விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 356 views
-
-
2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள் கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆ…
-
- 0 replies
- 249 views
-
-
பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…
-
- 0 replies
- 608 views
-
-
ஹொங்கொங் T-20 யில் சங்காவின் அதிரடி ஆட்டம் வீணானது ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர். அவர்களில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சோபித்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 373 views
-
-
இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…
-
- 0 replies
- 170 views
-
-
தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங் தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: "எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வ…
-
- 0 replies
- 306 views
-
-
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …
-
- 0 replies
- 480 views
-
-
அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி- புதிய வீடியோ வெளியாகின்றது அவுஸ்திரேலிய வீரர்களிற்கு எதிரான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றுமொரு புலனாய்வு வீடியோவை அல்ஜசீரா வெளியிடவுள்ளது. இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2017 இல் ராஞ்சியில் இடம்பெற்ற டெஸ்டில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தனது முன்னையை வீடியோவில் அல்ஜசீரா குற்றம்சாட்டியிருந்தது. ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்த அல்ஜசீரா அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே அல்ஜசீரா புதிய வீடியோவொன்றை வெளியிடவுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ள…
-
- 0 replies
- 393 views
-
-
ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி? ஆர். அபிலாஷ் இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை: டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு: போனஸ் புள்ளிகள் …
-
- 0 replies
- 510 views
-
-
கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் அண்டி மரே இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் அண்டி மரே, அடுத்தவாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னீஸ் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மூன்று கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள ஆன்டி மரே, எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் இத் தொடருடன் தான் ஓய்வுபெற முடிவு செய்து இருப்பததாக கண்ணீருடன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிதான் எனது கடைசி தொடராக இருக்கும் என கருதுகிறேன். இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எனது சொந்த நாட்டில் நடக்கும் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 626 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான .கால் பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட சம்பியனானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி. ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லியோ சிறப்பான கோல் பதிவைச் செய்தார். https://newuthayan.com/story/11/சென்-பற்றிக்ஸ்-கல்லூரி-அ.html
-
- 0 replies
- 630 views
-
-
அறிமுக வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் ஆனந்த கண்ணீர் : சக வீரர்கள் நெகிழ்ச்சி! இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் இளம் வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது சக வீரர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. ஹராரேவில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட இளம் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது சந்தோஷம் மிகுதியால் மணீஷ் பாண்டே ஆனந்த கண்ணீர் வடித்தார். மூத்த வீரர் ஹர்பஜன்…
-
- 0 replies
- 377 views
-
-
ஐ.சி.சி., தரவரிசை:அஷ்வின் ‘நம்பர்–9’ துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 9வது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான் 32வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 21வது இடத்தில் உள்ளார். …
-
- 0 replies
- 352 views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி May 25, 2019 Cricket – ICC Cricket World Cup Warm-Up Match – Sri Lanka v South Africa – Cardiff Wales Stadium, Cardiff, Britain – May 24, 2019 South Africa players celebrate victory Action Images via Reuters/Andrew Boyers தென்னாபிரிக்காவுக்திரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது. நேற்றையதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இதனையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய …
-
- 0 replies
- 415 views
-
-
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷாத் கான் தற்போது ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவராக மாறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான், சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கொச்சியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனை ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு வரை அர்ஷாத் கானுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம் கிடைத்து வந்தது. அதற்கு பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், சிட்னி நகருக்க…
-
- 0 replies
- 307 views
-
-
யங் ஹீரோஸ் வீரர்களை வீழ்த்திய சிவனாந்த அணி By Mohamed Azarudeen - இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்து நடாத்தும் டிவிஷன் – II ஒருநாள் தொடரின் போட்டியொன்றில், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினை மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கின்றனர். ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது. அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் 38 ஓவர்களுக்கு அ…
-
- 0 replies
- 473 views
-
-
தடைகாலம் 4 ஆண்டுகளாக குறைப்பு: பதவியை ராஜினாமா செய்தார் பிளாட்டினி மைக்கேல் பிளாட்டினி சர்வதேச கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு இடை யில் எந்தவிதமான எழுத்து ஆவ ணங்கள் இல்லாமல் 2 மில்லி யன் சுவிஸ் பிராங்குகள் கைமாற்றப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது கடந்த பிப்ரவரி மாதம் 6 வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த தடையை நீக்கக்கோரி விளையாட்டு தொடர்பான குற் றங்களை விசாரிக்கும் தீர்ப் பாயத்தில் பிளாட்டினி மேல்முறை யீடு செய்தார். இதனை நேற்று விசாரித்த தீர்ப்பாயம் …
-
- 0 replies
- 221 views
-
-
இங்கிலாந்து மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்சனல் கழகம் 14ஆவது தடவையாக சம்பியனானது 2016-05-16 12:01:29 இங்கிலாந்தின் மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்சனல் மகளிர் அணி 14ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கத்தினால் 46ஆவது வருடமாக நடத்தப்பட்ட மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் செல்சி மகளிர் அணியை லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் எதிர்கொண்ட ஆர்சனல் மகளிர் அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் 18ஆவது நிமிடத்தி…
-
- 0 replies
- 340 views
-
-
இந்தியாவில் அயர்லாந்தை வரவேற்கிறது ஆப்கன் அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களை இந்தியாவில் உள்ள தனது தத்து மைதானமான கிரேட்டர் நொய்டா விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் முன்வந்துள்ளது. ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் அயர்லாந்தை எதிர்த்தாடவுள்ள ஆப்கானிஸ்தான், தொடர்ந்து நான்கு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது. இப் போட்டிகள் யாவும் அடுத்த வருடம் மார்ச் 8ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடர்கள் தங…
-
- 0 replies
- 332 views
-
-
இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ம் திகதி முதல் 22 ம் திகதிவரை இந்தப் போட்டிகள் இலங்கையின் 3 மாதானங்களில் இடம்பெற்றவுள்ளன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம், காலி சர்வதேச மைதானம், மாத்தறை உயன்வத்த மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தி…
-
- 0 replies
- 270 views
-
-
அபொட், டு ப்ளெசிஸின் திறமைகளால் தென் ஆபிரிக்கா 4 - 0 என முன்னிலை 2016-10-11 10:38:29 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட நான்காவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா 6 விக்கட்களால் இலகுவாக வெற்றியீட்டி தொடரில் 4 – 0 என முன்னிலையில் இருக்கின்றது. கைல் அபொட்டின் துல்லியமான பந்துவீச்சும் டு ப்ளெசிஸின் அபார துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை மண் கவ்வ வைத்தது. தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு ஆட்டமிழந்தனர். மிச்செல் மார்ஷ், மெத்யூ வேட் ஆகிய இருவரும் அரைச் சத…
-
- 0 replies
- 258 views
-
-
தென்ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நினைவில் தந்தை - மகனின் ஒற்றுமை தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஸ்டீபன் குக் அவரது தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தொடக்க பந்தை சந்தித்து வரலாற்று நினைவில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் முதல் பகல் - இரவு சர்வதேச போட்டி இதுவாகும். டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீபன் குக், எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி…
-
- 0 replies
- 391 views
-
-
சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு 2016/17 பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், புத்தளம் விம்பிள்டன் அணியை 12-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்ட சென்.மேரிஸ் அணி தமது ஆரதவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் தமது கடந்த போட்டியில் மன்னார் ஹில்லரி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட புத்…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சி…
-
- 0 replies
- 397 views
-
-
758 கோடி ரூபாய் கொடுத்து கிரிஸ்மானை வாங்க தயாராகும் பார்சிலோனா நெய்மர் அணியை விட்டு விலகுவதாக கூறி வருவதால் கிரிஸ்மானை 758 கோடி ரூபாய் கொடுத்து வாங்க பார்சிலோனா விரும்புகிறது. கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக பிரேசில் நாட்டின் நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேற விரும்புகிறார். கடந்த ஆண்டும் இதுபோன்று வெளியேறுவதாக கூறினார். இறுதியில் பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது பிரான்ஸ் நாட்டின் ம…
-
- 0 replies
- 352 views
-