Jump to content

'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் !


Recommended Posts

'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் !

 

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது.

prav.jpg

லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார்.  நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில்  ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து பிரவீன் தாம்பே கூறுகையில், '' விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் பயிற்சி ஆட்டம் என்றார்கள். ஆனால் மைதானத்திற்கு சென்ற பிறகுதான் அது டி20 போட்டி என்று எனக்கு தெரிய வந்தது. அங்கீகரிக்கப்படாத போட்டி என்பதால் அதில் பங்கேற்றேன்.மேலும் அந்த போட்டியில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல் விளையாடியதும் எனக்கு தெரியாது. அவருடன் எனக்கு அறிமுகமும் இல்லை.  இது பற்றி யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை '' என்றார்.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க துணைச் செயலாளர் பி.வி ஷெட்டி , '' இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம் '' எனக் கூறியுள்ளார்.

வங்கதேச அணிக்காக 13 டெஸ்ட் மற்றும் 38 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள முகமது அஸ்ரபுல், கடந்த ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது. முதலில் 8 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தடை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.  அண்மையில் சூதாட்ட நோக்கத்துடன்  ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை அணுகியதாக 43 வயது பிரவீன் தாம்பே புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பி.சி.சி.ஐ.,  மும்பை ரஞ்சி வீரர் ஹிஹென் ஷாவுக்கு தடை விதித்தது. 

http://www.vikatan.com/news/article.php?aid=50575

Link to comment
Share on other sites

தடைக்குட்பட்டுள்ள பங்களாதேஷ் வீரர் அஷ்ரபுலுடன் அமெரிக்காவில் விளையாடிய இந்திய, பங்களாதேஷ் வீரர்கள்
2015-08-06 12:05:23

11453Mohammad+Ashraful+Bangladesh+Portraபங்­க­ளாதேஷ் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை­யினால் ஐந்து வருட தடைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மொஹமத் அஷ்­ரஃ­பு­லுடன் இந்­தி­யாவின் ப்ரவின் தாம்பே கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளை­யா­டி­யுள்ளார்.

 

ஐக்­கிய அமெ­ரிக்­காவில் நடைபெற்­று­வரும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டி­யி­லேயே இவர்கள் விளை­யா­டி­யுள்­ளனர். 

 

பங்­க­ளா­தேஷில் 2013இல் நடை­பெற்ற ப்றீமியர் லீக் போட்­டி­க­ளின்­போது ஆட்ட நிர்­ணய சதியில் ஈடு­பட்ட குற்­றத்­தின்­பேரில் அஷ்­ரஃ­பு­லுக்­கு ஐந்து வருடத்தடையை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விதித்­தி­ருந்­தது.

 

குறிப்­பிட்ட சுற்றுப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­கான அனு­ம­தியை தாம்பே பெற­வில்லை எனவும் அவர் போட்­டியில் விளை­யா­டி­யது பற்றி அறி­யக்­கி­டைக்­க­வில்லை எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

 

இது குறித்து ஊடகம் ஒன்று அவ­ருடன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, இந்தப் போட்டி உத்­தி­யோ­க­பூர்வ போட்­டி­யா என்­பது பற்றி தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும் அஷ்­ரஃபுல் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பது களமிறங்­கும்­வரை தனக்கு தெரி­யாது எனவும் தாம்பே கூறி­யுள்ளார்.

 

11453pravin-thambe.png

 

மும்பை அணிக்­காக ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­யுள்ள ராஜஸ்தான் றோயல்ஸின் சுழல்­பந்­து­வீச்­சாளர் ப்ரவின் தாம்­பே­யை­விட பங்­க­ளாதேஷ் சர்­வ­தேச கிரிக்கெட் வீரர்களான எலியாஸ் சனி, நாதிவ் சௌதரி ஆகி­யோரும் அஷ்ரஃபுலுடன் விளை­யா­டி­யதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

தனது நாட்டு வீரர்கள் ஐக்கிய அமெரிக்காவில் விளையாடியது குறித்து அறிந்திருக்கவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும் தெரிவித்துள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11453#sthash.9zDWaiFn.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். 13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா? கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ? முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு  ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.” அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது? அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான். உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன. எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு. உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது. திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த  ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா? எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல, தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம். ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது? தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர். அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார். அதாவது 13மைனஸ். மற்றவர் சஜித் பிரேமதாச. அவர் 13பிளஸ் என்று கூறுகிறார். ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா? மூன்றாவது அனுரகுமார. அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா? அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா? இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட, அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார். ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார். அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார். நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன, கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான். ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான். இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில், தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன? அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை. தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம். 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது. அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை. இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா? ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள், தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை  ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன. இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது. சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி. அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்?   https://www.nillanthan.com/6770/
    • சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024   சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன. AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும். மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/சிறிலங்கன்-விமான-சேவையை/
    • அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203417/  
    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.