விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
காசாவிற்கு ஆதரவான செய்தி - ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் - உஸ்மான் கவாஜா காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்…
-
- 0 replies
- 551 views
-
-
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இலங்கை அணி மூன்றாம் இடத்தையும்,நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51418
-
- 0 replies
- 371 views
-
-
Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறிய ஓப்போ நிறுவனம்..: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் வருகிறது மாற்றம்! மும்பை: ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 க…
-
- 0 replies
- 833 views
-
-
கரம் போட்டியில் பசறை தமிழ்த் தேசிய கல்லூரி முதலிடம் Published on 2019-11-28 13:06:12 2019 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் இருபது வயதுக்கு கீழ்பட்டோருக்கான 'கரம் ' போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். குறித்த போட்டியில் வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (27/11/2019) பசறை தமிழ் தேசிய கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்காகிய கே.பிர…
-
- 0 replies
- 357 views
-
-
செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’ டி20 தொடர்: பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம். ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் த…
-
- 0 replies
- 291 views
-
-
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
மீண்டுமொரு சாதனை : ரங்கன ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்; 2016இல் 50 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கட்டுகளை வீழ்த்திய சாதனையின் பின்னர், இச் சாதனையை ரங்கன ஹேரத்; எட்டியுள்ளார் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை மீண்டும் இவர் வீழ்த்தியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளார். வெற்றியின் விளிம்பிலிருக்கும் இலங்கை அணி இறுதி நாளான இன்று வெற்றியடைய அதிக வாய்ப்பிருக்கின்றது. 7 விக…
-
- 0 replies
- 315 views
-
-
இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை http://www.thinaboomi.com/sites/default/files/storage/field/image/2020/11/05/thumb-890-395/Shevak-2020_11_05.jpg?itok=1vkPey3C ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந…
-
- 0 replies
- 718 views
-
-
இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்! உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெட…
-
- 0 replies
- 430 views
-
-
அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட் Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia — Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016 இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யி…
-
- 0 replies
- 533 views
-
-
வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது. பார்சிலோனா: உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப…
-
- 0 replies
- 305 views
-
-
"ஒரு தலைமுறையையே இலங்கைக் கிரிக்கெட் இழந்துவிட்டது" ஆதங்கத்துடன் லசித் மலிங்க ஒரு தலைமுறையையே இலங்கைக் கிரிக்கெட் இழந்துவிட்டது என்று லசித் மலிங்க ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்களின் விருப்பத்திற்கு புதிய இளம் வீரர்களை அணியில் சேர்த்து, சேர்த்தவர்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொண்டார்கள். அணி வீழ்ச்சியைக் கண்டுவிட்டது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக கண்டுவரும் தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் …
-
- 0 replies
- 615 views
-
-
மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்…
-
- 0 replies
- 353 views
-
-
விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம் நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி பெண்கள் பிரிவிலும், யாழ். மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. “சிவன் ஃபவுன்டேசன்” அனுசரணையில் யாழ்ப்பாணம் ம…
-
- 0 replies
- 420 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி! Chennai: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விட…
-
- 0 replies
- 228 views
-
-
பாக்.கிற்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 15 பேர்கொண்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையல் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் 2 ஆவது போட்டி 27 ஆம் திகதி கொழும்பில் பகலிரவு போட்டியாகவும் 3 ஆவது போட்டி 30 திகதி தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைவராக செயற்படுகின்றார். உபதலைவராக லகிரு திரிமன்னே கடமையாற்றுகின்றார். திலகரட்ண டில்சான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஸ் சண்டிமல், அசான் பி…
-
- 0 replies
- 472 views
-
-
பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும் தான் இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்ற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. இவ்வாற…
-
- 0 replies
- 337 views
-
-
எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா 1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூ…
-
- 0 replies
- 213 views
-
-
22 NOV, 2023 | 08:14 PM (ஜே.ஜி.ஸ்டீபன்) பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது. இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட்: சந்தர்பாலின் சாதனை சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால். சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம். உதாரணத்துக்கு ஒரு …
-
- 0 replies
- 426 views
-
-
உலக செஸ் சம்பியன் ஆனந்தின் செவ்வி விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆன்ந்த் வென்றுள்ளார். மெஸ்சிகோ நாட்டின் தலைநகரில் நடைபெற்ற போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியுறாமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு இரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உலகப் போட்டியினையும் அவர் வென்றிருந்தார். தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில், தமது இந்த வெற்றி குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனந்த் செவ்வி http://www.bbc.co.uk/mediaselector/check/t...am=1&nbwm=1 ஆனந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே விளையாடுவதை மிக அருகில் இருந்து பார்த்தவரும், அவருக்கு வழி…
-
- 0 replies
- 1.1k views
-
-
09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…
-
- 0 replies
- 329 views
-