விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …
-
- 0 replies
- 301 views
-
-
எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச றக்பி சபையினால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் எட்டாவது அத்தியாயம் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20 நாடுகள் நான்கு குழுக்களில் மோதும் உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இங்கிலாந்துக்கும் ஃபிஜிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. லண்டன், ட்விக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இறுதிப் போட்டி இதே அரங்கில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டிகள் முதன் முதலில் அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 1987இல் கூட்…
-
- 24 replies
- 2.1k views
-
-
ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…
-
- 0 replies
- 240 views
-
-
பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார். அதோடு சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். தற்போது துப…
-
- 9 replies
- 2.1k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …
-
- 0 replies
- 277 views
-
-
புதிய அணிகளுக்கு10 வீரர்கள் நேரடி தெரிவு November 01, 2015 பிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்…
-
- 2 replies
- 506 views
-
-
உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா ( வீடியோ) கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 42-வது ஓவரை வீசிய இந்திய பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கென் ரூதர்போர்ட், இயார்ன் ஸ்மித், இவான் சார்ட்பீல்ட் அகியோரின் விக்கெட்டுகளை கிளீன் போல்டு முறையில் வீழ்த்தி அசத்தினார் சேத்தன் சர்மா. இதன் மூலம் உலகக் கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் சேத்தன் பெற்றார். http://www.vikatan.com/news/article.php?a…
-
- 0 replies
- 225 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் நாதன் மக்கலம் October 31, 2015 நியூஸிலாந்து அணியின் சகலதுறை வீரரான நாதன் மக்கலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 35வயதான அவர் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்- 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார். 84 ஒருநாள் ஆட்டங்களில் 4 அரைச் சதங்களுடன் 63 இலக்குகளையும்- 61 டெஸ்ட் ஆட்டங்களில் 55 இலக்குகளையும் வீழ்த்தியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2821&cat=2
-
- 1 reply
- 326 views
-
-
நியூஸிலாந்துக்கு எதிராக 503 ரன்கள் சேர்த்து ஏரோன் பின்ச், ரயான் கார்ட்டர்ஸ் சாதனை ஏரோன் பின்சை பாராட்டும் நியூஸி. வீரர்கள். | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்காக 503 ரன்கள் சேர்த்து பின்ச், கார்ட்டர்ஸ் சாதனை நிகழ்த்தினர். நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. 29-ம் தேதி சிட்னி பிளாக்டவுன் பார்க்கில் தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் தொடக்க வீரர்கள் 503 ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் பிட்ச் மோசமடைந்ததன் காரணமாக இந்த பயிற்சி ஆட்டம் 503/1 என்ற நிலையில் கைவிடப்பட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியின் கார…
-
- 1 reply
- 397 views
-
-
சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது! வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்ட…
-
- 0 replies
- 257 views
-
-
ரஷ்யாவின் உலகக்கிண்ண வாய்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடாக, வாக்கெடுப்புக்கு முன்னரே ரஷ்யா தெரிவுசெய்யப்பட்டதாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் தெரிவித்துள்ளார். 2018, 2022ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதற்கு எடுத்த முடிவு, பலத்த சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்த நிலையில், பிளட்டரின் இக்கருத்துக்கள், அவற்றின் மீது மேலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. '2010ஆம் ஆண்டில் நாமொரு கலந்துரையாடலை நடாத்தினோம். அதில், இரண்டு முடிவுகளை எடுத்தோம். அதன்படி, உலகக் கிண்ணத்துக்காக ரஷ்யாவைத் தெரிவுசெய்வதென முடிவெடுத்தோம், ஏனெனில்…
-
- 0 replies
- 197 views
-
-
2016 உலக இருபது 20 போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம் என்கிறார் மியண்டாட் 2016 உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை முன்னாள் வீரர் ஜாவேட் மியண்டாட் கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறாவிட்டால் அடுத்த வருட உலக இருபது 20 போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறுகின்றது. அத…
-
- 0 replies
- 272 views
-
-
தோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்! ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன் கேரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை. தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற…
-
- 3 replies
- 429 views
-
-
தலைமை மாற வேண்டிய தருணம் சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசம் அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா தோற்றபோது மகேந்திர சிங் தோனி தன் இயல்புக்கு மாறாக எதிர்வினை ஆற்றினார். “அணிக்கு நல்லது என்றால் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, சாதாரண ஆட்டக்காரராக ஆடத் தயார்” என்றார். முன்னாள் ஆட்டக்காரர்கள் பலர் இதை ஏற்கவில்லை. அணித் தலைவர் என்னும் முறையில் தோனியின் சாதனைகளை அவர்கள் நினைவு கூர்ந்தார். இந்தச் சாதனைகளுக்கு ‘மதிப்பு' அளிக்க வேண்டும் என்று சவுரவ் கங்கூலியும் சுனில் கவாஸ்கரும் சொன்னார்கள். ஆனால், இருவரின் பார்வையிலும் நுட்பமான வேறுபாடு இருந்தது. கேப்டனாக இருப்பதா வேண்டாமா என்பதை தோனியே முடிவெடுக்க வேண்டும் என்றார் கவாஸ்கர். கேப்டன் விஷயம் தனிநபரின் முடிவாக இருக்க…
-
- 2 replies
- 397 views
-
-
தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது. இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம்,…
-
- 0 replies
- 238 views
-
-
அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…
-
- 0 replies
- 296 views
-
-
ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..! அக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.? கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அ…
-
- 0 replies
- 364 views
-
-
கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து மேஜிக் செய்த கால்பந்து வீரர் ( வீடியோ) கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து கால்பந்து வீரர் ஒருவர் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. வெனிசூலா பிரிமீயல் லீக்கில் கரகாஸ் அணிக்கு எதிராக கோல் அடித்த சமோரா அணி வீரர் சீசர் மார்ட்டினஸ் கோல் அடித்த உற்சாகத்தில் பந்தை சில வினாடிகள் அந்தரத்தில் மிதக்க வைத்தார். அப்போது அவரது அணியை சேர்ந்த சக வீரர்கள் அவரை சுற்றி நின்றனர். இந்த சமயத்தில் சீசர் மார்ட்டினஸ் ஏதோ ஒரு வித்தியாசமான டெக்னிக்கை கையாண்டு பந்தை அந்தரத்தில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது டெக்னிக் தென்படவில்லை. http://www.vikat…
-
- 0 replies
- 345 views
-
-
இந்தியா படுதோல்வி: மும்பை பிட்ச் பராமரிப்பாளரை திட்டி தீர்த்த ரவிசாஸ்திரி! மும்பை: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த ரவிசாஸ்திரி, மும்பை பிட்ச் பராமரிப்பாளரை கடுமையாக திட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்களை குவித்தது. அந்த அணியில் 3 பேர் சதம் விளாசினர். இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 10 ஓவர்கள் வீசி, 106 ரன்களை வாரி இறைத்தார்.…
-
- 1 reply
- 254 views
-
-
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்து சென்றது நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் கிரிக்கெட் தரப்படுத்தலுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சர்வதேச மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்றைய தினம் நியூஸிலாந்து சென்றடைந்தனர். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஷஷிகலா சிறிவர்தன தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமரி அத்தப்பத்து உதவி அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்ற உதேஷிகா பிரபோதினி சுகவீனமுற்றதன் காரணமாக அவருக்குப் பதிலாக அச்சினி குலசூரிய குழாமில் இணைத்துக்கொ…
-
- 0 replies
- 232 views
-
-
இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf
-
- 1 reply
- 290 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்கக்கார பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இணைந்துள்ளார். கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள், 5 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவர். சங்கக்காரவின் ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி, 'சங்கக்கார, உலகத்தரம் மிக்க ஒர வீரர். அவரை இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏராளமான அனுபவத்தை அவர் இந்தத் தொடருக்குக் கொண்டு வருகின்றார். அவரது இணைப்பானது, தொடரின் வீரர் தெ…
-
- 0 replies
- 207 views
-
-
தோல்விக்கு ஆடுகளம் மீது பழிபோடுவதா? - கவாஸ்கர் கேள்வி மும்பை ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததற்கு ஆடுகளம் மீது பழி போடுதல் கூடாது என்று ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் சூசக விமர்சனம் வைத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் மும்பை கிரிக்கெட் சங்க…
-
- 1 reply
- 239 views
-
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 230 views
-
-
நைரோபி மாரத்தான் ஓட்டத்தில் கடைசி நேரத்தில் நுழைந்து ஏமாற்றிய வீரர் கைது கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நைரோபி மாராத்தான் ஓட்டம். | படம்: ராய்ட்டர்ஸ். கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார். 42 கிமீ ஓடியதற்கான…
-
- 0 replies
- 184 views
-