Jump to content

அடுத்த ஐ.பி.எல்., எப்போது


Recommended Posts

அடுத்த ஐ.பி.எல்., எப்போது
நவம்பர் 04, 2014.

 

புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது.

கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது.

 

தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும்பை அணியில் இடம்பெறவுள்ளனர்.
 

http://sports.dinamalar.com/2014/11/1415119291/NextIPLCricketDateIndia.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அணி மாறிய அப்துல்லா
நவம்பர் 21, 2014.

 

புதுடில்லி: ராஜஸ்தான் வீரர் இக்பால் அப்துல்லா, பெங்களூரு அணிக்கு மாறினார்.

இந்திய கிரிக்கெட்டின் ‘ஆல் ரவுண்டர்’ இக்பால் அப்துல்லா, 24. தேசிய போட்டிகள் எதிலும் பங்கேற்காத இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக (2008–2013) விளையாடினார். பிறகு கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியில் இணைந்தார்.

இம்முறை வரும் 2015 ஏப்., 8 முதல் மே 24 வரை, எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஏலத்துக்கு முன், ஐ.பி.எல்., அணிகள் வீரர்களை மாற்றிக்கொள்வது, விடுவிக்கும் முறைகள் தற்போது நடக்கிறது.

இதன் படி, கோல்கட்டா அணியில் இருந்து மன்விந்தர் பிஸ்லாவை பெற்றுக் கொண்ட பெங்களூரு அணி, பார்த்திவ் படேலை மும்பைக்கு அனுப்பியது.

இந்த வரிசையில் தற்போது, ராஜஸ்தான் வீரர் இக்பால் அப்துல்லா, பெங்களூரு அணியில் இணைந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416590866/cricketindia.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஏலத்தில் யுவராஜ், கெய்ல்
நவம்பர் 30, 2014.

ஐ.பி.எல்., தொடரில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள், சரியான திறமை வெளிப்படுத்தாததை அடுத்து, யுவராஜ், பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், கெய்ல் உள்ளிட்ட பலர், அணியில் இருந்து இந்த வாரம் கழற்றி விடப்படவுள்ளனர்.

கடந்த 2008ல் துவங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக நடக்கிறது.

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் 2015, ஏப்., 8 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடைசித் தேதி:

இதற்கு முன், ஐ.பி.எல்., அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக் கொள்வது, அணியில் இருந்து விடுவிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கான கடைசித் தேதி வரும் டிச., 5.

 

கழற்ற முடிவு:

இதனிடையே, அதிக விலை கொடுத்து வாங்கியும், அணிக்காக போதிய திறமை வெளிப்படுத்தாத வீரர்களை கழற்றி விட்டு, புதிய வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதன் படி, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், பீட்டர்சன், அமிஸ் மிஸ்ரா போன்றவர்கள், அடுத்த ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஏலத்துக்கு வருவர் என்று தெரிகிறது.

அதாவது, பெங்களூரு வீரர் யுவராஜ் சிங், ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர், 14 போட்டிகளில் 376 ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.

 

காரணம் என்ன:

இதனால், யுவராஜ் சிங்கை ஏலத்தில் விட்டு, மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கும் திட்டமும் வைத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒருவேளை ஏலத்தில் எடுக்கப்படாமலும் போகலாம்.

 

அதிக பணம்:

ஏனெனில், கடந்த ஆண்டு பெங்களூரு அணி தனது முழு ஏலத்தொகையையும் (ரூ. 60 கோடி) செலவு செய்தது. யுவராஜ் சிங்கை விடுவித்தால் ரூ. 14 கோடி, இந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்படும் ரூ. 3 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ. 17 கோடி கையில் இருக்குமாம்.

இதேபோல, டில்லி அணி தினேஷ் கார்த்திக் (ரூ. 12.5 கோடி), பீட்டர்சனை (ரூ. 9 கோடி) விடுவிப்பதால், கிடைக்கும் ரூ. 22 கோடியுடன், கூடுதலாக 3 என, மொத்தம் ரூ. 25 கோடி வைத்திருக்கலாம்.

இதனால், 2015 ஏலத்தில் அதிக வீரர்களை எடுக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், யுவராஜ் சிங், கெய்ல் போன்ற வீரர்களின் ஐ.பி.எல்., எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417327479/yuvrajcricketindia.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரானார் பொண்டிங்
 

 

எதிர்வரும் 2015 ஆம் இடம்பெறவுள்ள 8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோன்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
 

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., இந்திய வீரர்களுக்கு ‘கல்தா’
டிசம்பர் 15, 2014.

 

புதுடில்லி: யுவராஜ் சிங் (பெங்களூரு), புஜாரா (பஞ்சாப்), தினேஷ் கார்த்தி (டில்லி), முரளி விஜய் (டில்லி) உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஐ.பி.எல்., அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏலத்தின் மூலம் தேர்வாகி, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.           

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்., 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. வேறு அணிகளில் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த டிச., 12ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.     

      

இதன்படி, கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போன யுவராஜ் சிங்கை, பெங்களூரு அணி கழற்றிவிட்டது. இதனால் இவர், ஏலத்தில் பங்கேற்று மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் வாய்ப்பு பெறலாம். கடந்த சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை விடுவித்த பெங்களூரு அணி, கோல்கட்டா அணிக்காக விக்கெட் கீ்ப்பராக செயல்பட்ட மன்விந்தர் பிஸ்லாவை வாங்கியது.           

பார்த்திவ் படேலை மும்பை அணி வாங்கியது. மும்பை அணியில் இருந்து மைக்கேல் ஹசி, பிரவீண் குமார், ஜாகிர் கான் கழற்றிவிடப்பட்டனர்.

 

அதேவேளையில் ராஜஸ்தானிடம் இருந்து உன்முக்த் சந்த், கோல்கட்டாவிடம் இருந்து வினய் குமாரை மும்பை அணி வாங்கியது. ஹர்பஜன் சிங்கை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.     

 

பஞ்சாப் அணிக்காக விளையாடிய புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். அதேவேளையின் சேவக்கை தக்கவைத்துக் கொண்டது.     

டில்லி அணியில் இடம் பெற்றிருந்த கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், லட்சுமி ரத்தன் சுக்லா விடுவிக்கப்பட்டனர். கேதர் ஜாதவ், மனோஜ் திவாரியை தக்கவைத்துக் கொண்டது.

 

http://sports.dinamalar.com/2014/12/1418662611/IPLCricketIndianPlayersAuctionYuvrajSingh.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் அணிகளிலிருந்து கெவின் பீட்டர்சன், யுவராஜ், ஜாகீர் கான் உள்ளிட்டோர் விடுவிப்பு

 

டெல்லி டேர் டெவில்ஸ், ஆர்.சி.பி. உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.

 

டெல்லி டேர் டெவில்ஸ் அணி கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், உனட்கட், ராஸ் டெய்லர், லஷ்மி ரத்தன் சுக்லா, ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னெல், ஜேம்ஸ் நீஷம், சித்தார்த் கவுல், ராகுல் ஷுக்லா, ஷரத், மிலிந்த் குமார் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

 

டுமினி, மொகமது ஷமி, குவிண்டன் டி காக், மனோஜ் திவாரி, கூல்டர் நைல், இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால், ஷாபாஸ் நதிம், சவுரவ் திவாரி ஆகியோரை தக்க வைத்துள்ளது

சில வீரர்களை விடுவிப்பதன் மூலம் பணம் மிச்சப்பிடிக்கப்பட்டு புதிய வீரர்கள் மீது முதலீடு செய்ய முடியும் என்று டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறியுள்ளார்.

 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ராயல் சாலஞ்சர்ஸ் அணி அவரை தற்போது விடுவித்துள்ளது. இத்தனைக்கும் யுவராஜ் சிங் அதிக ரன்கள் எடுத்த 2-வது ராயல் சாலஞ்சர்ஸ் வீரர் ஆவார். 376 ரன்களை 34 என்ற சராசரியுடன் 3 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இவர் தவிர முத்தையா முரளிதரன், ஆல்பி மோர்கெல், ரவி ராம்பால், சச்சின் ரானா, ஜகதி, தன்மய் மிஸ்ரா.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டேவிட் ஹஸ்ஸி, ஜான் ஹேஸ்டிங்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், உள்ளூரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரை நீக்கியுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஜாகீர் கான் உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. பிராக்யன் ஓஜாவையும் சேர்த்து விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். மேலும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பென் டன்க், வெஸ்ட் இண்டீஸின் இடதை கை ஸ்பின்னர் சண்டோகி, உள்நாட்டு வீரர்களான ஜலஜ் சக்சேனா, சி.எம். கவுதம், அபூர்வ் வான்கடே, மற்றும் சுசாந்த் மராத்தே. பார்த்திவ் படேலை ராயல் சாலஞ்சர்ஸிலிருந்து மும்பை வாங்கியதால் அந்த அணியில் இருந்த அதிக விக்கெட் கீப்பர்களை மும்பை வெளியேற்றியுள்ளது.

 

சன் ரைசர்ஸ்:

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ஆரோன் ஃபின்ச், டேரன் சாமி, இந்திய வீரர்களான அமித் மிஸ்ரா, இர்பான் பத்தான், ஜேசன் ஹோல்டர், ஜிம்பாவே விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மென் பிரெண்டன் டெய்லர், உள்நாட்டு வீரர் வேணுகோபால் ராவ், பிரசாந்த் பரமேஸ்வரன், அனிருதா ஸ்ரீகாந்த், மன்ப்ரீத் ஜுனேஜா ஆகியோரை விடுவித்துள்ளது.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

புஜாரா, எல்.பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஜாக் காலிஸ், தேவவரத தாஸ், சயன் மோண்டல்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

பிராட் ஹாட்ஜ், கெவின் கூப்பர், அன்கிட் சர்மா, அமித் சர்மா, அங்குஷ் பெய்ன்ஸ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6697997.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
    • லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN   26 MAY, 2024 | 02:21 PM   பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது. சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர்.  லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார். இதே வேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர். பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார். எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார். உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184514
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.