விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பாகிஸ்தானுடனான தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என்கிறார் மெத்யூஸ் பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ‘‘பல்லேகலையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 377 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தபோது நாங்கள் சிறந்த நிலையில் இருந்ததாக நான் கருதினேன். எனினும் இறுதியில் அடைந்த தோல்வியை ஜீரணிப்பதற்கு நிச்சயமாக சில காலம் செல்லும். எமது அணியினரிடமிருந்து இத்தகைய ஆற்றல் வெளிப்பாடுகளை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணியினரோ கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர்’…
-
- 0 replies
- 225 views
-
-
''மதுவை தொட்டதுமில்லை... தொடுவதுமில்லை '' - இந்திய கேப்டன் தோனி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி நேற்று கேக் வெட்டுவதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பில் சில சுவரஷ்யங்களை பகிர்ந்து கொண்டார். நான் மதுவை தொட்டதே இல்லை. ஆனால் அது சுவையானது என்பதை மற்றவர்கள் கூறுவதை வைத்து புரிந்து கொண்டிருக்கிறேன்.அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிராவிட் இவர்கள் தான் என்னுடைய ஹீரோக்கள். பொறுமை என்றால் என்ன என்பதை ராகுல் டிராவிட்தான் கற்றுக் கொடுத்தவர். பைக்குகளின் மீதான தீராத காதல் பற்றி டோனி கூறுகையில்,புதியது- பழையது என்று எல்லாம் பார்க்க மாட்டேன். எல்லாமே எனக்கு பிடிக்கும்.என்னிடம் டுகாட்டி பண்டா, ஹார்லே பேட் பாய், அமெரிக்காவில் தயாரிக்கப்படு…
-
- 2 replies
- 846 views
-
-
தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 326 views
-
-
அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …
-
- 0 replies
- 372 views
-
-
டி20 போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் அடித்து கிறிஸ் கெயில் வரலாற்று சாதனை! இருபது ஓவர் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா டல்லாவஸ் அணியுடன் லூசியா சூக்ஸ் அணி மோதியது. முதலில் பேட் செய்த லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் 57 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஜமைக்கா அணி பேட் செய்தது. தொடக்க வீரர் வால்ட் 76 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். இத்துடன் கிறிஸ் கெயில் டி20 வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தார். அத…
-
- 0 replies
- 220 views
-
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்! காலே: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் க…
-
- 2 replies
- 446 views
-
-
ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்! உலகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா? வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை ஆஷஸ் தொடரின் 69வது த…
-
- 2 replies
- 395 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. டி வில்லியர்ஸ் 2 ரன்னிலும் குயின்டன் டி காக் 12 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து டுப்லெசிசும் டுமினியும் வங்க தேச பந்துவீச்சை எதிர்கொண்டனர். டுப்லெசிஸ் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். டுமினி 18 ரன்களில் வெளியேறினார். கடைசிக்கட்டத்தில் ரூசவ் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு எதிராக கலக்கிய முஸ்தாபீசூர் ரஹ்மா…
-
- 1 reply
- 314 views
-
-
இலங்கை வந்தது பாக் . அணி இலங்கை அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி விளையாடுவதற்காக பகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோர் வருகைதந்துள்ள…
-
- 33 replies
- 1.7k views
-
-
பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …
-
- 0 replies
- 320 views
-
-
5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மிதாலிராஜ்! மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்ககளை கடந்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரின் 4வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து இந்திய 44.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், 53 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை மிதாலி ராஜ்…
-
- 0 replies
- 319 views
-
-
கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது... என்ன செய்யப் போகிறார் யுவராஜ் சிங்? பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யூவீகேன் வென்ச்சர்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். முதலீட்டு நிறுவனமான இதன் மூலம் ஆன்லைனில் நிதி திரட்ட யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். தனது புதிய நிறுவனத்தில் ரூ. 50 கோடி ரூபாயை யுவராஜ்சிங் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் 80 சதவீதம் இவருடைய பங்காகவும் மீதி 20 சதவீதம் யுவியின் நண்பரும் நிறுவனத்தின் துணை நிறுவனருமான நிஷாந்த் சிங்காலின் பங்காகவும் உள்ளது. தனது நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங்காலின் அறிவுரைப்படியே இந்த நிறுவனத்தை யுவராஜ் சிங் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் 300 கோடி ரூபாய் அளவுக்க…
-
- 0 replies
- 241 views
-
-
விருதும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... புலம்பியபடி வெளியேறிய மெஸ்சி! பொதுவாகவே அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும் தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. கால்பந்து தனிநபர் போட்டி அல்ல. பார்சிலோனாவில் கையாள்வது பெரும்பாலும் ஸ்பெயினின் டிக்கி டாக்கா ஆட்டம். டிக்கி டாக்காவால் எதிரணி வீரர்களுக்கு பந்து அவ்வளவாக கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது மிக எளிதாக கோலுக்குள் பந்து போகும். அது தவிர அங்கே சேவி, இனியஸ்டா போன்றவர்கள் மெஸ்சிக்கு பந்தை சப்ளை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அர்ஜென்டினா அணியில் பார்சிலோனாவின் ஜேவியர் மச்சரானோ, பாரீஸ் செயின்ட் ஜெ…
-
- 0 replies
- 350 views
-
-
ஜூலை 7: 'கேப்டன் கூல்' தோனி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர் இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம். இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்தத…
-
- 1 reply
- 2.4k views
-
-
என்னைத் தாக்கியதற்கு வார்னர் கூறும் காரணம் நகைப்புக்குரியது: ஜோ ரூட் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. அடங்கிய ஆஷஸ் தீ மீண்டும் பல்வேறு விதங்களில் மூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கினார். இதற்கு வார்னர் கூறிய காரணம் என்னவெனில், வார்னர் நண்பரிடமிருந்து ‘விக்’ ஒன்றை பிடுங்கிய ஜோ ரூட் அதனைத் தனது கன்னத்தில் தாடியாக ஒட்டிக்கொண்டார். இது தென் ஆப்பிரிக்க்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் தாடியை கேலி செய்வது போல் இருந்தது, இதனால்தான் ஜோ ரூட்டைத் தாக்கினேன் என்றார் வார்னர். இதனையடுத்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட், இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்…
-
- 0 replies
- 299 views
-
-
பார்முலா 1 : கிண்ணத்தை வென்றார் ஹமில்டன் பார்முலா 1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் பார்முலா 1 போட்டியின் 9ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூரமான 306 கிலோ மீட்டர் இலக்கை மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் 1 மணி 31 நிமிடம் 27.729 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து கிண்ணம் வென்றார். ஜேர்மனி வீரர்கள் ரோஸ்பெர்க் 2ஆவது இடத்தையும் செபஸ்டியன் வெட்டல் 3ஆவது இடத்தையும் பெற்றனர். 19 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் ஹமில்டன் 194 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஸ்பெர்க் 177 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்…
-
- 0 replies
- 235 views
-
-
மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம் நடப்பு சம்பியன் ஜப்பான், தலா இரண்டு தடவைகள் சம்பியன்களான ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, ஒரு தடவை சம்பியனான நோர்வே உட்பட 24 நாடுகள் பங்குபற்றும் ஏழாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கனடாவில் நாளை ஆரம்பமாகவுள்ளன. வென்கூவர், எட்மொன்டன், வின்னிபெக், ஒட்டாவா, மொன்ட்றியல், மொன்க்டொன் ஆகிய நகரங்களில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசியாவிலிருந்து நடப்பு உலக சம்பியன் ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும். தாய்லாந்து தீர்மானமிக்க போட்டியில் வியட்நாமை வெற்றி கொண்டே இறுதிச் சுற்றில் விளை…
-
- 26 replies
- 1.4k views
-
-
றயன் ஹரிஸ் அதிர்ச்சி ஓய்வு சர்வதேசப்போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெறுவதாக, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் றயன் ஹரிஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் சேர்க்கப்பட்டிருந்த 35 வயதான றயன் ஹரிஸ், அத்தொடரின் முதலாவது பயிற்சிப் போட்டியில் பங்குபற்றியிருந்ததோடு, இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக உபாதைக்குள்ளானார். அவருக்கு நீண்ட காலமாக வலது முழங்காலில் காணப்பட்ட உபாதையில், புதிதாக உபாதை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் வெளிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக அவர் ஆஷஸ் தொடர் முழுவதிலும் பங்குபற்றமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வருமா…
-
- 2 replies
- 325 views
-
-
கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்! தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. 44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன. இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அ…
-
- 31 replies
- 2k views
-
-
'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…
-
- 0 replies
- 270 views
-
-
பப்புவா நியுகினியில் பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மைக்ரோனீசிய (சமஷ்டி அரசுகள்)அணிக்கு எதிராக 38-0 என்ற வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிஜி அணி வீரர் அட்டோனியோ துய்வுனா தனியாக 10 கோல்களை அடித்துள்ளார். 2001-ம் ஆண்டில், அமெரிக்க சமோவா அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா 31-0 என்ற வெற்றியை பெற்று படைத்திருந்த உலக சாதனையே இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.com/tamil/sport/2015/07/150705_fiji_football
-
- 0 replies
- 283 views
-
-
டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…
-
- 0 replies
- 294 views
-
-
தோனி பந்து வீசுவதை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வரும் நவம்பர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெருமையை நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் பெறுகின்றன. போட்டியை அடிலெய்ட் மைதானம் நடத்துகிறது. இந்த போட்டிக்காக பிரத்தியேகமான 'பிங்க்' வர்ண பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கோகும்பரா நிறுவனம் இந்த 'பிங்க்' வர்ண பந்துகளை தயாரித்துள்ளது. பலவிதமான சோதனைகளுக்கு பிறகு 'பிங்க்' வர்ண பந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபபயணம் செய்தது. அப்போது மெல்பர்ன் மைதானத்தில் சேனல் 9 'பிங்க்' வர்ண பந்தை வீசி பரிசாத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து பார்த்…
-
- 0 replies
- 264 views
-
-
கோபா அமெரிக்காவை வெல்ல 99 ஆண்டுகள் காத்திருந்த சிலி : மெஸ்சி குடும்பத்தினர் மீது தாக்குதல் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 99 ஆண்டு கால வரலாற்றில் சிலி அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தியது. அதே வேளையில் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த லயனல் மெஸ்சி குடும்பத்தினர் மீது சிலி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்பட்டது. சான்டியாகோ நகரில் நடந்த இந்த போட்டியில் 120 நிமிட நேர ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்…
-
- 0 replies
- 284 views
-
-
64 பந்துகளில் 158 ரன்கள் குவித்து சொந்த சாதனையை சமன் செய்த மெக்கல்லம்! நாட்வெஸ்ட் தொடரில் நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கல்லம் 11 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் விளாசி தனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளார். நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பிர்மிங்ஹாம் அணி வீரர் பிரன்டென் மெக்கல்லம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 64 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்கல்லம் 158 ரன்களை அடித்தார். இதில் 42 பந்துகளில் மெக்கல்லம் சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். மெக்கல்லமின் அதிரடியால் பிர்மிங்ஹாம் அணி 20 ஓவர்களில் 242 ரன்களை குவ…
-
- 1 reply
- 341 views
-