விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855
-
- 0 replies
- 378 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள…
-
- 4 replies
- 378 views
-
-
கால்பந்தாட்டத்தில் வட மாகாணத்திற்கு வெள்ளிப் பதக்கம் முன்னாள் இலங்கை வீரர் ஈ. பி. சன்னக்கவின் புத்திசாதுரியமான ஆற்றல்களின் உதவியுடன் வட மாகாண அணியை 3 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட தென் மாகாண அணி 40ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கால்பந்தாட்டத் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது. 2009இலும் 2012இலும் தங்கப் பதக்கத்தைத் தவறிவிட்ட வட மாகாணம் இவ்வருடமும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது. ஞாயிறன்று மின்னல் மற்றும் கடும் மழை காரணமாக 8 நிமிடங்களுடன் இடைநிறுத்தப்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நேற்றுக்காலை 10.10 மணியளவில் மீண்டும் தொடர்ந்தது. இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக 22ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ட…
-
- 0 replies
- 378 views
-
-
இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட அலாஸ்டர் குக்கின் இடத்துக்கு ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பல சிரேஷ்ட வீரர்கள் இருக்கின்ற போதும் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அலாஸ்டர் குக். 2012ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற குக் 59 போட்டிகளில் தலைவராக இருந்துள்ளார். இந்த காலப் பகுதியில் 2 ஆஷஸ் தொடர்கள் உட்பட பல தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் வி…
-
- 0 replies
- 378 views
-
-
ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…
-
- 0 replies
- 378 views
-
-
விபத்தில் வீரர்களை இழந்த அணிக்காக விளையாடுகிறார் ரொனால்டினோ! விமான விபத்தில் 19 வீரர்களைப் பறிகொடுத்த சபிகோயன்ஸ் அணிக்காகப் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ விளையாடப் போகிறார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ, அந்த அணியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த சபிகோயன்ஸ் அணி கடந்த 1973-ம் ஆண்டு உருவானது. பிரேசிலின் சிறிய நகரமான சபிகோவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இரு நாட்களுக்கு முன், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், பங்கேற்பதற்காகக் கொலம்பியாவின் மெட்லீன் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்…
-
- 1 reply
- 378 views
-
-
அதிசிறந்த காற்பந்தாட்ட வீரர் தெரிவுக்கு போட்டியிடும் மூவர் உலக காற்பந்தாட்ட சம்மேளனம் , இந்த வருடத்துக்கான அதி சிறந்த காற்பந்தாட்ட வீரரைத் தெரிவு செய்ய மூவரைப் பொறுக்கி இருக்கின்றது . இந்தத் தெரிவு விபரம் , கடந்த வெள்ளியன்று FIFA வினால் இலண்டனிலிருந்து அறிவிக்கப்பட்டது . இந்த மூவர் பெயர்ப் பட்டியலில் 25 வயதான பிரேசில் சுப்பர் ஸ்டார் நெய்மர், 32 வயதான போத்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ , 30 வயதான ஆர்ஜென்டீனிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள் . பார்சலோனா கழகத்துக்காக விளையாடிய நெய்மர் , காற்பந்தாட்ட சரித்திரத்தில் சாதனை படைக்கும் 266 மில்லியன் டொலர் தொகைக்கு , பாரிஸ் கழகமொன்றினால் …
-
- 0 replies
- 378 views
-
-
ஓய்வுபெற்றார் ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் அண்மையில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், 'எனது உச்சத்தை அடைந்து விட்டேன். ஓய்வு பெற இது சரியான தருணம்' என கூறியுள்ளார். மேலும், 'கடந்த 25 வருட ரேஸிங் களத்தில் ஒரு முறையாவது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்பது என் கனவு. கடின உழைப்பால், அது தற்போது நிறைவேறியுள்ளது' என்றும் ராஸ்பெர்க் கூறியுள்ளார். அவர் 23 க்ராண்ட் பிரிக்ஸ்களை கைப்பற்றியுள்ளார். http://www.vikatan.com/news/world/74024-f-1-champion-nico-rosberg-retired.art
-
- 1 reply
- 378 views
-
-
சிறந்த வீரர் டிவிலியர்ஸ் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றார் டிவிலியர்ஸ். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிவிலியர்சிற்கு, 27, கிடைத்தது. தவிர, நிடினிக்குப் (2005, 2006) பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த வீரர் விருது பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் டிவிலியர்ஸ். இதற்கு முன் காலிஸ் (2004, 2011), ஆம்லா (2010, 2013) தலா 2 முறை இவ்விருது வென்றனர். இத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரர், தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர…
-
- 0 replies
- 378 views
-
-
டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெர…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி..! அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது. Photo Credit: Twitter/cricketworldcup அந்த அணி சார்பில் பவுல் ஸ்டிர்லிங் 55 ரன்களும் கெவின் ஓ பிரெயின் 41 ரன்களும் எடுத்தனர். ஆஃ…
-
- 1 reply
- 378 views
-
-
100 மீற்றரில் தங்கம் வென்ற மங்கை உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் இறுதித் தூரத்தை தாவி இலக்கை கடந்தார். ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு 10.86 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், நெதர்லாந்து வீராங்கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக…
-
- 0 replies
- 378 views
-
-
வாசிம் அக்ரமை அசத்திய பாக். இடது கை வேகப்பந்து வீச்சு சிறுவன்: வைரலான வீடியோ வாசிம் அக்ரமை அசத்திய அதே பாணி இடது கை வேகப்பந்து வீச்சு பாக்.சிறுவன். - படம்.| ட்விட்டர். தனது பயங்கரமான இன்ஸ்விங்கர்கள் மற்றும் யார்க்கர்களால் உலக முன்னணி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்த வாசிம் அக்ரம் அசந்து போகும் வகையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தன் ட்விட்…
-
- 0 replies
- 378 views
-
-
புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கையை வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது நேபாளம் By VISHNU 13 SEP, 2022 | 01:08 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 6 நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்ட தெற்காசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நேபாளமும் இந்தியாவும் தகுதிபெற்றன. இலங்கையை 2ஆவது அரை இறுதியில் 6 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நேபாளமும் பங்களாதேஷை முதலாவது அரை இறுதியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிகொண்டு புதன்கிழமை (14) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக நேபாளம் இறுதிப் போட்டிக…
-
- 3 replies
- 377 views
- 1 follower
-
-
ரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக். | படம்: விவேக் பெந்த்ரே. ஞாயிறன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட நாயகன் ரோஹித் சர்மா பிசிசிஐ.டிவிக்காக தினேஷ் கார்த்திக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அணியில் இடம்பெற்று ஆட வேண்டிய தினேஷ் கார்த்திக் இண்டெர்வியூ மேனாக மாற்றப்பட ரோஹித் ‘ஹிட்’ மேன் செல்லப்பெயர் குறித்து பதில் அளித்துள்ளார்! பிசிசிஐயின் கிளிஷேயான கேள்விகளுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில்கள் இதோ: கொலின் மன்ரோவுக்கு இணையாக 3 டி20 சர்வதேச சதங்களை எப்படி உணர்கிறீர்கள்? …
-
- 0 replies
- 377 views
-
-
ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…
-
- 0 replies
- 377 views
-
-
ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டேன் : டில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், முதலாவது போட்டி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7007
-
- 0 replies
- 377 views
-
-
தோனியுடன் ஒப்பிடலாமா: மனம் திறக்கிறார் கோஹ்லி புதுடில்லி: ‘‘என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். எனது குணம் மாறுபட்டது. கேப்டனாக தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுவேன்,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, 26. இதுவரை 33 டெஸ்ட் (2547 ரன்கள்), 158 ஒரு நாள் (6537), 28 ‘டுவென்டி–20’ (972) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி டெஸ்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் தோனியை போல கேப்டன் பதவியில் ‘கூலாக’ செயல்படுவாரா என தெரியவில்லை. இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அதிகம் செ…
-
- 0 replies
- 377 views
-
-
நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ஆதங்கத்தை வெளிப்படுத்திய சங்கா கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது. நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில்…
-
- 0 replies
- 377 views
-
-
அப்பவே அந்த மாதிரி சீட்டிங் செய்த ஆஸி அணியின் புதிய கோச் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லங்கர், இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் சீட்டிங் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. #JustinLanger தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண…
-
- 0 replies
- 377 views
-
-
'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் ! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது. லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார். நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது.…
-
- 1 reply
- 377 views
-
-
இரகசியங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் டில்ஷானின் விருப்பம் திலகரத்ன டில்ஷான் கருத்துக்களை வெளியிடுவதும் வெளியிடாமலிருப்பதும் அவருடைய விருப்பம். அதில் அமைச்சரான நான் தலையிட முடியாது. அதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நான் கவனம் செலுத்துவேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வீரகேசரிக்கு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு வீரகேசரி விளையாட்டுப் பிரிவுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியின்போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியிடப்போகிறாராமே என்று அவரிடம் கேட்டதற்கு, க…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்தார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (20) இன்று இடம்பெற்றுள்ளது. ஆஸி அணியுடனான டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விரர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். http://www.virakesari.lk/article/11557
-
- 0 replies
- 377 views
-
-
உமர் அக்மலுக்கு போட்டித் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உமர் அக்மல், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச மான மொழியில் வசை பாடினார் என்றும் தேசிய கிரிக்கெட் அகடமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்றும் ஊடகங்கள் மூலமாக குற்றஞ்சாட்டியதால் அவர் போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ளார். அத்துடன் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/25239
-
- 0 replies
- 377 views
-