விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான அயர்லாந்து அணிக்கு வாஸ் உதவி வழங்கவுள்ளார் [ Thursday,21 January 2016, 16:54:43 ] உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடருக்கென தயாராகும் அயர்லாந்து அணிக்கு ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் இடதுகர வேகப்பந்துவீச்சாளர் சமிந்தவாஸ் உதவி வழங்கவுள்ளார். சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணியுடன் இணையவுள்ள 41 வயதான சமிந்த வாஸ், தொடர் முடிவுடையும் வரை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இந்தியாவில் உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அயர்லாந…
-
- 0 replies
- 233 views
-
-
வீட்டில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் விராட் கோலிக்கு உண்டு. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த, பிஷ்மா மருஃவா கூட நம்ம கோலியின் தீவிர ரசிகைதான். இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் ஏராளமான விராட் கோலி ரசிகர்கள் பார்த்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஓகாரா மாவட்டத்தில், உமர் ட்ராஸ் என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். நேற்றையை போட்டியில் தனது ஹீரோ ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசி தள்ளியதாலும் அதனால், இந்திய…
-
- 0 replies
- 496 views
-
-
மலிங்கவிற்கு ஓய்வு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5676
-
- 0 replies
- 489 views
-
-
ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ) ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் ப…
-
- 0 replies
- 353 views
-
-
29 பட்டங்கள் வென்று ஜோகோவிச் சாதனை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார்…
-
- 0 replies
- 383 views
-
-
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தட்டெறிதல் போட்டி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆயிலை முதலிடம் Published By: Vishnu 02 Nov, 2025 | 09:56 PM (நெவில் அன்தனி) எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தி…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…
-
- 0 replies
- 414 views
-
-
ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி. இந்தியக் கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவரான டோனி, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இன்னுமொரு மைல்கல்லை எட்டித்தொடக் காத்திருக்கிறார். இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்க்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 3 இலும் தோல்வி கண்டுள்ள நிலையில் ,நாளை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் டோனி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்கள் கடந்தவர்கள் வரிசையில் இணைந்துகொள்வார். இது…
-
- 0 replies
- 522 views
-
-
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம். டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண…
-
- 0 replies
- 382 views
-
-
தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…
-
- 0 replies
- 300 views
-
-
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். …
-
- 3 replies
- 918 views
-
-
முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் யுகம் தற்போது T-10 போட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது. அந்த வகையில் அங்குரார்ப்பண T-10 லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை …
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? நிதின் ஸ்ரீவeஸ்தவா பிபிசி செய்தியாளர், மெல்போர்னில் இருந்து (ஆஸ்திரேலியா) 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவான்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்ட…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 2, ஜனவரி 2011 (22:59 IST) 2016 ஒலிம்பிக் போட்டி சின்னம் தயார் பிரெஞ்ச் நாட்டில் வரும் 2016ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். சின்னத்தில் மூன்று வீரர்கள் கைகள் மற்றும் கால்கள் மூலம் ஒருவருடன் ஒருவரை இணைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்குவிஸ் ரோஜ்ஜி கலந்து கொண்டார். சின்னத்தை வடிவமைப்பதில் பிரேசில் நாட்டை சேர்ந்த 139க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியில் பங்குகொண்டன. இருப்பினும் 8 நிறுவனங்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் கலந்து கொண்டன. nakkheeran
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை: ஐபிஎல் அதிவேக அரைசதங்கள் 14 பந்துகளில் அதிவேக ஐபிஎல் அரைசதம் கண்ட ராகுல். - படம். | அகிலேஷ் குமார். ஐபில் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்கள் சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை ஓர் பார்வை: ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபி…
-
- 0 replies
- 545 views
-
-
அடுத்த ஐ.பி.எல்., எப்போது நவம்பர் 04, 2014. புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது. தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும…
-
- 5 replies
- 915 views
-
-
உலகக் கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர். உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்ற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதேபோல் வீழ்ச்சிகளையும் கண்டவர். 199697 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தைக் குறைக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…
-
- 0 replies
- 605 views
-
-
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை! சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலி அணி சார்பாக மாக்கஸ் ஹரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் வின்ஞ் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர். இதனிடையே, இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றி…
-
- 0 replies
- 639 views
-
-
தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோபூர்வமற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த குசல் பெரேரா இப்போட்டியில் 13 ஓட்டங்களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் மூல…
-
- 0 replies
- 350 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…
-
- 0 replies
- 287 views
-
-
ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மேர்சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் சேர்பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானார். புற்தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்பியனான பின்னர் புற்றரையில் நடால் சம்பியனாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும். இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தின் முதலாவது செட் யார் வெற்றிபெறுவார் எனக் கூற முடியாத அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்ளப்பட்டது. சமநிலை முறிப்புவரை நீடித்த முதலாவது செட்டில் கடும் முயற்சிக்குப் பின…
-
- 0 replies
- 352 views
-
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். …
-
-
- 6 replies
- 611 views
- 1 follower
-
-
அணிக்காக எதையும் செய்வார்: விருத்திமான் சஹாவை ஆதரிக்கும் விராட் கோலி மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆம்லாவை வீழ்த்தியதைக் கொண்டாடும் விராட் கோலி, சஹா, புஜாரா. | கோப்புப் படம். தோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக செயலாற்றி வரும் விருத்திமான் சஹாவின் சர்வதேச தரம் பற்றிய கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாக வாதாடியுள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. “சஹாவின் அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே பிடித்துள்ளது. அவர் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீர்ர். அணிக்குத் தேவையான எந்த ஒன்றையும் அவர் செய்ய தயாராகவே இருக்கிறார். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் நி…
-
- 0 replies
- 208 views
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 491 views
- 1 follower
-