Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐபிஎல் போட்டிக்கு அழைத்தால் கூட நான் விளையாட வரமாட்டேன்: அப்ரிடி ‘அந்தர் பல்டி’ பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி மீண்டும் வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் முதன்முதலில் தொடங்கும் போது டெக்கான் சார்ஜர்க்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அப்ரிடி அப்போது ஐபிஎல் போட்டியை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிற…

  2. கிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்…

  3. நான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ரா: மனம் திறக்கும் ராகுல் திராவிட் இந்த ஜனவரி 9, 2005-ம் ஆண்டு புகைப்படத்தில் சுனாமி நிதிதிரட்டல் ஆட்டத்திற்காக புகைப்படத்திற்கு நிற்கும் திராவிட், கிளென் மெக்ரா. | கெட்டி இமேஜஸ். இந்தியாவின் ‘சுவராக’ திகழ்ந்த ராகுல் திராவிட் தான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்தவர் கிளென் மெக்ராதான் என்று மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் ‘லிங்க் சொற்பொழிவு வரிசை’யில் நேற்று உரையாற்றிய ராகுல் திராவிட் கூறியதாவது: என் தலைமுறையில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இவர்கள் அனைவரிலும் நான் எதிர்கொண்ட மகா பவுலர், கிரேட் ஆஸ்திரேலிய பவுலர் மட்டுமல்லாத…

  4. சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு 4வது இடம்: ஜெர்மனி சாம்பியன் டிசம்பர் 14, 2014. புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. பைனலில் அசத்திய ஜெர்மனி அணி 10வது முறையாக கோப்பை வென்றது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 35வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில், ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் வெஸ்லே கிறிஸ்டோபர் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 58வது நிமிடத்தில் புளோரியன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பா…

  5. மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் தனது பொன்விழாவையொட்டி பெருமெடுப்பில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுத் தொடரை நாவாந்துறை மற்றும் குருநகர்வாசிகள் குழப்பி, மட்டுவில் வாசிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளனர். அண்மைக்காலமாக உதைபந்தாட்டத்தை விட, மல்யுத்தத்திலேயே அதிக அக்கறை காட்டும் நாவாந்துறை சென்.மேரில் மற்றும் குருநகர் பாடுமீன் ரசிகர்கள் மைதானத்திற்குள் கொலைவெறியுடன் மோதிக் கொண்டதால், பெரும் அல்லோலகல்லோலமே நிகழ்ந்தது. மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம் தனது பொன்விழாவை முன்னிட்டு அணிக்கு 7 பேரை கொண்ட உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இதை முன்னிட்டு பெருமெடுப்பில் மைதானம் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக தொடர் நடத்தப்பட்டது. இதற்காக மட்டுவிலை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் ஊரு…

    • 0 replies
    • 352 views
  6. "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்" சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவ…

  7. இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு புறப்பட்டது இந்­தி­யாவில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள மகளிர் சர்­வ­தேச இரு­பதுக்கு - 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள சஷி­கலா சிறி­வர்­தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷி­கலா சிறி­வர்­தன (அணித் தலைவர்), சமரி அத்­தப்­பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரண­சிங்க, டிலானி மனோ­தரா, பிர­சா­தனி வீரக்­கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்­கு­சூ­ரிய, உதே­ஷிகா பிர­போ­தனி, இனோக்கா ரண­வீர, சுகந்­திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்­சிமா கரு­ணா­ரட்ன, நிபுணி ஹன்­சிகா, ஹர்­ஷிதா மாதவி ஆகி­யோர் இடம்­பெ­று­கின்­றனர். http://www.virakesari.lk/article/3069

  8. மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங். - படம். | கெட்டி இமேஜஸ். பிரையன் லாரா. - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு மு…

  9. ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற மேர்­சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்­டத்தில் சேர்­பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் ­கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்­களில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார். புற்­தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்­பி­ய­னான பின்னர் புற்றரையில் நடால் சம்­பி­ய­னா­கி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். இரு­வ­ருக்கும் இடை­யி­லான இறுதி ஆட்­டத்தின் முத­லா­வது செட் யார் வெற்றி­பெ­றுவார் எனக் கூற முடி­யாத அள­வுக்கு கடு­மை­யாக மோதிக்கொள்ளப்­பட்­டது. சம­நிலை முறிப்­பு­வரை நீடித்த முத­லா­வது செட்டில் கடும் முயற்­சிக்குப் பின…

  10. 42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பி…

  11. தோனி ஒரு பிரமாதமான கேப்டன்; வலுவான தலைவர்: கில்கிறிஸ்ட் புகழாரம் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பை தோனியிடமிருந்து விராட் கோலிக்கு மாற்ற வேண்டும் என்ற ஆஸி.முன்னாள் கேப்டன் இயன் சாப்பலின் கருத்தை ஆடம் கில்கிறிஸ்ட் மறுதலித்தார். வுலாங்காங் என்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது: "நான் நிறைய முறைக் கூறிவிட்டேன். அவர் எப்போது இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வந்தாரோ அப்போது முதல் நான் இதைத்தான் கூறி வருகிறேன். அவர் ஒரு பிரமாதமான கேப்டன் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்று தோனியின் தலைமையில் …

  12. டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …

  13. இயன் சேப்பல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆ…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …

  15. ஐரோப்பியப் போட்டியில் 100-வது கோல் அடித்து சாதனை படைத்தார் மெஸ்ஸி! நம்ம ஊரு ஐ.பி.எல் போட்டியைப் போல ஐரோப்பாவில் கால்பந்து சாம்பியன் லீக் போட்டிகள் மிகப் பிரபலம். பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸி, ஐரோப்பியப் போட்டியில் 100-வது கோல் அடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இவரது 100-வது கோல்மூலம், பார்சிலோனா அணி அடுத்த சுற்றுக்கு இடம்பிடித்திருக்கிறது. நேற்று நடந்த போட்டியில், பார்சிலோனா அணி ஒலிம்பியோஸ் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது. போட்டியின் 61-வது நிமிடத்தில், ஃப்ரி கிக் மூலம் கோல் அடித்து அசத்தியிருக்கிறார், மெஸ்ஸி. தற்போது, பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக இருக்கும் எர்னஸ்…

  16. ‘கிரிக்கெட்டில் இவர் பரவாயில்லையே!’- கோலியின் அரைசதம் குறித்து எசெக்ஸ் கிரிக்கெட் கேலி ட்வீட் படம். | ஏ.எப்.பி. கெம்ஸ்போர்டில் இந்திய அணியும் எசெக்ஸ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி விராட் கோலி உள்ளிட்டோரின் அரைசதங்களுடன் 395 ரன்கள் எடுக்க எசெக்ஸ் அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் ரன் இயந்திரமான இந்திய கேப்டன் விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் எடுத்தார், பிறகு 93 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஒரு 3 பந்து நீங்கலாக சரளமாகவே ஆடினார், இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் எடுத்து இடது கை வேகப்பந்து…

  17. அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 98ஆவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம், நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, செவில்லா அணியுடனான போட்டியை கோலின்றி சமநிலையாக்கியதன் மூலம் பயேர்ன் முனிச் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்டத்தின் கடைசி இரண்டு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (11) நடைபெற்றன. இதில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக ஜுவன்டஸ் மூன்று கோல்களை புகுத்தி அதிர்ச்சி வெற்றியை பெற்றபோதும், துரதிஷ்டவசமாக மேலதிக நேரத்தில் எதிரணிக்கு பெனால்டி க…

  18. யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்­றிக்­கிண்­ணத்­திற்­கான போட்­டிகள் நேற்று ஆரம்­ப­மா­கி­ன. முத­லா­வது போட்­டி­யாக கரம் போட்டி யாழ். மாவட்ட செய­ல­கத்தில் நேற்று ஆரம்­ப­மா­னது. இன்றும் இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. பூப்­பந்­தாட்டம் எதிர்­வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­திலும் யாழ். இரா­ணுவ நீதி­மன்ற மைதா­னத்­திலும், கால்­பந்­தாட்டப் போட்­டிகள் எதிர்­வரும் 14 மற்றும் 15ஆம் திக­தி­களில் யாழ். குரு­நகர் பாடுமீ ன் விளை­யாட்டு மைதா­னத்­திலும் பாசையூர் சென். அன்டனி மைதா­னத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளன. வலைப்­பந்­தாட்டம் மற்றும் கரப்­பந்­தாட்டப் போட்­டிகள் எதிர்­வரும் 22ஆம் திகதி நாயன்­மார்க்­கட்டு பாரதி வ…

  19. தோல்விக்குக் காரணம் சாஹலின் நோ-பால்: சுனில் கவாஸ்கர் விமர்சனம் யஜுவேந்திர சாஹல். - படம். | ஏ.பி. வாண்டரர்சில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு டேவிட் மில்லர் பவுல்டு ஆன சாஹலின் நோ-பால்தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சாஹல் நோ-பாலில் மில்லர் பவுல்டு ஆன போது அவரது தனிப்பட்ட ஸ்கோர் 7 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்பு முனை என்று நான் கருதுகிறேன். ஏ.பி.டிவில்லியர்சும் ஆட்டமிழந்து விட்டார், மில்லர் அப்போது சாஹல் பந்துகளைக் கணிப்பதில் திணறிக் கொண்டிருந்தார். இந்திய அண…

  20. Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொர…

  21. ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…

  22. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களுக்கு ஐ.சி.சி. ஒப்புதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்ற போதே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்களை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடவுள்ளன. டெஸ்ட் லீக் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டி…

  23. ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்­பிய நாடுகள் பொது­வாக கால்­பந்­தாட்டம் அல்­லது றக்பி விளையாட்டுக்­களில் அதிக ஈடு­பாடு காட்­டு­வதை நாம் கண்­ணுற்­றுள்ளோம். ஆனால் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மான பின்னர் ஐரோப்­பிய நாடு­களில் கிரிக்கெட் ஆர்வம் அதி­க­ரித்­துள்­ள­துடன் பல நாடுகள் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இணை உறுப்பு நாடு­க­ளா­கவும் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான முன்­னோடி தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது20 கிரிக்கெட் முன்­னோடி தகு­திகாண் போ…

  24. ஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி: பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்! கடந்த 12மாதங்களில் விளையாட்டு முலம் அதிகம் சம்பாத்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார். அண்மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மேனி பேக்கியோவை வீழ்த்தியதால் மட்டும் 1200 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதித்திருந்தது. குறிப்பிடத்தக்கது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர் தற்போது படுக்கையில் பணக்கட்டுகளை போட்டு அதன் மேல் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களை மேவெதர் வைத்துள்ளார்.…

  25. ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம் Image courtesy - Skysports ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின் சம்பியன்களுக்கு இடையிலான UEFA சுப்பர் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்திய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழக அணி சம்பியனானது. மசிடோனிய தலைநகர் ஸ்கொப்ஜியில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசெமிரோ மற்றும் இஸ்கோ ஆகியோர் கோல்போட்டு ஆதிக்கம் செலுத்த, ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிகொண்டது. இதன்மூலம் சினேடின் சிடேனின் பயிற்றுவிப்பின் கீழான ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் UEFA சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அந்த அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.