தது. …

  13. ஆட்டமிழக்காத உறுதி: புதிய சாதனை ஒன்றை உருவாக்கிய கிரெய்க் பிராத்வெய்ட் ஷார்ஜா டெஸ்ட் நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட் பரிசு பெறும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட். ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் …

  14. இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டிய தருணத்தில், 'அவ்ளோ சீக்கிரம் விட்ர மாட்டோம் கண்ணுகளா' என கெத்தாக ஜெயித்து நிமிர்ந்திருக்கிறது இந்தியா. அணியின் வெற்றிக்கு அதிமுக்கிய காரணம் பும்ராவின் அந்த மேஜிக் ஓவர். தான் பதிவியேற்ற முதல் தொடரையே தோல்வியுடன் துவங்கியிருக்க வேண்டிய கோஹ்லிக்கு, டிவிஸ்ட் கொடுத்து மேட்ச்சை ஜெயிக்க வைத்து டி20 தொடரை உயிர்ப்புடன் வைக்க உதவியிருக்கிறது நெஹ்ரா - பும்ரா இணை. யார் இந்த பும்ரா ? குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தவர் பும்ரா, ஆனால் சீக்கிய வம்சத்தை சேர்ந்தவர். ஜாஸ்பிட் பும்ராவின் முழு பெயர் ஜாஸ்பிட் ஜாஸ்பிர் …

  15. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் திகழ்கிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 42 வயதாகும் ஹாட்ஜ், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்கவுள்ளார். …

  16. இரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!!! இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின்…

  17. காமன்வெல்த்தில் பரபரப்பு: 2 இந்திய விளையாட்டு துறை நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது. கிளாஸ்கோ:இந்திய விளையாட்டு துறையின் இரு முக்கிய நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நிலையில் இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ்மேத்தா மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான நடுவரான வீரேந்திர மாலிக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அறிவித்துள்ளது. இதில் ராஜிவ்மேத்தா, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், வீரேந்திர மாலிக், பாலியல் சீண்டல் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைய …

  18. உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஐரோப்பிய நடப்பு சம்பியன்களான இன்ரர் மிலான் வெற்றிபெற்று, உலக சம்பியன் அணியாக தெரிவானது. ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ நாட்டைச் சேர்ந்த ரி.பி.மசம்பி அணியும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இன்ரர் மிலான் அணியும், நேற்றைய நாள் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, 3 ற்கு 0 என்ற கோல்களின் அடிப்படையில், இன்ரர் மிலான் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. http://www.youtube.com/watch?v=tpb4H6UOIU0

    • 0 replies
    • 624 views
  19. ஏமாற்றி, மோசடி செய்வதுதான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையா? ஸ்டீவ் ஸ்மித் - REUTERS ப ந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. சரி, பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும், அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும் என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே தோலுரித்து காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்ற…

  20. செய்தித்துளிகள்: டி 20 ஆட்டங்களுக்கு சர்வதேச அந்தஸ்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை உலகக் கோப்பை டி 20 தொடராக நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. 50 ஓவர் வடிவிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே கலந்து கொள்ளும். இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடராக நடத்தப்படுவதால் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்ளும் …

  21. கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரும் அதிரடி பாக். ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்: மறக்க முடியாத சாதனைகளில் சில... அப்துல் ரசாக். - கோப்புப் படம். | ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் 38 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். குவைத்-இ-ஆஸம் ட்ராபிக்கான கிரிக்கெட் தொடரில் ரசாக் ஆடவிருக்கிறார், இதன் மூலம் பாகிஸ்தான் சூப்பர் லீகிற்கு திரும்ப உத்தேசித்துள்ளார் ரசாக். இவர் ஓய்வு பெறவில்லை, வாய்ப்புகள் இல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து மறைந்து போனார். 2013-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டி20யில் ஆடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் 20…

  22. அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள் கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம். ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு, 1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல், 2018) பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ க…

  23. தொடர் தோல்வி – ரியல் மாட்ரிட் தலைமை பயிற்சியாளர் நீக்கம்! தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கபட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணி, உலகிலேயே மிக பிரபலமான கிளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது. அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அத்துடன் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிரடியான யுவான்டஸ் அணிக்குச் சென்றார். அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்…

  24. இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்இ புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கங்குலி இந்திய அணியின் தலைவராக இருந்தபோது, சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை படைக்க உதவினார் என்பதுகுறிப்பிடத் தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0…

  25. கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் இவங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க? சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகையே வென்ற கிரிக்கெட் வீரர்களாக பலர் உருவெடுத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்... இந்திய அணியின் கேப்டன் தோனி, ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் கராக்பூர் ரயில் நிலையத்தில்தான் தோனிக்கு பணி. கடந்த 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய தோனி, அதற்கு பின் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கால் வைக்காத விளையாட்டே கிடையாது. கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், ரக்பி என அனைத்து விளையாட்டுகளையும் ஒரு கை பார்த்து விட்டு கடைசியில் கிரிக்கெட்டில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.