விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:- அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:- இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித…
-
- 0 replies
- 887 views
-
-
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கா? சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்காரா களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்காரா இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார். சச்ச…
-
- 0 replies
- 665 views
-
-
தோனி போல் வருமா? கீப்பர்-பேட்ஸ்மென் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்; ரிஷப் பந்திடம் பொறுமை காட்டுங்கள்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கெட்டி இமேஜஸ். இந்திய அணியில் டெஸ்ட் விக்கெட் கீப்பிங் தோனி ஓய்வு பெற்ற பிறகே பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவது கூட சந்தேகம் என்ற நிலையில் ரிஷப் பந்த்தின் சந்தேகத்துக்குரிய பார்ம் இப்போது சிக்கலாகியுள்ளதால் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்த்ரேலிய முன்னாள் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் தன் கருத்தை வெளியிட்டபோது கூறியதாவது: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து …
-
- 0 replies
- 345 views
-
-
உலக கிரிகெட் கிண்ணம் - 2007 போட்டியின் கள நிலவரத்தை உடன் அறிய இச் சுட்டியை அழுத்துங்கள் http://www.vcricket.com/Full/default.aspx?...date=03/29/2007
-
- 0 replies
- 1.3k views
-
-
கோலியை மரியாதையா நடத்தணும்.. இப்படியா கேலி பண்றது? சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோலி பேட்டிங் செய்ய வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் "பூ" என சப்தமிட்டு அவரை அவமரியாதை செய்தனர். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கும் கண்டித்துள்ளனர். கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோஷமிடுவது அல்லது திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல. ஆஸ்திரேலிய ரசிகர்கள் அட்டகாசம் மேற்கத்திய நாடுகளில் ஒரு பிரபலத்தை கேலி செய்ய, அவமானப்படுத்த "பூ" என் சப்தமிடுவது வழக்கம். கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றது முதல் பல்வேறு சமயங்களில் அவரை இப்படி சப்தமிட்டு அவமானப்படுத்தி வருகின்றனர் சில ஆஸ்திரேலிய ரசிகர்கள். ரிக்கி பாண்டிங் கண்டனம் பெர்த், ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முன்னோடி கால் இறுதிகளில் விளையாடுவதற்கு யாழ்ப்பாணம் சிங்கிங் ஃபிஷ் கழகமும் மன்னார் புனித சூசையப்பர் கழகமும் தகுதிபெற்றுள்ளன. எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த மாவட்டங்களிலிருந்து இரண்டு கழகங்கள் முன்னோடி கால் இறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும். ப்றீமியர் லீக் முதலாம் பிரிவு போட்டிகளில் விளையாடிவரும் நியூ ஸ்டார் கழகத்தை சிங்கிங் ஃபிஷ் கழகமும் பலம்வாய்ந்ததும் கடந்த வருடம் கால் இறுதிவரை முன்னேறிய இலங்கை போக்குவரத்துச் சபை விளையாட்டுக் கழகத்தை பிரபல்யம் குன்றிய மன்னார் புனித சூசையப்பர் கழகமும் வெற்றிகொண்டன. களனி மைதா…
-
- 0 replies
- 271 views
-
-
17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய சாதனையை முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
உலக கோப்பை: ஒரே பிரிவில் பிரான்ஸ், நெதர்லாந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து (2018) தொடருக்கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன. வரும் 2018ல் ரஷ்யாவில் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன. இதில் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் மோதும் அணிகளின் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 52 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறும். ஒவ்வொரு பிரிவிலும் 2வது இடம் பிடிக்கும் அணிகளில் இருந்து சிறந்த 8 அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றில்…
-
- 0 replies
- 369 views
-
-
09 JUN, 2024 | 08:14 PM நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார். பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி, ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இங்கிலாந்து பாதுகாப்புப் படையினர், போலீசார், கமாண்டோக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது- சயனைடு ம…
-
- 0 replies
- 727 views
-
-
’’மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சொந்த நாட்டுக்கு விளையாடாதது கவலை’’ கிளார்க் December 21, 2015 அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இல்லாமல் திணறி வரும் நிலையில், அந் நாட்டு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுவது ஏமாற்றம் அளிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணி தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். தற்போது, மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.இந் நிலையில், ஹோபர்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 570 views
-
-
குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையால் இதுவரை, இது உறுதிப்படுத்தப்படவில்லை. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம் By Mohamed Azarudeen - மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்ததது. எனினும், குறித்த காலப்பகுதியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சில திருத்த வேலைகள் இருப்பதால் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கொழு…
-
- 0 replies
- 375 views
-
-
எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் சாதனைகள் என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏறக்குறைய எல்லாப் போட்டிகளிலும் எதாவது ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் முறியடிக்க முடியாத, முறியடிக்கப்படாத சாதனைகள் என்று கிரிக்கெட்டில் சிலவற்றைச் சொல்லலாம். அப்படி நீண்ட காலமாக முறியடிக்கப்படாத சாதனைகளைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம். `டான் ஆஃப் கிரிக்கெட்' ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் `ஆண்டவர்', டெஸ்ட் கிரிக்கெட்டின் `டான்' எனக் கெத்தாக வலம் வந்தவர் டான் பிராட்மேன். அவர் தன்வசம் வைத்துள்ள ஒரு சாதனை, 72 ஆண்டுகளாக ம…
-
- 0 replies
- 817 views
-
-
23 தங்கம் வென்ற பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மைக்கேல் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் இந்தப் ஒலிம்பிக் போட்டியோடு 23 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளார். 2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார் பெல்ப்ஸ். இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்துள்…
-
- 0 replies
- 377 views
-
-
செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி! “அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல். பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரி…
-
- 0 replies
- 513 views
-
-
ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ…
-
- 0 replies
- 419 views
-
-
டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி. இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழ…
-
- 0 replies
- 337 views
-
-
இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழம…
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…
-
- 0 replies
- 559 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…
-
- 0 replies
- 466 views
-
-
ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய, தனித்துவ டெஸ்ட் சாதனை விக்கெட் கீப்பராக டிவில்லியர்ஸின் அரிய சாதனை. - படம். | வீடியோவிலிருந்து பிடித்தது. ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய டெஸ்ட் சாதனை சாதனைகள் ஒருவரின் திறமையை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்று கூறப்படுவதுண்டு, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று சாதனைகளை நிகழ்த்தாவிட்டாலும் அவரது பன்முகத்திறமைக்கு இன்று நிகரான வீரர்கள் ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். ஓய்வு பெறும் வரையும் கூட திகைக்க வைக்கும் கேட்ச்கள், பீல்டிங்குகளைச் செய்துள்ளார், தன் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் …
-
- 0 replies
- 448 views
-
-
காத்திருக்கும் சாதனைகள்: விராட் கோலிக்கு 17 ரன்; தோனிக்கு 33 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி :கோப்புப்படம் இங்கிலாந்துத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஆகியோர் பல்வேறு சாதனைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு இந்தப் போட்டி 100-வது டி20 போட்டியாகும். பல்வேறு மைல்கல்லை இந்த 100 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் கடந்து வந்துள்ளது. இதில் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி என்பது முத்தாய்ப்பாகும். இங்கிலாந்து சென…
-
- 0 replies
- 584 views
-
-
‘பல்டி’ அடிக்க தடையா நவம்பர் 30, 2014. மும்பை: கால்பந்து போட்டிகள் கோல் அடித்தால் வீரர்கள் தலைகீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடும் ‘சோமர்சால்ட்’ முறைக்கு, தடை விதிப்பது குறித்து ‘பிபா’ யோசித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (16) இருப்பவர் ஜெர்மனி வீரர் குளோஸ், 36. இவர் கோல் அடித்தவுடன் அப்படியே தலை கீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடுவார். இதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தற்போது நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. இதில், தொடரின் முதல் கோல் அடித்தார் கோல்கட்டா வீரர் பிக்ரு. இதை விட, பிக்ரு ‘சோமர்சால்ட்’ முறையில், ‘டைவ்’ அடித்தது தான் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த …
-
- 0 replies
- 951 views
-