விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி - பிரித்வெய்ட்டின் சதம் வீண் ஜூன் 23, 02:18 AM உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் கோதாதவில் இறங்கின. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றமாக காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்செல் மற்றும் கேப்ரியல், டேரன் பிராவோ ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஆஷ்லே நர்ஸ் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்…
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கை திணறல் Friday, 15 February, 2008 04:12 PM . பெர்த், பிப். 15: பெர்த்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் திணறி வருகிறது. . பெர்த்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ ஹைடன் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில்கிறிஸ்ட் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்துகளை அடித்து நொறுக்கி விளையாடி சதமடித்தார். 107 பந்துகளில் அவர் தனது சதத்தை நிறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏலம் போன வீரர்களுக்கான தொகையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளும் [22 - February - 2008] [Font Size - A - A - A] இந்திய பிரிமியர் லீக் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம். அதில் 4 பேர் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறமுடியும். அணியின் சொந்த இடங்களைச் சேர்ந்த 4 பேரும், 22 வயதுக்குட்பட்ட 4 பேரும் அணியில் இடம்பிடிப்பார்கள். பிரிமியர் லீக் போட்டிக்கான 75 வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். அவர்கள் மொத்தம் 144 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார்கள். அணி வீரர்கள் ஏலம் போன தொகையையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளின் விபரமும் வருமாறு: சென்னை அணி: …
-
- 0 replies
- 897 views
-
-
தோள் பட்டை வலிக்காக டேல் ஸ்டெயினுக்கு வித்தியாசமான சிகிச்சை! தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்காக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் தெனாப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தோள்பட்டை வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து அவர் விலகினார். அடிக்கடி தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால், இந்த முறை டெல் ஸ்டெயினுக்கு ஹைபெர்பெரிக் முறையிலான ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, முழுவதும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஒரு தனி சேம்பரில் டேல் ஸ்டெயின் அடைக்கப்பட்டார். இந்த ச…
-
- 0 replies
- 503 views
-
-
பாகிஸ்தான் சென்று விளையாட பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு By Mohammed Rishad - பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் எனவும், டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என …
-
- 0 replies
- 474 views
-
-
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வென்று, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 4 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி, மவுன்ட் மவுன்கனோய் (( Mount Maunganui)) பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 60 ரன்களும், கே.எல். ராகுல் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களும் சேர்த்தனர். இதைத்…
-
- 0 replies
- 554 views
-
-
கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகல் அப்ரீடி. | கோப்பு படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷாகித் அப்ரீடி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்ரீடி நேற்று அறிவி…
-
- 0 replies
- 392 views
-
-
கிரிக்கெட்டிலும் இனவெறி: நான் அதை சந்தித்துள்ளேன்- கிறிஸ் கெய்ல் சொல்கிறார் அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கறுப்பின மக்கள் இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:- மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது …
-
- 0 replies
- 690 views
-
-
என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு? -பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன. …
-
- 0 replies
- 457 views
-
-
ஹாக்கி: பெல்ஜியத்திடம் காலிறுதியில் இந்தியா தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்தது பெல்ஜியத்துடனான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சோகத்தில் இந்திய வீரர்கள் | படம்: ஏ.பி. ஹாக்கியில் வெண்கலமாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது, காலிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. முதலில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் பெல்ஜித்தின் செபாஸ்டியன் டாக்கியர் 2 கோல்களை அடிக்க பெல்ஜியம் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி சமன் செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, கடைசி கவுன்ட்டர் அட்டாக்கில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 3-வது கோலை அடித்து இந்திய வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்தார். …
-
- 0 replies
- 451 views
-
-
இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள அலிஸ்டயார் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அணியில் எதுவித மாற்றமுமின்றி அதே அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 9 ம் தி…
-
- 0 replies
- 324 views
-
-
இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், சிற்றி, ஆர்சனல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், வட்போர்ட், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக, எம்ரே கான்,டெஜான் லொவ்ரென், ஜோயல் மட்டிப், ரொபேர்ட்டோ…
-
- 0 replies
- 260 views
-
-
விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் டிசம்பர் 28, 2014-ல் மெல்போர்னில் சதம் எடுத்துத் துள்ளிக் குதிக்கும் கோலியை பார்க்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்…
-
- 0 replies
- 325 views
-
-
உதைபந்தாட்ட வீரர்களுக்கு வித்தியாசமான காரணத்தால் விளையாடத் தடை முறையற்ற சிகையலங்காரத்துடன் விளையாடவிருந்த நாற்பத்தாறு உதைபந்தாட்ட வீரர்களைத் தடை செய்திருக்கிறது ஐக்கிய அரபு இராச்சிய உதைபந்தாட்டச் சம்மேளனம். மேலும், சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் ‘மோஹோக்’ மற்றும் ‘காஸா’ போன்ற சிகையலங்காரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு சவூதியின் தேசிய உதைபந்தாட்ட அணி கோல் காப்பாளர் வலீத் அப்துல்லாவுக்கும், அவரது சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளுமாறு போட்டி நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. சவூதியில் உ…
-
- 0 replies
- 384 views
-
-
மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம் IM பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு. முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோ…
-
- 0 replies
- 650 views
-
-
உமர் அக்மலுக்கு போட்டித் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உமர் அக்மல், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச மான மொழியில் வசை பாடினார் என்றும் தேசிய கிரிக்கெட் அகடமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்றும் ஊடகங்கள் மூலமாக குற்றஞ்சாட்டியதால் அவர் போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ளார். அத்துடன் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/25239
-
- 0 replies
- 377 views
-
-
சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியர் இடையிலான மோதல் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். …
-
- 0 replies
- 275 views
-
-
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எதிரணி வீரரை கடித்தமைக்காக உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சொரஸ் நான்கு மாத தடைக்கு உள்ளானர். அந்த தண்டனையை குறைக்குமாறு கோரி சொரஸ் மற்றும் உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனதினால் மீள் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீள் முறையீட்டை ஏற்பதில்லை என்ற முடிவை சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீள் முறையீட்டுக் குழு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னரும் இதுபோன்ற இரு சம்பவங்களில் சொரஸ் ஈடுப்பட்டமையே இந்த கடும் தண்டனைக்கு காரணம் ஆகும். லூயிஸ் சொரஸ் நான்கு மாதங்களுக்கு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு செல்ல முடியாது, 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது என்ற வ…
-
- 0 replies
- 367 views
-
-
2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2023ம் ஆண்டு இந்தியா தனித்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார். 2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தனித்து நடத்த உள்ளது. இதேபோல 2016ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மற்றும், 2021ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையும் இந்தியாவிலேய…
-
- 0 replies
- 436 views
-
-
சதத்துக்குப் பிறகு காயமடைந்தும் ராஸ் டெய்லர் 181 நாட் அவுட்: இங்கிலாந்தின் 335 ரன்களை விரட்டி நியூஸி. வெற்றி 181 நாட் அவுட்! அபார இன்னிங்ஸை ஆடிய ராஸ் டெய்லருக்குக் குவியும் பாராட்டுக்கள். - படம். | ஏ.எஃப்.பி. டுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் சதங்களைப் பின்னுக்குத்தள்ளியது ராஸ் டெய்லரின் 181 நாட் அவுட். இங்கிலாந்தின் 335 ரன்கள் இலக்கை வெற்றிகரமான விரட்டி நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க இங்கிலாந்து அணி 38-வது ஓவரில் 267/1 என்ற நிலை…
-
- 0 replies
- 186 views
-
-
பணமோ, ஆட்டத்தின் வேகமோ... குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கே தோனி பொருத்தமானவர்: மார்டின் குரோவ் தோனியின் டெஸ்ட் போட்டி கேப்டன்சி ‘தர்க்கமற்றதாக’ இருக்கிறது என்று கூறிய நியூசி.முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ், ஒருநாள், டி-20 கிரிக்கெட்டிற்கே அவர் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: "டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் துறந்து விட்டால் அவரது விந்தையான, கிரிக்கெட்டிற்குப் புறம்பான கேப்டன்சியிலிருந்து இந்திய அணி விடுபடும். 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடாமல் சரணடைந்த போது கூட டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் தோல்வி பற்றி பெரிதாகக் கவலைப் பட்டது போல் தெரியவில்லை. அவரது அணித…
-
- 0 replies
- 371 views
-
-
சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..! ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில், சென்னை எஃப்.சி அணியும் பெங்களூரு எஃப்.சி மோதின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடித்து சமப்படுத்தினார். 48-வது நிமிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்…
-
- 0 replies
- 394 views
-
-
அணியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார் ரவி சாஸ்திரி: சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிராக 75 பந்துகளில் சதம் எடுத்த சுரேஷ் ரெய்னா அணியின் வெற்றிக்கு ரவி சாஸ்திரி போட்டிக்கு முன்னால் அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ளார். "போட்டிக்கு முன்பாக அணி வீரர்கள் கூட்டத்திற்கு வந்த இயக்குனர் ரவி சாஸ்திரி சிறிய உரையாற்றினார். அது மிகவும் உத்வேகமூட்டுவதாக அமைந்தது. மேலும் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் வரும்போது அவர் என்னருகில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் ‘தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்து’ என்றார். மேலும் ஒரு முன்னாள் வீரரிடம் பேசும்போது வித்தியாசமான ஒரு சவுகரியம் ஏற்படுகிறது. மற்ற பயிற்சியாளர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தாலும், ரவி சாஸ்திரியி…
-
- 0 replies
- 332 views
-
-
17ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் 2014-09-19 11:21:08 ஆசிய விளையாட்டு விழாவின் 17ஆவது அத்தியாயம் தென் கொரியாவின் இன்சொன் நகரில் அமைந்துள்ள பிரதான விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறும் கோலாகல தொடக்க விழா வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடக்க விழாவில் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன. நாடுகளின் அணிவகுப்பு, ஆசிய விளையாட்டு விழா கொடியேற்றம், ஆசிய விiளாயட்டுத் தீபம் ஏற்றல், வீர, வீராங்கனைகள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் சார்பிலான சத்தியப் பிரமாணங்கள் என்பன ஆரம்ப விழா வைபவத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகளாகும். இப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13000 வீர, வீராங்கனைகள் பங்…
-
- 0 replies
- 553 views
-
-
80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று இந்த வருடம் சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த(15) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்தி…
-
- 0 replies
- 365 views
-