Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மைக்கேல் கிளார்க்கின் விசித்திர களவியூகத்தால் சர்ச்சை அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை நன்றாகத் தெரிவதற்காகத்தான் 'சைட் ஸ்க்ரீன்' வைக்கப்பட்டுள்ளது. சைட் ஸ்க்ரீன் நிலை சரியில்லை என்றால் பேட்ஸ்மென் ஓடி வரும் பவுலரையே கூட நிறுத்துவதை ந…

  2. அபுதாபியில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில்2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஆட்ட முடிவில் யூனிஸ் கான் 111 ரன்களுடனும் அசார் அலி 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை நிகழ்த்திய யூனிஸ் கான் இன்று சதம் கண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை எடுத்த 2வது பேட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். யூனிஸ் கானின் 27வது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1924-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்கிளிஃப் தொடர்ந்து 3 சதங்கள் எடுத…

  3. யூனிஸ் கான் - புத்துயிர் தரும் சாதனை நாயகன் யூனிஸ் கான் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தந்தை மற்றும் இரு சகோதரர்களின் மரணம் என நிறைய இழப்புகளைச் சந்தித்தவர். ஆனால் அவை எதுவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டவர் யூனிஸ் கான். அதுதான் இன்று அவரை பாகிஸ்தானின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக உருவாக்கியதோடு, உலக டெஸ்ட் அரங்கில் அவருக்கென்று தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தேர்வாளர்களுக்கு பதிலடி சில நேரங்களில் அவர் சர்ச்சையில் சிக்கியபோது அவரை நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற …

  4. சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…

  5. கால்பந்தாட்டத்தில் வட மாகாணத்திற்கு வெள்ளிப் பதக்கம் முன்னாள் இலங்கை வீரர் ஈ. பி. சன்னக்கவின் புத்திசாதுரியமான ஆற்றல்களின் உதவியுடன் வட மாகாண அணியை 3 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட தென் மாகாண அணி 40ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கால்பந்தாட்டத் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது. 2009இலும் 2012இலும் தங்கப் பதக்கத்தைத் தவறிவிட்ட வட மாகாணம் இவ்வருடமும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது. ஞாயிறன்று மின்னல் மற்றும் கடும் மழை காரணமாக 8 நிமிடங்களுடன் இடைநிறுத்தப்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நேற்றுக்காலை 10.10 மணியளவில் மீண்டும் தொடர்ந்தது. இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக 22ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ட…

  6. தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல் அக்டோபர் 28, 2014. புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த வார கடைசிக்குள் (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்…

  7. திராவிட் பாணியில் ஆஸி. வீரர்களுக்கு டீன் ஜோன்ஸ் அறிவுரை பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சனுக்கு அளித்த அறிவுரையை எதிரொலித்து டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது முதலில் வலைப்பயிற்சியில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்காப்பு அணியாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ். இதே அறிவுரையைத்தான் ராகுல் திராவிட் தனது மின்னஞ்சலில் கெவின் பீட்டர்சனிடம் தெரிவித்தார்: “கால்காப்பு அணியாமல் விளையாடும் போது, காலுக்கு முன்னால் பேட்டைக் கொண்டு வந்து ஆட அதிகம் முயற்சி செய்வோம். மேலும் பந்தை …

  8. 5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா வந்து அசத்தியுள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறை…

  9. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: டாப்-10-ல் இந்திய வீரர்கள் இல்லை ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வார்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வார்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ராஸ் டெய்லர், ஜோ ரூட், …

  10. தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கோல்கீப்பர் சென்ஸோ மெயீவா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற ஊரில் அவரது வீட்டில் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த 2 மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைய ஒருவர் வீட்டு வாசலில் காவலுக்கு நின்றார். துப்பாக்கியால் மெயீவாவை சுட்டுக் கொன்ற பிறகு 3 பேரும் தப்பிச் சென்றனர். கொலையாளிகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால் 14,000 டாலர்கள் அளிக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க கேப்டனும், கோல் கீப்பருமான சென்ஸோ மெயீவா வீட்டில் கொலையாளிகள் 7 பேர் இருந்ததாக போலீஸ் தரப்பினர் த…

  11. கிரிக்கெட்...கால்பந்து...ஹாக்கி! * ‘சகலகலா’ தோனி சாகசம் அக்டோபர் 25, 2014. ராஞ்சி: கிரிக்கெட்டில் சிகரங்களை தொட்ட தோனி, ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார். தற்போது ஹாக்கி அணியை வாங்கி தனது எல்லையில்லா விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர்களில் கோப்பை வென்றார். பைக் பிரியர்: கிரிக்கெட் போட்டி தவிர, பைக்குகள் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். 2013ல் ‘மகி ரேசிங் டீமை’ நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து வாங்கினார். ‘சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப்’ பந்தயங்களில் இந்த அணி …

  12. பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் லா லிகா உதைப்பந்தாட்ட போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், "கிளஸ்சிக்' மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மெட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால், ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டிய…

  13. தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங் தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: "எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வ…

  14. தோனியிடம் புதுமையும் இல்லை முனைப்பும் இல்லை: ஹோல்டிங் டெஸ்ட் போட்டிகளில் தோனியின் கேப்டன்சியில் புதுமையும் இல்லை, தன்முனைப்பும் இல்லை என்று மே.இ.தீவுகளின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் சாடியுள்ளார். இந்திய ஒருநாள் போட்டி அணியை கேப்டன்சி செய்வது “அவ்வளவு கடினமான வேலையல்ல” என்று தான் உணர்வதாக ஹோல்டிங் தெரிவித்தார். "ஒருநாள் போட்டிகளில் தோனிக்குப் பிரச்சினை இல்லை, கடினமும் இல்லை, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரிடம் புதுமையும் இல்லை தன்முனைப்பும் இல்லை. ஒருநாள் அணியை கேப்டன்சி செய்வது கடினமல்ல. எனவே இந்த உலகக் கோப்பையில் இந்தியா நன்றாக ஆடும் என்பதில் ஐயமில்லை. நாம் தோனியை மட்டும் ஏன் கூற வேண்டும், நிறைய சமகால இளஜ் வீரர்கள் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்…

  15. யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் லயன் மொஹான் டி சில்வா மற்றும் மாவட்ட, மாகா­ணங்­களின் இணைப்பாளர் சித்தார்த் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக புற் தரையிலான கிரிக்கெட் ஆடுகளத்தை யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிறுவியுள்ளது. குறித்த கிரிக்கெட் ஆடுகளத்தை எதிர்வரும் 29ஆம் திகதி ஊத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதுடன் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணம் …

  16. சாதனை படைத்தார் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய சர்வதேச சாதனையை படைத்துள்ளார். இச் சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது டி கொக் படைத்தார். இதில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டி கொக் 5 பிடியெடுப்புக்களையும் ஒரு ஸ்டம்பிங் என்று அசத்தினார். இதன் மூலம் 27 போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய விக்கெட் கீப்பிங் சாதனை புரிந்தார். மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேகப்ஸ், இங்கிலாந்தின் ஜெரைண்ட் ஜோன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 30 ஒருநாள் போட்டிகளிலேயே 50 பேரை ஆட்டமி…

  17. மிட்செல் ஜான்சன் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல: வக்கார் யூனிஸ் வேகப்பந்து வீச்சில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் பற்றி வக்கார் யூனிஸ் கூறுகையில், ‘அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல’ என்று கூறியுள்ளார். "நான் வாசிம் அகரமுடன் ஒருவரையும் ஒப்பிட மாட்டேன், இதில் உறுதியாக இருக்கிறேன், அவர் ஒரு பெரிய பவுலர், பாகிஸ்தானுக்காக பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். எனவே மிட்செல் ஜான்சனை வாசிம் அகரமுடன் ஒப்பிட வேண்டுமென்றால் ஜான்சன் இன்னும் நீண்ட தூரம் வந்தாக வேண்டும். ஆனால் ஜான்சன் ஒரு அச்சுறுத்தல்தான், சிறந்த பவுலர்தான். கடந்த சில போட்டிகளில் அவரது பந்து வீச்சில் மாற்றம் தெரிகிறது, அவர் தாக்குதல் முறையில் வீசுகிறார். இதனால் வெற்றி அடைந்துள்ளார். ஜான்சனை சிறு சிற…

  18. பார்சிலோனா அணி வெற்றி அக்டோபர் 22, 2014. பார்சிலோனா: அஜாக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி, நெய்மர் தலா ஒரு கோல் அடிக்க பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் அஜாக்ஸ், பார்சிலோனா அணிகள் மோதின. போட்டியின் 7வது நிமிடத்தில் பார்சிலோனா இளம் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார். நட்சத்திர வீரர் மெஸ்சி 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் (88வது நிமிடம்) அஜாக்ஸ் அணி சார்பில் எல் காஜி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணியின் சாண்ட்ரோ (90+4) ‘ஸ்டாப்பேஜ் நேரத்தில்’ கோல் அடித்து பதிலடி தந்தார். முடி…

  19. யூனிஸ் கான் சாதனை சதம் அக்டோபர் 22, 2014. துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார். மூன்றாவ…

  20. இந்திய தொடர்: இலங்கை அணி அறிவிப்பு அக்டோபர் 22, 2014. கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியில் சண்டிமால், திரிமன்னே நீக்கப்பட்டனர். வரும் நவம்பரில் இங்கு வரும் இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் நவ.,2ல் கட்டாக்கில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் சரியான உடற்தகுதி இல்லாத போதும், ‘சீனியர்’ வீரர் சங்ககரா சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை சங்ககராக அணியில் இடம் பெறவில்லை எனில், விக்கெட் கீப்பர் நிரோஷன் களமிறக்கப்படலாம். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்துக்கு ஒய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் ரந்திவ், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, திரிமன்னே, சண்டிமால் …

  21. தென் ஆப்ரிக்க அணி வெற்றி: டிவிலியர்ஸ், டுமினி அசத்தல் அக்டோபர் 21, 2014. பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி மிரட்ட தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பே ஓவலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். நழுவிய சதம்: நியூசிலாந்து அணிக்கு கப்டில் (5), நீசம் (16) மோசமான துவக்கம் தந்தனர். பின் வந்த பிரவுன்லி (24), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (16) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து லதாம் (29…

  22. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் ச…

  23. ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…

  24. லார்ட்ஸில் டி-சர்ட்டைக் கழற்றி சுழற்றியது தவறுதான்: கங்குலி 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வென்ற பிறகு தனது சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. அப்போது அது ஒரு சர்ச்சையைக் கிளப்பினாலும் அதற்கு முந்தைய தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் பயணம் செய்து ஒருநாள் தொடரை சமன் செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் தனது சட்டையை மைதானத்திலேயே கழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயலுக்கு பதிலடியாக கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுழற்றியதாகவே அப்போது பார்க்கப்பட்டது. இந்நிலையில், "2002-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தை வென்ற பிறகு, நான் லார்ட்ஸ் மைதானத்தின் என டி-சர்டை கழற்றி ஆக்ரோஷமாக சுழற்றியது …

  25. உலக பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை செரீனா வெற்றி உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளும் முடிவடைந்த பிறகு ஆண்டின் இறுதியில் உலக சாம்பியன் ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீராங்கனைகளும் ‘ரெட்’, ‘ஒயிட்’ என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட்’ ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.