விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
அஸ்வினும் போத்தமும், பெரிய வெற்றியும்: சில புள்ளி விவரங்கள் ஜேசன் ஹோல்டருக்கு வீசும் ஆட்ட நாயகன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஒரு டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் சதமும் எடுத்த வகையில் அஸ்வின் 3-வது ஆல்ரவுண்டராக திகழ்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அஸ்வின் உயர்தர ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை எட்டினார். இதனால் மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் சில புள்ளிவிவரங்கள் வருமாறு: ஆசியாவுக்கு வெளியே இந்தியா இதற்கு முன் பெரிய வெற்றியைப் பெற்றது 2005-06-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக. அப்போது இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு நேற்று இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில்…
-
- 0 replies
- 597 views
-
-
தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் ஊவாவை வெளியேற்றியது வடக்கு தேசிய கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஊவா மாகாண அணியை வீழ்த்தியது வடக்கு மாகாண அணி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து ஊவா மாகாண அணி மோதியது. நான்கு பகுதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்திருந்தது. முதல் இரு பாதி ஆட்டங்கள் முறையே 24:12, 17:13 என்ற புள்ளிகளின் அட்டிப்படையில் கைப்பற்றிய வடக்கு மாகாண அணி முதல் பாதி முடிவில் 41:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. மூன்றாவது கால் பாதியை 10:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் இழந்தது.ஆனால் நான்காவது கால் ப…
-
- 0 replies
- 291 views
-
-
கொவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் (ஜெ.அனோஜன்) நவீன வரலாற்றில் மிகவும் சிக்கலான 2020 ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக வெள்ளிக்கிழமை டோக்கியோவில் தொடக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகும். தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது. ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். …
-
- 0 replies
- 475 views
-
-
மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், தற்போது மொனாக்கோ நட்சத்திரம் பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர் லீக்-1. இந்த தொடரில் முன்னணி அணியாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) விளங்குகிறது. இந்த அணி சுமார் 1600 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணியில் விளையாடிய நெய்மரை வாங்கியது. நெய்மருக்காக பல கோடிகளை செலவழித்துள்ளதால் மற்ற வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்ய விரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நெய்மர், கவானி, டி ம…
-
- 0 replies
- 385 views
-
-
CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 36 பே…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…
-
- 0 replies
- 341 views
-
-
ரொனால்டோவை தண்டியுங்கள்: நெய்மர் எதிரணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மரும், ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ரியல் மாட்ரிட் கொர்டோபா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணி 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் நடுவே ரொனால்டோ நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொர்டபோ அணியின் தடுப்பாட்டக்காரர் எடிமர் பிராகாவை ஒரு கட்டத்தில் தி…
-
- 0 replies
- 398 views
-
-
தேசிய மட்ட உதைப்பந்தாட்ட சம்பியனாகியது யாழ், புனித பத்திரிசியார் கல்லூரி தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி வெற்றிபெற்று தேசிய மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த மாதம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் 16 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் இடம்பெறாமல் பிற்போடப்பட்டது. இதன் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை அநுராதபுரம் அல்ஹமிர் மத்திய கல்லூரி சந்தித்த்து. முதல் பாதியாட்டத்தில் ஆதி…
-
- 0 replies
- 479 views
-
-
சிறந்த ஒருநாள் வீரராக சேர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரராக வாக்களிப்பின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரர் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிரிக்இன்போ இணையத்தளத்தின் “த கிரிக்கெட் மந்லி” மாத வெளியீடு நடாத்திய வாக்களிப்பிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது. 50 முன்னாள் வீரர்களும், ஊடகவியாளர்களும் அடங்கிய குழுவே இந்த வாக்களிப்பை செய்துள்ளது. 2,200 வீரர்கள் இந்த வாக்களிப்புக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த வாக்களிப்பில் முதற் தெரிவை செய்தால் அந்த வீரருக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் தெரிவை செய்தால் 3 புள்ளிகளும், மூன்றாம் தெரிவை செய்தால் 1 புள்ளியும் என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 534 views
-
-
இங்கிலாந்தின் வூஸ்டர்ஷயர் அணியில் சச்சித்ர சேனநாயக்க இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவை இங்கிலாந்தின் வூஸ்டர்ஷயர் பிராந்திய அணி ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்குப் பதிலாகவே வூர்ஸ்டர்ஷயர் பிராந்திய அணிக்காக சச்சித்ர சேனாநாயக்க விளையாடவுள்ளார். நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சச்சித்ர சேனாநாயக்கவை இலங்கை அணி நிருவாகம் பெரிய அளவில் கருத்தில் கொள்ளாத போதிலும் சச்சித்ரவின் திறமையில் நம்பிக்கை கொண்டுள்ள வூஸ்டர்ஷயர் பிராந்திய அணி அவரை துணிந்து ஒப்பந்தம் செய்துள்ளது. பதினொராவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத் தில் கால் இறுதி உட்பட இலங்கை…
-
- 0 replies
- 326 views
-
-
பிரவீன் தாம்பே பிடித்து கொடுத்த' சூதாட்ட' கிரிக்கெட் வீரர் 'சஸ்பெண்ட்' சூதாட்டப் புகார் காரணமாக மும்பை கிரிக்கெட் வீரர் ஹைஹென் ஷா கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் பிரவீன் தாம்பேவை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கும் நோக்கத்துடன் ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ள வீரர் ஒருவர் அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பிரவீன் தாம்பே ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனடியாக இது குறித்து பி.சி.சி.ஐக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் புகார் அளித்தது. பி.சி.சி.ஐ சூதாட்ட கண்காணிப்புக் குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பி.சி.ச…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு அர்ஜுனா விருது ! இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இங்கிலாந்தில் நடந்த ஒரு தொடரில் பங்கேற்றதால், விருது வழங்கும் விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில் , அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், அர்ஜுனா விருதை அஸ்வினுக்கு வழங்கினார். இந்திய அணிக்காக அஸ்வின் 25 டெஸ்ட் போட்டிகளில் விளைய…
-
- 0 replies
- 274 views
-
-
இலங்கை – இந்தியா ரி-20 பெப்ரவரியில் January 21, 2016 இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ளது. முதலாவது ஆட்டம் புனேயில் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது ரி-20 ஆட்டம் டெல்லியில் பெப்ரவரி 12ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி ரி-20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=8186
-
- 0 replies
- 379 views
-
-
தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் February 6, 2016 04:12 pm இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில் இலங்கை வீரர் மெத்தியுவ் அபேசிங்க புதிய சாதனை படைத்துள்ளார். 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிக நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 8 நாடுகளை சேர்ந்த 2500…
-
- 0 replies
- 440 views
-
-
2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன் By Mohammed Rishad - ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம்…
-
- 0 replies
- 550 views
-
-
-
- 0 replies
- 511 views
-
-
புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி? By A.Pradhap - ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியிருந்த இலங்கை இளையோர் அணி நியூசிலாந்து இளையோர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இலங்கை இளையோர் அணி, தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்காக அசான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களான சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. இப்போது, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை இளையோர் அணி Plate கிண்ணத்திற்காக போட்டிகளில் விளைாயடவுள்ளதுட…
-
- 0 replies
- 598 views
-
-
கடினமான சில சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: இம்ரான் ஒப்பீடு சச்சின், விராட் கோலி. | கோப்புப் படம். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் சதங்களை விளாசியது முதல் இவரையும் சச்சினையும் ஒப்பிட்டு பலரும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதில் சமீபமாக பாகிஸ்தான் ‘கிரேட்’ இம்ரான் கான், விராட் கோலி பேட்டிங் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியதாவது: “கிரிக்கெட் ஆட்டம் பல காலக்கட்டங்களைக் கொண்டது. 80’களில் விவ் ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, இவர்கள் இருவரும் அனைவரையுமே பின்னுக்குத்…
-
- 0 replies
- 290 views
-
-
ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். * ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹ…
-
- 0 replies
- 512 views
-
-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று அந்த அணியின் தேர்வு குழு உறுப்பினர் காவின் லார்சென் தெரிவித்துள்ளார். வெலிங்டன் : தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே டுனெடினில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்…
-
- 0 replies
- 226 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு நியூசிலாந்து அணியின் 36 வயதான விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய லூக் ரோஞ்சி, பின்னர் நியூசிலாந்தில் குடியேறி அந்த அணியில் இடம்பிடித்தார். தற்போது வரை நான்கு டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஞ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 43 பந்தில் 65 ர…
-
- 0 replies
- 261 views
-
-
கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்? ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர். அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்ப…
-
- 0 replies
- 388 views
-
-
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது. UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்ட…
-
- 0 replies
- 767 views
-
-
எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…
-
- 0 replies
- 407 views
-
-
அறியாத கங்குலி, தெரியப்படுத்திய சேவாக்; கிரெக் சாப்பல் செய்தது என்ன? பிப்.16, 2007, இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் 4வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு பயிற்சியாளர் கிரெக் சாப்பல், அருகில் தோனி, கங்குலி, தினேஷ் கார்த்திக், சேவாக். - படம். | கே.ஆர்.தீபக். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என்று பலரும் வர்ணித்தது நினைவிருக்கலாம். கங்குலி கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராக ஏற்றுக் கொண்டார், ஆனால் கிரெக் சாப்பல் கங்குலியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவரை தலைமைப…
-
- 0 replies
- 527 views
-