Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அதிவேக 150 விக்கெட்: இந்திய அளவில் அஸ்வின் சாதனை! 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினைப் பாராட்டும் இந்திய வீரர்கள். இடம்: மொஹாலி. | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கை…

  2. அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…

  3. ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…

  4. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் Cricket All Stars கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 9.30க்கு - அணிகளின் விபரங்கள்

  5. பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்? ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=74134

  6. குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…

  7. உலகக்கிண்ணம் வென்று நாடு திரும்பிய நியூ சீலாந்து ரக்பி அணிக்கான உன்னத 'ஹக்கா' வரவேற்பு http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2816-உலகக்கிண்ணம்-வென்று-நாடு-திரும்பிய-நியூ-சீலாந்து-ரக்பி-அணிக்கான-உன்னத.html

  8. ஆஸி. – நியூசி நாளை முதல் டெஸ்ட் November 04, 2015 ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாளை ஆஸ்திரெலியாவின் பிரிஸ் பெயின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிமித்தின் தலைமையில் அதிகளவான இளம் வீரர்களைக் கொண்டதாக ஆஸ்திரேலிய அணியும், மக்கலத்தின் தலைமையில் அதிகளவான அனுபவ வீரர்களைக் கொண்டதாக நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. ஆள்பலத்தின் அடிப்படையில் நியூசிலாந்து பலம் மிக்கதாகக் காணப்பட்ட போதிலும் சொந்த மண், பழக்கப்பட்ட ஆடுகளம் என்பன ஆஸ்திரேலிய அணிக்குக் சாதகமாக அமையும். இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் எதிர்வரும் 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/spor…

  9. பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…

  10. செய்தித்துளிகள் 2013ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் குழு அறிக்கையில், ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரண்டாண்டுகளாக சுந்தர் ராமன் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையே பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் சுந்தர் ராமன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். ---------------------------- தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் …

  11. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்து விடாது: சானியா சர்ச்சை பேச்சு இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் 9 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடுவதால் இன்னொரு பதக்கம் பிரகாசமாகியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சானியா இததொடர்பான கேள்விக்கு பத…

  12. கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…

  13. பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது! பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில், வல்புனா தொடர்புடைய 'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை மீடியாக்களிடம் …

  14. கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போதுநடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஓய்வு பெறுவதாக சோயப் மாலிக் கூறினார். சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்துள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1379059

  15. ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. …

  16. விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்! இந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார். மொகாலி மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. வி…

    • 1 reply
    • 192 views
  17. டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்! இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது. இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது'' என்று குறிப்பிட்டுள்ளார். ht…

  18. ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…

  19. இது ஓர் அணி, இதில் தனி நபர்கள் இல்லை: ரவி சாஸ்திரி இந்த இந்திய அணி உலகத் தரமானது, சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமை பெற்றது என்கிறார் ரவி சாஸ்திரி. | படம்: பிடிஐ. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார். மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர். …

  20. தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம் ஜெய்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் தேவ். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ். கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன். இந்திய…

  21. தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…

  22. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…

  23. குட் பை சாம்பியன்ஸ்! தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும் தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான். என் வழி தனி வழி! ‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக், தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரா…

    • 1 reply
    • 503 views
  24. தரக்குறைவான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் விரட்டியது: தோனி தோனி. | படம்: ஏ.பி. கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப் படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை விரட்டியடித்தது என்று கூறினார். புதுடெல்லியில் ‘யாரி’ டிஜிட்டல் நிகழ்ச்சியின் போது கிறிஸ் கெய்லுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட தோனி கூறும்போது, “நாம் ஜெண்டில்மேன் ஆட்டத்தை ஆடுகிறோம். நாம் வெற்றி பெற விரும்புகிறோம், ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும். தரக்குறைவான, அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் கிரிக்கெட் விரட்டியுள்ளது. நட்பு ரீதியான ஒரு கேலி நல்லதுதான், இதைத்தான் டுவெண்டி 20 லீகுகள் செய்தன. ஸ்லெட்ஜிங் என்று அறியப்படும் ஒன்றுக்கு எதிராக வீரர்களை ஒன்ற…

  25. என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.