விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண விபரம் : அக். 22ஆம் தேதி சென்னையில் மோதல் தென்ஆப்ரிக்க அணி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென்ஆப்ரிக்க அணி விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னரே இந்தியாவில் இருந்து கிளம்புகிறது. முதலில் நடைபெறும் டி20 போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்ரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் அக்டோபர் 22- ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. …
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள இந்திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற கவலையை நீடித்துக்கொண்டே இருக்கிறது. தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உட்பட பல்வேறு சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் தங்களுடைய சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சால் அசத்தியுள்ள இந்திய அணி இலங்கையில் மட்டும் ஜொலித்ததில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் இந்திய அணி 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ள…
-
- 77 replies
- 9.4k views
-
-
இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…
-
- 0 replies
- 462 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 227 views
-
-
-
- 1 reply
- 417 views
-
-
தரவரிசையில் சரிந்த கோலி... காரணம் என்ன? இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஸ்மித், வில்லியம்சன், இரட்டை சதமடித்த வார்னர், ராஸ் டெய்லர் ஆகியோர் தரவரிசையில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கின்றனர். பேட்டிங் தரவரிசை: தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடம் டி வில்லி…
-
- 0 replies
- 318 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது - 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 …
-
- 0 replies
- 519 views
-
-
மெஸ்சிக்கு சிறந்த வீரர் விருது ஜூரிச்:ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி தட்டிச் சென்றார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 2015ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, 28, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 30, பிரேசிலின் நெய்மர், 23, இடம் பெற்றனர். இதன் விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்தது. ஐந்தாவது முறை : எதிர்பார்த்த படியே சிறந்த வீரருக்கான 'பாலன் டி ஆர்' விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். கடந்த 2009 …
-
- 1 reply
- 748 views
-
-
மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்... February 13, 2016 10:09 am 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76994
-
- 0 replies
- 462 views
-
-
ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …
-
- 0 replies
- 354 views
-
-
வித்தியாசமான அணுகுமுறை: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்: தோனி யின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. புல் லென்த் பந்தை, அதிக வலுவுடன் அவர் தனது மணிக்கட்டு உதவியால் சிக்ஸருக்கு விரட்டுவது ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகும். http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 542 views
-
-
ட்ரிபிள் ஹிட் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..! டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது டி 20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டாட்டம்: புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்ட…
-
- 0 replies
- 456 views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 873 views
-
-
என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran
-
- 7 replies
- 3.3k views
-
-
பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கை அணியின் இளம் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்ன இலங்கையின் எதிர்காலத்திற்குரிய வீரர் என இலங்கை அணியின் தலைவரும் அடுத்த தொடரிலிருந்து இலங்கையின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கார காயமடைந்ததை அடுத்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட லஹிரு திரிமன்ன, அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்போது அவர் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்தொன்றையும் சந்திக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த லஹிரு திரிமன்ன, இரண்டாவது போட்டியில் மிகச…
-
- 6 replies
- 755 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 531 views
-
-
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்குகளில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்திய அதி சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் அரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் விருது விழாவின்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்குகளில் திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன. இந்த விருதுவிழாவின்போது வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிரதான விருது வழங்கப்படும். நடந்து முடிந்த …
-
- 5 replies
- 542 views
-
-
இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் …
-
- 38 replies
- 3.1k views
-
-
கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்! (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்ட…
-
- 0 replies
- 271 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 600 views
-
-
சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 465 views
-
-
ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும் ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம்பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு. இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப…
-
- 0 replies
- 441 views
-
-
தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இயன் மார்கன் சதத்தால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்ஸ்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. கேப்டன் இயன்மோர்கன் 93 பந்தில் 107 ரன் எடுத்தார். ஹால்ஸ் 61 ரன்னும்,…
-
- 0 replies
- 329 views
-