Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்: மலிங்கா இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார். கொழும்பு: கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:- காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் …

  2. கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் ஓர் அரிய சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன்( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது …

  3. ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார். தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்…

    • 0 replies
    • 345 views
  4. இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல்…

  5. வட்மோருக்கு ICCஇல் பதவி வியாழக்கிழமை, 08 மே 2014 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தன…

  6. அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…

  7. 2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி…

  8. முரளிக்கு திடீர் அழைப்பு - இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில், செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று (08) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தோடு,…

  9. இலங்கையின் புதிய அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவின் சாதனைத் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிக்கும் சீகுகே பிரசன்னா. | படம்: ஏ.எஃப்.பி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் …

  10. அனித்தா மீண்டும் சாதனை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் அனித்தா புதிய சாதனை படைத்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை இந்தப் போட்டி நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சாத்வீகா கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 2.82 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து படைத்திருந்த சாதனையை, நடப்பு வருடத்தில் அனித்தா 3.10 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து முறியடித்து தங்கம் வென்றார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹெரினா 2.80 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், சாத்வீகா 2.70 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.…

  11. மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன நியமனம் 2016-11-18 20:31:34 எதிர்வரும் இண்டியன் பிறீமியர் லீக் 2017 சுற்றுப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்குமுன் முன் மும்பை இண்டியன்ஸ் பயிற்றுநராக பதவி வகித்த, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20756#sthash.PFbkh…

  12. இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகத்தை வீழ்த்தி ஏ.ஐ.ஏ. கிண்­ண சம்பியனானது இலங்கை இராணுவம் (நெவில் அன்­தனி) ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் ஏ.ஐ.ஏ. கிண்­ணத்­திற்­காக நேற்று நடை­பெற்ற ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் அசேல குண­ரட்­னவின் அதி­ர­டியின் உத­வி­யுடன் தமிழ் யூனியன் கழ­கத்தை 5 விக்­கெட்­களால் இரா­ணுவம் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது. சனிக்­கி­ழமை நடை­பெற்ற இரண்­டா­வது அரை இறு­தியில் சிங்­க­ளவர் விளை­யாட்டுக் கழ­கத்தை வீழ்த்­திய இரா­ணுவம் நேற்­றைய தினம் தமிழ் யூனி­யனை வெற்­றி­கொண்­டது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­த…

  13. பன்­னாட்டு ஆட்­டங்­க­ளில் விரை­வில் லசித் மலிங்க பன்­னாட்டு கிரிக்­கெட் அரங்­குக்கு விரை­வில் மலிங்க வரு­வார் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் இலங்கை அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் ஹத்துரு சிங்க. அண்­மைக்­கா­ல­மாக இலங்கை அணி­யில் இருந்து புறக்­க­ ணிக்­கப்­பட்­டு ­வ­ரும் மலிங்க, தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான ரி-20 ஆட்­டத்­துக்­கான இலங்கை அணி­யி­லும் இடம்­பெ­ற­வில்லை. இத­னால் மலிங்­க­வின் சகாப்­தம் முடி­வுக்கு வரு­கி­றதா என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் நிலை­யில் இவ்­வாறு தெரி­வித்­தார் ஹத்­து­ரு­சிங்க. ‘‘மலிங்க எங்­க­ளு­டைய திட்­டத்தை முழு­மை­யான நிறை­வேற்ற வேண்­டும் என்று தேர்­வுக் குழு விரும்­பு­கி­றது. அவர் உள்­ளூர் ஆட்­டங்­க­ளில…

  14. ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சாதனையை முறியடித்த லியாம் மாலோன் லியாம் மாலோன் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் மாற்றுத் திறனாளர் (பாராலிம்பிக்) ஒலிம்பிக் போட்டிகளில் நியூஸிலாந்து மாற்றுத் திறனாளி தடகள வீரரான லியாம் மாலோன், தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நியூஸிலாந்தில் உள்ள நெல்சன் நகரை சேர்ந்த 22 வயது இளைஞரான லியாம் மாலோன், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் 200 மீட்டர் டி 44 போட்டி பிரிவில், பந்தய தூரத்தினை 21.06 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த பிரிவில், பந்தய தூரத்தை ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 21.30 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிட…

  15. ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) விதிமுறைகளை மீறும் வகையில் அண்மைக்காலமாக தொடர்ந்து மந்த கதியில் பந்துவீசி வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இது போட்டியை தாமதப்படுத்தும் செயல் என ஐ.சி.சியின் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார். இதன்படி, ஐ.சி.சியின் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளி…

    • 1 reply
    • 345 views
  16. டோக்கியோ ஒலிம்பிக் மைதானங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் டோக்­கி­யோவில் நடை­பெ­ற­வுள்ள 2020 ஒலிம்பிக் போட்­டி­க­ளின்­போது, மைதா­னங்­க­ளுக்கு பிளாஸ்டிக் போத்­தல்கள் கொண்டு செல்­வதை அனு­ம­திக்க முடிவு செய்­துள்­ளனர். ஜப்பான் தலை­நகர் டோக்­கி­யோவில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடை­பெறவுள்­ளன. சமீ­பத்­திய போட்­டி­க­ளின்­போது, பயங்­க­ர­வாத தடுப்பு நட­வ­டிக்­கையின் ஒரு பகு­தி­யாக, மைதா­னங்­க­ளுக்கு பிளாஸ்டிக் போத்­தல்­களில் எந்த திர­வப்­பொ­ருளும் எடுத்துச் செல்­லக்­கூ­டாது என பார்­வை­யா­ளர்­க­ளுக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், ஜப்­பானில் வெயிலின் தாக்கம் மிக கடு­மை­யாக இருக்கும். மைதா­னங்­க­ளுக்கு பார்­வை­யா­ளர்கள் பி…

  17. இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் கோலி இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் விராட் கோலி. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்திய மண்ணில் விராட் கோலி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், அவர் தென்ஆப்பிரிக்கா, இ…

  18. தோனி போல் வருமா? கீப்பர்-பேட்ஸ்மென் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்; ரிஷப் பந்திடம் பொறுமை காட்டுங்கள்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கெட்டி இமேஜஸ். இந்திய அணியில் டெஸ்ட் விக்கெட் கீப்பிங் தோனி ஓய்வு பெற்ற பிறகே பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவது கூட சந்தேகம் என்ற நிலையில் ரிஷப் பந்த்தின் சந்தேகத்துக்குரிய பார்ம் இப்போது சிக்கலாகியுள்ளதால் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்த்ரேலிய முன்னாள் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் தன் கருத்தை வெளியிட்டபோது கூறியதாவது: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து …

  19. கிரிக்கெட் அணிகளும் பயிற்றுநரின் தேசிய அடையாளமும் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இன்று பயிற்­று­நர்­களின் தேசிய அடை­யா­ளங்கள் குறித்து எந்த அணி­களும் அக்­கறை கொண்­ட­தா­கவோ அதனால் கவலை கொண்­ட­தா­கவோ தெரி­ய­வில்லை. ஆனால் இலங்கை இந் நிலைமை தலை­கீ­ழாக இருக்­கின்­றது. லோர்ட்ஸ் டெஸ்டில் இங்­கி­லாந்து வெல்ல மென்ச்­செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் அதே அணி பாகிஸ்­தா­னினால் பதம் பார்க்­கப்­பட்­டது. ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இங்­கி­லாந்து பயிற்­றுநர் சக்லெய்ன் முஷ்­தாக்கும் ஆர்வ மிகு­தி­யுடன் உரை­யா­டி­ய­வண்ணம் இருந்­தனர். …

  20. இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது- மகேல கவலை hare இலங்கையில் கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது என முன்னாள் அணித்தலைவர் மகேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது இருக்குமிடத்திலிருந்து பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ள மகேல ஜயவர்த்தன நாங்கள் தற்போது மிகவும் கீழே உள்ளோம் தரவரிசைப்பட்டில் இதனை தெளிவாக புலப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதி குறித்து இலங்கை இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை இந்த விடயத்தில் இலங்கை ஒத்துழைக்க மறுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த நிலை எதனை…

    • 0 replies
    • 345 views
  21. இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வ…

  22. சாதனைகள் பல புரிந்தாலும் சங்ககாராவுக்கு மிஞ்சியது வருத்தம்தான்! உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். '' உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற முடிவு செய்திருந்தேன். ஆனால…

  23. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் மொரின்ஹோ செல்சி அணியின் முன்னாள் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் ஒப்பந்தத்துக்கு முன்னரான உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர், அக்கழகத்தின் முகாமையாளராக மொரின்ஹோ நியமிக்கப்படாதுவிடின், அவருக்கு 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொரின்ஹோ, அதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவித்த போதிலும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இ…

  24. இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…

  25. மோசமான உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்து நியூஸி. இணையதளம் வேடிக்கை உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவிக்க நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அணிக்குத் தலைவர் இயன் மோர்கன் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'Not First XI' என்ற பெயரில் நியூசி. இணையதளம் ஒன்று இந்த அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனை கேப்டனாக அறிவித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சரியாக செயல்படாத வீரர்கள் கொண்ட அணியை வேடிக்கையாக அறிவித்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.