Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நான் இங்கு கோலியைப் பற்றி பேச வரவில்லை: ஹேடின் தோனியின் ஓய்வு பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் கூறிய ஆஸி.விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கோலி பற்றிய கேள்விக்கு தவிர்ப்பு மனோபாவத்தில் பதில் அளித்தார். பிராட் ஹேடின் கூறியதாவது: “தோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜெண்டில்மேன். தோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர். இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் கேப்டனாக் நீடிக்க முடிந்துள்ளது. அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைக…

  2. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…

  3.  2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…

  4. யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழில் உள்ள அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=124023754426102012#sthash.H2o8hcRw.dpuf

  5. தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…

  6. சிம்பாப்வேயின் துடுப்பாட்ட பயிற்சியாளராக வட்மோர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி இழந்ததால் பயிற்சியாளராக பதயேற்ற 5 ஆவது மாத்திலேயே ஸ்டீபன் மான்கோனோ நீக்கப்பட்டார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவ…

  7. சங்கா தவறவிட்ட சாதனை 28-12-2014 ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார். இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடைய…

  8. மெல்போர்ன் ப்ளாஷ்பேக்: 1981 சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் கவாஸ்கர் 1981-ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸி. வீரர்களின் வாய்ப் பேச்சுக்குப் பதிலடியாக மறுமுனையில் இருந்த பேட்ஸ் மேனையும் அழைத்துக்கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறிய சம்பவத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். 1981-ல், இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கர், டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதாக கவாஸ்கர் நினைத்தார். ஆனால் நடுவர் ரெக்ஸ் ஒயிட்ஹெட…

    • 1 reply
    • 1.1k views
  9. எவரெஸ்ட் மலையில் வைக்கப்படும் பிலிப் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை அவுஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பலரும் அறிந்ததே. பல்வேறு வழிகளில் அவருக்கு அவுஸ்திரேலியா தரப்பிலும் உலக அளவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ்க்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையொன்றை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேபாள…

  10. பிரக்யான் ஓஜாவுக்கு தடை டிசம்பர் 27, 2014. புதுடில்லி: ஐ.சி.சி., நிர்ணயித்த விதிமுறையை மீறி பந்துவீசிய பிரக்யான் ஓஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்திய அணியின் சிறந்த ‘ஸ்பின்னர்’ பிரக்யான் ஓஜா, 28. டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியவர். இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) நிர்ணயித்த 15 டிகிரி அளவுக்கு கூடுதலாக முழங்கையை வளைத்து பந்துவீசுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், இவரது தவறு உறுதியானது. இதையடுத்து போட்டிகளில் பங்கேற்க இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தடை விதித்தது. இவர் விளையாடி வரும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு(எச்.சி.ஏ.,) தகவல் அனுப்…

  11. தன்னம்பிக்கை மிகுந்த ஆக்ரோஷமான கேப்டன் தேவை: தோனி மீது கங்குலி விமர்சனம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது. களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல…

  12. அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ் 27-12-2014 அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண த…

  13. சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …

  14. Boxing Day Tests: மூன்று டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை 25-12-2014 04 நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட். தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட். இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று நாளைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன. ஆனால், கிரைச்ட்சேர்ச்சில் நாளை ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கையின…

  15. மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான் ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார். பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது. வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார். இது குறித்து …

    • 5 replies
    • 592 views
  16. சிம்பாவே வீரருக்கு தடை 25-12-2014 சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர் மல்கொம் வொலர், பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வொலர், விதிமுறைகளை தாண்டி வீசுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது பந்துவீச்சு பாணியை பரிசோதனை செய்த நிபுணர்கள், அவரின் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கள் யாவும் 15 பாகை கோணத்தை விட அதிகமாக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/136406#sthash.finQ10tv.dpuf

  17. அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…

  18. உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் …

  19. வணக்கம் எல்லோருக்கும் ! பலருக்கு இது முகத்தைச் சுளிக்க வைக்கலாம், சிலருக்கு மகிழ்வாக இருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்ததை எழுதும் உரிமை எனக்கிருக்கிறதென்று நான் நம்புவதால் இதை எழுதுகிறேன். இன்றைய கிரிக்கெட் உலகில் பல வீரர்களைப் பார்க்கிறோம். எதிரணிப் பந்துவீச்சைத் துவசம் செய்து தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுபோகும் தனிமனித செயல்களை அவ்வப்போது காண்கிறோம். அந்த துடுப்பாட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் கூச்சலிடுவதும், வர்ணனையாளர்கள் உசாராகிவிடுவதும், களத்தடுப்பாளர்களும், பந்து வீச்சாளர்களும் கலக்கமடைவதும் நடக்கிறது. இப்படியான ஒப்பற்ற வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியாவின் டேவிட் வோர…

  20. யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம் திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது. கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை…

  21. நல்லது, கெட்டது இரண்டும் கலந்த 2014-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை 264 ரன்கள், எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பும் அயல்நாட்டுத் தோல்விகள், ஐபிஎல்-6-ல் குறித்த நீதிமன்ற வழக்குகள், பிசிசிஐ-யிலிருந்து சீனிவாசன் விலகியிருக்கக் காரணமான ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் என்று 2014-ல் இந்திய கிரிக்கெட் பன்முகம் எய்தியுள்ளது. ஈடன் கார்டனில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச 264 ரன்கள் சாதனை இந்த ஆண்டின் பிரதான கிரிக்கெட் உற்சாகமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அணி 264 ரன்கள் எடுத்தால் அது வெற்றிக்கான ஸ்கோர் என்ற நிலை மாறி ஒரு தனிப்பட்ட வீரர் 264 ரன்கள் என்பதாக ஒருநாள் கிரிக்கெட் வளர்ச்சி கண்…

  22. இதுதான் உலகம்: குக் வேதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்காத நிலையில் அலாஸ்டர் குக், தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதுதான் உலகம். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை. இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பி…

  23. சச்சினை முந்தியாச்சு டிசம்பர் 23, 2014. புதுடில்லி: சமூகவலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக ரசிகர்கள் பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை இளம் நட்சத்திரம் கோஹ்லி முந்தினார். ‘டுவிட்டரில்’ சச்சினை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். கோஹ்லியை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்தப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி (33,27,033 லட்சம்), சேவக் (31,80,081 லட்சம்) முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 5 மற்றும் 6வது இடம் முறையே யுவராஜ் (27,23,090 லட்சம்), ரெய்னா (26,17,828 லட்சம்) வகிக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களா…

  24. Started by நவீனன்,

    தோனி ‘10’ டிசம்பர் 23, 2014. பெங்களூரு: உலக கிரிக்கெட்டில் தனது 10 ஆண்டுகள் பயணத்தை பல்வேறு சாதனைகளுடன் நிறைவு செய்தார் தோனி. கடந்த 2004ல் டிச., 23ல் வங்கதேசத்துக்கு எதிரான சிட்டகாங் ஒருநாள் போட்டியில், தனது 23வது வயதில் இந்திய அணியில் அறிமுகமானார் தோனி. தற்போது 10 ஆண்டுகள் முடிந்து 11வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதுவரை 89 டெஸ்ட், 250 ஒருநாள், 50 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முதல் கேப்டன்: 2007ல் இந்திய ‘டுவென்டி–20’ அணிக்கு கேப்டனான இவர், முதல் தொடரிலேயே, உலக கோப்பை வென்று தந்தார். 1983ல் கபில்தேவ் சாதித்த, 28 ஆண்டுக்குப் பின் 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன் டிராபி (மினி உலக கோப்பை) வென்றுள்ளார். இந்த மூன்றிலும் சாம்ப…

  25. ஜேம்ஸ் பேட்டின்சன் வீசிய பவுன்சர் தாக்கியதில் நடுங்கிப் போன வாட்சன் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் நெற்றிப்பகுதியை தாக்க நடுங்கிப் போன வாட்சனை மருத்துவர் அழைத்துச் செல்லும் காட்சி. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆஸதிரேலிய வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று வாட்சனின் ஹெல்மெட்டைத் தாக்க வாட்சன் ஒருநிமிடம் ஆடிப்போனார். பிறகு மைதானத்தை விட்டு ஓய்வறைக்குத் திரும்பினார். பேட்டின்சனும் மேலும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மைதானத்திலேயே ஆஸி, அணி மருத்துவர் பீட்டர் பக்னர் முதலுதவி செய்ய பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். மிகவும் வருத்தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.