Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நியூசிலாந்து அணியின் 303 ரன்களை விரட்டி சென்று வீழ்த்தியது ஜிம்பாப்வே! நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களை விரட்டி சென்று வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குப்தில் 11 ரன்னிலும் லாதம் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வில்லியம்சனும் ராஸ் டெயிலரும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வில்லியம்சன் 102 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ராஸ் டெயிலர் 122 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ம…

  2. விளையாட்டுச் செய்தித் துளிகள் - 02/08/2015 # நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. # 700 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் 28-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 40 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. # வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து ச…

  3. வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நீக்கம் மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு…

  4. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன்200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இரு…

  5. கனேரியாவிடம் 5 கோடி ரூபா அபராதம் கோருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் சபை கிரிக்கெட் தடைக்குட்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் டனிஷ் கனேரியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் செலவினத் தொகையான 249,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை (சுமார் 5 கோடியே 6 இலட்சம் ரூபா) பெற்றுத்தர உதவுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றிடம் ஆங்கிலேய கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசெக்ஸ் பிராந்திய அணிக்காக 2009இல் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின்போது கனேரியா ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012இல் அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை செய்திருந்தது. அத்துடன் 100,000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் அபராதத்தையும் சபை விதித்திருந்தது. …

  6. நான் எப்போதுமே பொறுப்புடன்தான் ஆடிவருகிறேன்: விராட் கோலி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சென்னையில் விராட் கோலி ஆடிய போது.. | படம்: ஜோதி ராமலிங்கம். ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள், உலகக்கோப்பையில் 1 சதம் ஆகியவற்றுக்குப் பிறகு பெரிதாக சோபிக்காத விராட் கோலி, அது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘நான் எப்பவும் பொறுப்புடனேயே ஆடிவந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். பிசிசிஐ டிவி இணையதளத்தில் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது: “ஒரு பேட்ஸ்மெனாக நான் எப்போதும் பொறுப்புடனேயே ஆடியிருக்கிறேன், அதாவது கிரிக்கெட் ஆட்டத்தை நான் ஆடும் விதத்தில் பொறுப்புடனேயே அணுகியிருக்கிறேன். இது எங்கிருந்து வருகிறது என்றால், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வருகிறது, எனவே ஆக்ரோஷம் என்…

  7. சானியா மிர்ஷாவுக்கு விளையாட்டுத்துறையின் உயரிய 'ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது' விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' இந்த ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் சானியா மிஷ்ரா பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த 2013-14ஆம் ஆண்டில் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்வு செய்யப்பட வேண்டியவர்கள் குறித்து அற…

  8. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் கோலாலம்பூர்: வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை சீனாவின் பீஜிங் நகரம் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சியில் நடந்தது. அடுத்த (2018) போட்டி தென் கொரியாவின் பியான்சாங்கில் நடக்கவுள்ளது. வரும் 2022ல் நடக்கும் போட்டிக்கான நகரத்தை தேர்வு செய்ய கோலாலம்பூரில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.,) கூட்டம் நடந்தது. இதற்கான போட்டியில் பீஜிங் (சீனா), அல்மாட்டி (கஜகஸ்தான்), ஆஸ்லோ (நார்வே), ஸ்டாக்ஹோம் (சுவீடன்), கிராகோ (போலந்து), லிவிவ் (உக்ரைன்) என 6 நகரங்கள் துவக்கத்தில் இருந்தன. பீஜிங் வெற்றி: ஆனால் பீஜிங், அல்மாட்டியை தவிர மற்ற நகரங்கள் நிதி மற்றும்…

  9. பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு ஸிகோ சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க …

  10. ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பம் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3 வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாக போட்டி…

  11. தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு அர்ஜுனா விருது ! இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இங்கிலாந்தில் நடந்த ஒரு தொடரில் பங்கேற்றதால், விருது வழங்கும் விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில் , அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், அர்ஜுனா விருதை அஸ்வினுக்கு வழங்கினார். இந்திய அணிக்காக அஸ்வின் 25 டெஸ்ட் போட்டிகளில் விளைய…

  12. உலகக் கோப்பையை வென்றதன் நினைவாக கொழும்புவில் 96 மாடி கோபுரம் கடந்த 1996ஆம் ஆண்டு உலக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது. அதுவரை உலக கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட இலங்கை அணி விசுவரூபம் எடுத்தது இப்படிதான். அந்த வெற்றியை என்னென்றும் நினைவு கொள்ளும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்,பிரமாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. சுமார் 363 மீட்டர் உயரத்தில் 96 அடுக்குகளுடன் உருவாகும் இந்த கட்டிடம்தான் இலங்கையிலேயே மிக உயரமாக கட்டிடமானது ஆகும். இந்த கட்டிடத்தில் பொழுது போக்கு மையம், வணிக வளாகம், நீச்சர் குளம், உடற்பயிற்சி மையம், உள்ளிட்ட 366 அறைகள் அமைக்கப்படும்…

  13. ஒரு போட்டிக்கு ரூ.2.42 கோடி.. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரானது பேடிஎம்! மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு, அடுத்த நான்கு ஆண்டுகள் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) நிறுவனமே ஸ்பான்சராக செயல்பட உள்ளது. இது, இணையதள பேமென்ட் போர்ட்டலான 'பேடிஎம்' நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு 2014-15ம் ஆண்டுக்கான ஸ்பான்சராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு போட்டிக்கு ரூ.40 லட்சத்தை கட்டணமாக பிசிசிஐக்கு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது. இதனிடையே அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஸ்பான்சரை தேர்ந்தெடுக்க இன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும், மைக்ரோமேக்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்தான் பங்கேற்றன. 5 மணி…

  14. தழிழீழக்கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 8 மற்றும் 9 ம் திகதிகளில் வழமைபோல சூரிச் நகரில் நடைபெறவுள்ளது இப்போட்டிகளில் குறிப்பாக உதைபந்தாட்டப்போட்டிகளில் வழமைபோல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,நீண்ட இடைவெளிக்குப்பிறகு கனடா நாட்டிலிருந்தும் தெரிவு அணி கலந்துகொள்ளவுள்ளது. அந்த வகையில் இங்கே சுவிசிலிருந்தும் 2014/2015 தொடரில் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப்பெற்ற SC YOUNGSTAR Lyss SC ROYAL Bern YOUNGBIRDS FC Luzern SC THAIMAN Zug SC LIMMATHAL Baden ILLAM SIRUTHAIKAL SC Swiss தெரிவாகியுள்ளன. குழு நிலைத் தெரிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிக்கப்படவுள்ளன. தீபம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. SC Young Stars SC Ro…

  15. சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரெய்னா இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் நேற்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். 2005-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரெய்னா அறிமுகமானார். அதன்பிறகு வேகமாக வளர்ச்சி கண்ட ரெய்னா, ஒருநாள் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக உருவெடுத்ததோடு, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாகியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்துப் பேசிய ரெய்னா, “சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இந்த 10 ஆண்டு பயணம் மிக மிக மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்தை வியக்கத்…

  16. மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் செய்யும் சேட்டையை பாருங்கள்! (வீடியோ) பர்மிங்காம்: விளையாட்டு மைதானத்திலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பேண்டை, சக வீரர் ஜோ ரோட்ஸ் கழற்றி விட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இரண்டு தொடர்களில், இரண்டு அணிகளும் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 3வது தொடர் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதன்முதல் நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 136 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது…

  17. முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகிக்க, நியூஸிலாந்தின் வேகப்பந்து முன்னாள் மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தற்போது டேல் ஸ்டெய்ன் 80-வது டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹேட்லியுடன் 2-…

  18. இரட்டை ஆதாய விவகாரம்: பிசிசிஐயின் முடிவுக்கு கங்குலி ஆதரவு இரட்டை ஆதாயம் பெறும் வகையில் எந்த பணியிலும் ஈடுபடவில்லை என மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உறுதியளிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் முடிவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியதால் இரட்டை ஆதாய விவகாரத்தில் சிக்கினார். ஐபிஎல் சூதாட்ட பிரச்சினை எழுந்தபோது இரட்டை ஆதாய விவகாரம் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளானது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து இரட்டை ஆதாய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதில் பிசிசிஐ தீவிரமாக இருக்கிறது. அது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கடிதம் எழுதி…

  19. சிஎஸ்கேவை காப்பாற்று.. சேப்பாக்கம் நோக்கி மஞ்ச சட்டையோடு ஆரவாரமாக கிளம்பும் ரசிகர்கள் சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிசிசிஐ அமைப்பை வலியுறுத்துவதற்காக SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் திறந்துள்ளனர் சென்னை ரசிகர்கள். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளனர். ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆய்வு செய்து அறிவித்திருந்தன. இந்நிலையில்தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுவதாக தெரி…

  20. டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும்இ இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது. இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத…

  21. 'டக் அவுட்' பிரபலம் லார்ட்சில் சதமடித்தது எப்படி? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர், எதுக்கு ரொம்ப ஃபேமஸ்னு கேட்டா... சின்னப்புள்ள கூட கண்ண மூடிட்டு சொல்லும் டக் அவுட்டுக்கு ரொம்ப பேமஸ்னு. அஜித் அகர்கர் தொடர்ந்து 7 முறை டக்அவுட் ஆகியெல்லாம் வரலாறு படைத்துள்ளார். இதில் 4 முறை, முதல் பந்திலேயே மனிதர் வெளியேறியிருக்கிறார். இப்படி 'டக் அவுட்' ஆகியே பிரபலம் ஆன அஜித் அகர்கர், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதே நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஜித் அகர்கர் 190 பந்துகளில், 109 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 1…

  22. டெஸ்ட் போட்டிகளில் எனக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை: சுரேஷ் ரெய்னா ஆதங்கம் 2011 இங்கிலாந்து தொடரில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆகி டக் அடித்த சுரேஷ் ரெய்னா. | படம்: ராய்ட்டர்ஸ். ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சருக்கு கண்களை மூடிக் கொண்டு எம்பிக் குதிக்கும் சுரேஷ் ரெய்னா. | படம்: ஏ.எஃப்.பி. தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது குறித்து அளித்த பேட்டியில் கூறும்போது, “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட ரன்கள் எடுத்தேன். ஆனால், 2012-ம் ஆண்டு 3 டெஸ்ட் இ…

  23. அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…

  24. பத்திரிகையாளரை தாக்கிய மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம் ! பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதால் மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த 'கான்காப்' தங்க கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி, இறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை வென்ற 24 மணி நேரத்துக்குள், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா, தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த திங்கட்கிழமை பிலடெல்பியா விமான நிலையத்தில் வைத்து, அஸ்டெகா தொலைக்காட்சியின் நிருபரான கிறிஸ்டியன் மார்ட்டினோலியின் முகத்தில் மிகுவேல் குத்தியுள்ளார்…

  25. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார். | கோப்புப் படம். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது. கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார். ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.