விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ் 27-12-2014 அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண த…
-
- 0 replies
- 301 views
-
-
கேப்டன் பதவியை திணிக்கக்கூடாது: சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம். 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தோனி தான் வழிநடத்த வேண்டுமா என்பதை தேர்வுக்குழுவினர் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்து தேர்வுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலியை கேப்டனாக இருக்க சொல்லி நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில…
-
- 0 replies
- 301 views
-
-
சென்.பற்றிக்ஸ் அணிக்கு கௌரவிப்பு September 26, 2015 இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்கு கல்லூரி சமூகத்தினரால் நேற்று பெரும் எடுப்பில் கெளரவம் வழங் கப்பட்டது. சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியிலிருத்து கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரியின் மத்தியூஸ் மண்டபம் வரை வீரர்கள் அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்த்து அதிபர் அருட்தந்தை ஜொறோ செல்வநாயகத்தின் தலைமையில் வீரர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகளுக்கு பிரதம விருத்தினராக வடமாகாணசபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பாளருமான இ.ஆனல்ட், சிறப்பு விருத்தினரா…
-
- 1 reply
- 301 views
-
-
திறமையான வீரர்களை கண்டறிவதற்காக திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை: ரவி சாஸ்திரி தகவல் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணி பலமான அணியாக இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய ஏ அணியில் உள்ள திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக அதன் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியில் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அங்கு வந்துள்ள ரவி சாஸ்திரி மேலும் கூறியதாவது: இந்திய ஏ அணியில் உள்ள சில வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்தாலோ அல்லது இடைவிடாது விக்கெட் வீழ…
-
- 0 replies
- 301 views
-
-
Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…
-
- 1 reply
- 301 views
-
-
இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது. இதனால் இலங்கை அணியின் பந்த…
-
- 0 replies
- 301 views
-
-
பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்ட…
-
- 0 replies
- 301 views
-
-
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300
-
- 0 replies
- 301 views
-
-
சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றன. இறுதிப் போட்டி பல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த உத்வேகம் மிகு அணியான மணற்காடு றோமன் க…
-
- 0 replies
- 301 views
-
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தவான் திடீர் விலகல்! கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தவான், முதல் இன்னிங்சில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார். இந்நிலையில், காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார். காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 301 views
-
-
யூரோ 2016இன் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டன அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு, உக்ரைன் தகுதிபெற்றுள்ளது. ஸ்லோவேனிய அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்தே, தங்களது இடத்தை உக்ரைன் உறுதிப்படுத்தியது. இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்லோவேனிய அணிக்கெதிராக, 1-1 என்ற கோல் கணக்கிலான சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்ட உக்ரைன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தகுதிபெற்றது. இதன்படி, யூரோ 2016இல் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி தகு…
-
- 0 replies
- 301 views
-
-
சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள் FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் ஹிரா வீரர்களின்…
-
- 0 replies
- 301 views
-
-
வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய தோனியிடம் பரிந்துரை! இந்திய அணிக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மானை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய அந்த அணியின் கேப்டன் மோர்டசா, தோனியிடம் பரிந்துரை செய்துள்ளார். மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இரு போட்டியிலும், மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, முஸ்தாபீசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியின்போது தோனி ரன் எடுக்க சென்ற போது, பிட்சின்…
-
- 0 replies
- 301 views
-
-
ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் உலக சாதனை உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் சாதனை படைத்துள்ளார். புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்து வந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் நேற்று முன்தினம் இரவில் 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து பங்கேற்று மூன்றிலும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். இரண்டு மண…
-
- 0 replies
- 300 views
-
-
இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம் -குணசேகரன் சுரேன் யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இருபதுக்கு-20 போட்டிகளின் தரப்படுத்தல்களில், 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபதுக்கு-20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வருடத்துக்கான அனைத்து இருபதுக்கு-20 போட்ட…
-
- 1 reply
- 300 views
-
-
முதல் 46 பந்துகளுக்கு ரன் கொடுக்காத சுரங்கா லக்மல்: சாதனை விவரங்கள்! இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் ஒரு சாதனை புரிந்துள்ளார். * நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய 30 வயது சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2001க்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்த ஒரே வீரர் - லக்மல் என்கிற பெரு…
-
- 0 replies
- 300 views
-
-
46 பந்தில் ஜாஸ் பட்லர் சதம் விளாசல் 46 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்ட…
-
- 1 reply
- 300 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 300 views
-
-
இந்திய அணி பயிற்சியாளரா? ஐ.பி.எல். ஆலோசகரா?: தவிப்புக்குள்ளான ராகுல் டிராவிட் உச்சநீதிமன்ற உத்தரவை பி.சி.சி.ஐ. அமல்படுத்த இருப்பதால் பிசிசிஐ அல்லது ஐ.பி.எல். ஆகிய இரண்டில் ஒன்றில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார் டிராவிட். பிசிசிஐ நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை சமர்பித்தது. இதில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது இரட…
-
- 0 replies
- 300 views
-
-
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/05/இங்கிலாந்து-அணியின்-துடுப்பாட்ட-ஆலோசகராக-மஹேல
-
- 0 replies
- 300 views
-
-
விபத்தில் தப்பிய வங்கதேச கேப்டன் தாகா: மிர்புரில் ஏற்பட்ட விபத்தில், வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மொர்டசா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் மொர்டசா, 30. ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார். வரும் 18ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக சைக்கிள் ரிக் ஷாவில், தனது வீட்டில் இருந்து மிர்புர் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து, ரிக் ஷா மீது பலமாக மோதியது. கீழே குதித்தார்: இதற்குள் சுதாரித்துக் கொண்ட மொர்டசா, ரிக் ஷாவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, இவரத…
-
- 0 replies
- 300 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 உலக கோப்பை அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நிவேதன் ராதாகிருஷ்ணன் (கீழ் வரிசையில் இடமிருந்து 2ஆவது) கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. ஆனால் இங்கு ஒரு 19 வயது தமிழர், இரண்டு கைகளாலும் மிகத்துல்லியமாக சுழற்பந்து வீசுவதோடு U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அத்தியாயம் படைக்க முனைப்பு காட்டும் அந்த தமிழக வீரரின் பெயர் நிவேதன் ராதாகிருஷ்…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
வாசிம் அக்ரம்: ஓய்வுக்கு பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர் அதில் இருந்து விடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான வாசிம், 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்தவர் இவர். தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வாசிம்(56), உலகம் மு…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…
-
- 0 replies
- 300 views
-
-
உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…
-
- 1 reply
- 300 views
-