விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வீரகேசரி இணையம் 2/13/2010 2:03:01 PM - இலங்கைத் துடுப்பாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 19 வயதுப் பிரிவினரின் மட்டுப்படுத்தப்படாத ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை எட…
-
- 0 replies
- 630 views
-
-
வடக்கின் கால்பந்தில் வரலாறு படைத்தது வலைப்பாடு ஜெகா மீட்பர் சுமார் 200 கழக அணிகள் பங்கெடுத்த யாழ், கிளிநொச்சி கழக அணிகளுக்கு இடையிலான மைலோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி ஆனைக்கோட்டை யூனியன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. இறுதியாக இடம்பெற்ற மைலோ கிண்ண தொடர்கள் நான்கில் மூன்றுதொடர்களை நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கடந்த வருடம் குருநகர்பாடும்மீன் அணியும் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஐந்தாவது முறையாக இத்தொடர் இடம்பெற்றது. இறுதிப் போட்டி …
-
- 0 replies
- 473 views
-
-
நான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்: ஸ்டெய்ன் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் அதுவே போதுமானது என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். "ஊக்கமளிக்கக் கூடிய வீரர்களான டிவிலியர்ஸ், வெர்னன் பிலாண்டர் ஆகியோரிடையே ஆடுவதே சிறந்தது. டிவிலியர்ஸ், ஆம்லா பேட் செய்வதைப் பார்ப்பது, வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சிறப்பாக ஆடுவதைப் பார்ப்பதே நம்மை ஒரு சிறந்த வீரராக மாற்றும். நான் இவர்களை விட சிறந்தவனாக விரும்பவில்லை, வெற்றி அணியில் அவர்களுடன் இருந்தால் போதும். நான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் முடிந்து போனாலும் கோப்பையை வென்றால் எனது கழுத்தைச் சுற்றி பதக்கம் க…
-
- 0 replies
- 522 views
-
-
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணிய…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை. https://thinakkural.lk/article/233786
-
- 0 replies
- 728 views
-
-
1970-களை ஞாபகப்படுத்தியிருக்கும் ஐஎஸ்எல்! ஒன்றல்ல, இரண்டல்ல…35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது கால்பந்து போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்க ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் மைதானத்தின் அருகில் உள்ள சாலைகள் முழுவதுமாக ஸ்தம்பித்தன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போராடியது காவல்துறை. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படியொரு பெரும் கூட்டம் கூடு…
-
- 0 replies
- 998 views
-
-
2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்! ``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி. ஆனால், கடந்த ஓராண்டாகவே தோனியின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது. ``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால்…
-
- 0 replies
- 439 views
-
-
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது- 10 பேர் பட்டியலில் எம்பாப்பே, கிரீஸ்மேன் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann பாரீஸ்: 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்…
-
- 0 replies
- 374 views
-
-
சிரிலங்காவுக்கு எதிரான மட்டையாட்டம் இங்கிலாந்து வெற்றி -தமிழர்கள் கொண்டாட்டம். சிங்களப் பேரினவாதத்தின் ஆசீர்வாதத்தினை பெற்ற அணியான சிரிலாங்காவின் மட்டையாட்ட விளையாட்டுத் தொடரில் இறுதியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ் வெற்றியினை பிரித்தனியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். தமிழர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வழியே சென்றவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்ததோடு தமிழீழத்தின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிரிலங்காவுடன இங்கிலாந்து விளையாடக்கூடாது என பிரித்தானிய தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புப் போராட்டம் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://rste.org/2011/07…
-
- 0 replies
- 878 views
-
-
பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் கொலை செய்யப்படும் முன் அவரை கடைசியாக சந்தித்த 2 பேரின் படம் வீடியோ கண்காணிப்புக் கமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் இருவரும் யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்த அடுத்த நாளான மார்ச் 18 ஆம் திகதி பயிற்சியாளர் பொப் வூல்மர் கிங்ஸ்டனில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ஜமேக்கா பொலிஸார் வூல்மர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். ஆனால், அவரை கொலை செய்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்த…
-
- 0 replies
- 836 views
-
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அ…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை வருகிறது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு இருபது – 20 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடர் இலங்கையின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இரண்டு இருபதுக்கு– 20 போட்டிகளும் கொழும்பில் நடைபெறவிருக்கின்றன. ஜூன் 17 முதல் ஜூலை 7ஆம் திகதிவரை டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின் றன. ஒருநாள் போட்டிகள் ஜூலை 11ஆம் திகதி முதல் ஜூலை 26ஆம் திகதி வரையும் நடைபெறும். இருபது – 20 முதல் போட்டி ஜூலை 30ஆம் திகதி…
-
- 0 replies
- 342 views
-
-
நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (நெவில் அந்தனி ) கத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின்போது 32 இலிருந்து 48 ஆக அதிகரிக்கவுள்ளதாக பீபா தலைவர் ஜியான்னி இன்பென்டீனோ கடந்த தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தத் திட்டத்தை மாற்றி 2022 இல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட…
-
- 0 replies
- 447 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது. இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது. மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது. ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளைய…
-
- 0 replies
- 636 views
-
-
யூரோ 2016இன் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டன அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு, உக்ரைன் தகுதிபெற்றுள்ளது. ஸ்லோவேனிய அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்தே, தங்களது இடத்தை உக்ரைன் உறுதிப்படுத்தியது. இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்லோவேனிய அணிக்கெதிராக, 1-1 என்ற கோல் கணக்கிலான சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்ட உக்ரைன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தகுதிபெற்றது. இதன்படி, யூரோ 2016இல் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி தகு…
-
- 0 replies
- 301 views
-
-
ஆபாச வீடியோ: சக வீரரை மிரட்டிய பிரான்ஸ கால்பந்து வீரர் கரீம் பென்ஜமா 'சஸ்பெண்ட்' ஆபாச வீடியோ எடுத்து சக வீரரை மிரட்டிய பிரான்ஸ் மற்றும் ரியல்மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள். இதற்கிடையே வல்புனா தொடர்புடைய ஆபாச வீடியோ டேப் ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து கரீம் பென்ஜமா, வல்புனாவை …
-
- 0 replies
- 752 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி காம்போ போட்டோ. | பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்த…
-
- 0 replies
- 409 views
-
-
ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது குவைத்!- ஆனால்... ஒலிம்பிக் போட்டியில் குவைத்தை சேர்ந்த, ஃபெகாய் அல் திஹானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் குவைத் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. ஆனால் பதக்கம் அதற்கு சொந்தமில்லை. ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்க குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் அரசின் தலையீடு இருந்த காரணத்தினால் குவைத் ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஓ.சி தடை விதித்தது. தடையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் குவைத் முறையிட்டது. ஆனால் தடையை நீக்க சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதே வேளையில், ஒலிம்பிக் கொடியின் கீழ் குவைத…
-
- 0 replies
- 557 views
-
-
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித் படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்ன…
-
- 0 replies
- 281 views
-
-
வசீம் அக்ரம் தலைமையில் இலங்கை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இலங்கை அணி வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்கவுள்ளார். குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த பயிற்சியில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், இலங்கை அணியானது 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்காக தயார்படுத்தும் நோக்கிலேயே திட்ட…
-
- 0 replies
- 368 views
-
-
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் என்ரே ரஸலுக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டனில் உள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழுவுக்கு தனது இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்காத குற்றச்சாட்டுக்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊக்கமருந்து சோதனை குழு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பலமுறை அவரை தொடர்புக்கொண்டு அவரது இருப்பிடம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதும் ரொஸல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரொஸல் எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் திகதிவரை கிரிக்கெட் விளையாடத் …
-
- 0 replies
- 304 views
-
-
42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பி…
-
- 0 replies
- 350 views
-
-
ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில…
-
- 0 replies
- 452 views
-
-
ஹேரத் விரும்பும் காலம் வரை தனது பாணியில் விளையாட வேண்டும் – ரிச்சர்ட் ஹார்ட்லி Image courtesy - Sportskeeda.com இலங்கை அணியின் இடது கை சுழல் ஜாம்பவான் ரங்கன ஹேரத் தான் விரும்பும் காலம் வரை கிரிக்கெட் உலகில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 400 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீரரான சேர் ரிச்சர்ட் ஹார்ட்லி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட்போட்டியின் போது ஹேரத் தனது 39வது வயதில் 400 விக்கெட்டுக்களைப் பெற்றுகிரிக்கெட் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். இதன் போது இச்சாதனையைபுரிந்த ரிச்சர்ட் ஹர்…
-
- 0 replies
- 494 views
-
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 384 views
-