விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.
-
- 4 replies
- 552 views
-
-
6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. பாதுகாப்பு கருதி அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வந்த நிலையில், 2009-ல் அங்கு சுற்றுப் பயணம்…
-
- 4 replies
- 404 views
-
-
சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 9 replies
- 638 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 395 views
-
-
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…
-
- 0 replies
- 264 views
-
-
அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக். நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்…
-
- 0 replies
- 323 views
-
-
வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமினிக்காவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்ல அவர், அங்குள்ள டக்ளஸ் விமானநிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை சோதனையிட்ட அதிகாரிகள் ஃபிளெட்சரின் பைகளில் வெடிமருந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஃபிளெட்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 2 replies
- 542 views
-
-
8ஆவது ஐ.பி.எல். ஏப்ரல் 8 இல் ஆரம்பம் 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இப் போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான …
-
- 449 replies
- 23.8k views
-
-
பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெற்றிருக்கவில் லை. தற்போது சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0…
-
- 0 replies
- 296 views
-
-
சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி? அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை…
-
- 6 replies
- 529 views
-
-
400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலர்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸில் வெள்ளியன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். தனது 400-வது டெஸ்ட் விக்கெட்டாக மார்டின் கப்திலை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ஏ.எஃப்.பி. மார்டின் கப்தில், ஆண்டர்சனின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஆண்டர்சன் இந்த சாதனையை 104-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்லார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பந்து வீச்சாளர் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிகிறார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். இதற்கு ம…
-
- 0 replies
- 374 views
-
-
'மோசடி' கேட்சை எடுத்து லாராவை வீழ்த்தியதில் பெருமிதம் தேவையா? - ஸ்டீவ் வாஹ் மீது ரிச்சர்ட்ஸ் பாய்ச்சல் 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ந்தன. முதலில் ஆம்புரோஸ், ஸ்டீவ் வாஹ் நடத்தை மீது தனது விமர்சனத்தை பகிரங்கமாக தனது சுயசரிதையில் எழுதினார். தற்போது ஆஸ்திரேலிய அணி, மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து பழைய சர்ச்சைகள் கிளம்புகின்றன என்றாலும் ஸ்டீவ் வாஹ் பிடித்த ‘மோசடி’ கேட்சிற்கு பிரையன் லாரா வெளியேறியது உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசடிகளில் புகழ்பெற்றது. 1995-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவு…
-
- 0 replies
- 422 views
-
-
பங்களாதேஷ் டெஸ்டிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர்இ 3 ஒருநாள்இ 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பங்களாதேஷ் போட்டி தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டது. இதில் டிவில்லியர்ஸின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் டிவில்லியர்ஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். முதல் முறையாக ரீஜா ஹென்ரிக்ஸ்இ டேன் விலாஸ், ஆரோன் பாங்கிசோ, காஜிசோ ரபடா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்டெயின்இ பிலாண்டர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/05/29/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%…
-
- 0 replies
- 314 views
-
-
தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ். "கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம். தோனி நிறைய …
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது. http://www.tamilmirror.lk/146567#sthash.k7WMmZeX.dpuf
-
- 24 replies
- 3.3k views
-
-
சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது: அஜிங்கிய ரஹானே வென்றார் 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இலங்கையின் குமார் சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட, சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை அஜிங்கியா ரஹானே வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது கபில் தேவுக்கு வழங்கப்பட்டது. ரஞ்சி சாம்பியனான கர்நாடக அணியின் கேப்டன்/பவுலர் வினய் குமார் ஆண்டின் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். 264 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசி உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. அஜிங்கிய ரஹானேவுக்கு சுனில் கவாஸ்க…
-
- 1 reply
- 394 views
-
-
பாக்., வீரருக்கு 2 ஆண்டு தடை * ஊக்கமருந்து விவகாரத்தில் நடவடிக்கை கராச்சி: ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரேஜா ஹசனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் ரேஜா ஹசன், 22. ஒரே ஒருநாள் போட்டி, 10 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் ‘பென்டாங்குலர்’ கோப்பை தொடரின் போது நடத்தப்பட்ட சோதனையில், ஹசன் ‘கோகைன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணைக்கு 14 நாட்களுக்குள் வர வேண்டும் என, கடந்த மார்ச் 24ல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) விடுத்த அழைப்பை, ஹசன் ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த இவர், லாகூர் ஓட்டல் ஒன்ற…
-
- 0 replies
- 457 views
-
-
டெஸ்ட் இன்னின்சில் 2 தொடக்க வீரர்களும் டக் அவுட்: சுவையான புள்ளி விவரங்கள் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் ரன் எடுக்காமல் முறையே ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான். | கோப்புப் படம். நியூஸிலாந்து அணியில் 6 முறை இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர். அது பற்றிய சுவையான புள்ளி விவரம் வருமாறு: லார்ட்ஸில் இவ்வாறு 3 முறை நடந்துள்ளது. இதில் நியூஸிலாந்து அணி 2 முறை இத்தகைய துரதிர்ஷ்ட…
-
- 0 replies
- 509 views
-
-
இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவிக்கு டிரெவர் பேலிஸ், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரிடையே போட்டி நிலவி வந்த நிலையில் இப்போது பேலிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இங்கி லாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ டிரெவர் பேலிஸ், பயிற்சி யாளராக நிறைய சாதித்துள்ளார். கிரிக்…
-
- 0 replies
- 507 views
-
-
முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கிலும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிலும் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதல் இரண்டு தினங்களில் சாதனைகள் பல நிலைநாட்டப்பட்டுள்ளன. கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வலல்ல ஏ. ரட்நாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்ஷனி மற்றும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இருவரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனைகளை நிலைநாட்டினர். எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவிய ஹர்ஷனி தங்கப் பதக்கத்தை…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜாம்பவான்களின் இருபதுக்கு 20 : மஹேலவுக்கு அழைப்பு முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரிமியர் லீக் இருபதுக்கு20’ தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெ ளியாகியுள்ளது. சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையிலேயே ஜாம்பவான்க ளுக்கான இருபது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹேலவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…
-
- 1 reply
- 464 views
-
-
மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இதன் கிங்பின் இருப்பது துபாயில் என்பதும், ஒரு சில வீரர்களை வளைத்துவிட்டால், மொத்த போட்டியையும் மாற்றிவிடலாம் என்பதும் இந்த சூதாட்டத்தின் சூத்திரங்கள். ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடக்கூட, அதன்மீதான சூதாட்ட மதிப்பும் கூடிக்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடர்பான சூதாட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்கியுள்ளதாக கூறுகின்றனர் அமலக்கப்பிரிவு அதிகாரிகள். பெயர் வெளியிடப்பட விரும்பாத சூதாட்டக்காரர் ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு, சூதாட்டத்துக்கான பணம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. கிரிக்கெட் இருக்கும்வரை பெட்டிங்கும் இ…
-
- 0 replies
- 397 views
-
-
மைதானத்துக்குள் நுழைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞர்: கோபமடைந்த பெடரர் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மைதானத்திற்குள் இருந்த போது மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் ரோஜர் பெடரர் கோபமடைந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்று வரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நேற்று ரோஜர் பெடரர் - அலெஜாண்ட்ரோ பல்லா இருவரும் மோதினர். இப்போட்டியில் பெடரர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் அலெஜாண்ட்ரோவை வெற்றி கொண்டார். இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், இளம் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையெல்லாம் மீறி, பெடரர் அருகில் சென்றார். திடீரென அந்த ரசிகர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றார். இது, …
-
- 6 replies
- 610 views
-
-
இந்தியா, தென் ஆப்ரிக்கா: சென்னையில் மோதல் கோல்கட்டா: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி நேற்று அறிவித்தது. இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்…
-
- 0 replies
- 425 views
-
-
'ஸ்லெட்ஜிங்' செய்வது ஒருநாள் கைகலப்பில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை எதிரணி வீரர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால் என்றாவது ஒருநாள் மைதானத்திலேயே கைகலப்பு நடக்கப் போகிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் எச்சரித்துள்ளார். "நான் விளையாடும் காலக்கட்டங்களில் ஸ்லெட்ஜிங் கிடையாது. ஒரு சில வீரர்கள் சிலர் பற்றி ஓரிரு வார்த்தைகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் பார்ப்பதெல்லாம் என்னவெனில் பெவிலியனுக்குச் செல்லும் போது ஒருவர் முகத்துக்கு நேராக ஒருவர் சில வசைகளை பொழிவதையே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவிடையே நடந்த…
-
- 0 replies
- 645 views
-