விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
அதிவேக 150 விக்கெட்: இந்திய அளவில் அஸ்வின் சாதனை! 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினைப் பாராட்டும் இந்திய வீரர்கள். இடம்: மொஹாலி. | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கை…
-
- 0 replies
- 221 views
-
-
மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? ஒருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல்…
-
- 0 replies
- 398 views
-
-
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்? (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது. …
-
-
- 39 replies
- 2k views
- 1 follower
-
-
ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஷ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான, மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1st T20I, at Adelaide, Oct 27 2019 2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019 3rd T20I, (N) at …
-
- 0 replies
- 479 views
-
-
தரவரிசையில் முன்னேறுவதற்கான தொடரில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன 2015-12-25 12:42:12 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முன்னேறும் நோக்குடன் நியூஸிலாந்தும் இலங்கையும் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத தயாராகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டம்வரை முன்னேறி உலக சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கின்றது. இந்தத் தொடரில் 4 :…
-
- 0 replies
- 394 views
-
-
விடைபெற்ற சங்கக்காரா.. கதறி அழுத தென்ஆப்பிரிக்கா: 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 கிரிக்கெட் புகைப்படங்கள் கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 2 நாட்களுடன் முடிவடைகிறது. இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம், பகல்- இரவு டெஸ்ட் என பல நிகழ்வுகள் அரங்கேறின. இவற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம். 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்:- 1) மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது. …
-
- 0 replies
- 445 views
-
-
ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..? டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்…
-
- 0 replies
- 670 views
-
-
ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 442 views
-
-
சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography அது 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப் பல கனவுகள். 'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்…
-
- 0 replies
- 863 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 335 views
-
-
ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…
-
- 0 replies
- 336 views
-
-
விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …
-
- 0 replies
- 269 views
-
-
தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3 நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது. வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று த…
-
- 5 replies
- 854 views
-
-
‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவரான மகேந்திர சிங் தோனி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பைத் துறந்திருந்தாலும், வார்ம் அப் போட்டி ஒன்றில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கினார் தோனி. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. செப்டம்பர் 24, 2007-ம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி ஜெயிக்க, உடனடியாக அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பதவி விலகினார்.…
-
- 0 replies
- 456 views
-
-
கபடிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இலங்கை அணி மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது. சர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீஷியஸ் நாட்டு தலைநகரான போட் லொய்ஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதியது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியனானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதி பீ.பீ.வையாபூரி, கௌரவ அதிதியாக மொரீஷியஸ் நாட்டுக்கு வ…
-
- 0 replies
- 469 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில…
-
- 3 replies
- 349 views
-
-
இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக Rovman Powell 107 ஓட்டங்களையும், Nicholas Pooran 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 225 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓ…
-
- 3 replies
- 420 views
- 1 follower
-
-
அத்தபத்துவின் மகிழ்ச்சி என்ன தெரியுமா ? எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சியென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும். விராட் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன்…
-
- 0 replies
- 512 views
-
-
பார்சிலோனாவை விட்டுச் செல்கிறார் மஷரானோ ஆர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஸ்கேவியர் மஷரானோ, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து விலகவுள்ளதுடன், சீன சுப்பர் லீக் அணியான ஹெபெய் சைனா போர்ச்சுனேட் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிடமிருந்து 17 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கேவியர் மஷரானோ இவ்வாரம் பார்சிலோனாவை விட்டு விலகவுள்ளார். பார்சிலோனாவுக்காக 334 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்ற ஸ்கேவியர் மஷரானோ, நா…
-
- 0 replies
- 550 views
-
-
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: Cricket World Cup ட்விட்டர் பக்கத்திலிருந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய அணி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதியில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பிரித்வீ…
-
- 1 reply
- 317 views
-
-
மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது By DIGITAL DESK 3 12 NOV, 2022 | 05:53 PM மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது. நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது. இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர், 1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான ப…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
எதிரணியைப் பற்றி ஏன் எப்போதும் புகார் கூறி புலம்புகிறீர்கள்? - ஆஸி. அணி மீது ஷேன் வார்ன் விமர்சனம் ஷேன் வார்ன். | ஏ.என்.ஐ. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியிடத்தில் ஒரு குணம் வெளிப்படுகிறது, அது எதிரணியினர் மீது எப்போதும் புகார் கூறி புலம்புவது என்று கூறிய ஷேன் வார்ன் நியூஸிலாந்து போல் ஆட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். பால் டேம்பரிங் சமயத்தின் போது ஷேன் வார்ன் தென் ஆப்பிரிக்க தொடரில் வர்ணனைப் பணியில் இருந்தார். பால் டேம்பரிங்கினால் பேங்கிராப்ட், ஸ்மித், வார்னர் ஓராண்டு தடைசெய்யப்பட்ட பிறகே வீரர்கள் நடத்தை, ஸ்லெடிங், கல்ச்சர் என்று பல்வேறு கோணங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆய்வில் இறங…
-
- 0 replies
- 408 views
-
-
''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு" உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பிரச்ச…
-
- 1 reply
- 443 views
-
-
ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம் Photograph: Lukas Schulze/Uefa via Getty Images கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த…
-
- 0 replies
- 269 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரைவில் கலைக்கப்படும் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (இலங்கை கிரிக்கெட் சபை) இடைக்கால நிர்வாகக்குழு கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் பல வருடங்களாக இடைக்கால நிர்வாகக் குழுக்களினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்கக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆராயுமாறு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/23481-2011-06-21-16-15-46.html
-
- 2 replies
- 1.1k views
-