Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்! ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர், ஜோ டேவ்ஸ் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இதுவரை ஒரு இந்தியர் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீராம்தான் ஆஸ்திரேலிய பேட்டிங் கன்சல்டிங்காக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்க…

  2. ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதிசெய்தது நீதிமன்றம் வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணையில் தோல்வியைத் தழுவிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஆற்றாமையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ இ20 போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்ததையடுத்து, அது குறித்த வழக்கு கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீசாந்த் ம…

  3. இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். இந்நிலையில் மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ண தூதர்களாக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்திய அணியின் நல்லெண்ண…

  4. நான்கு போட்டியில் விளையாட தடை: மெஸ்சியின் தண்டனையை ரத்து செய்தது பிஃபா மேல்முறையீடு குழு அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் நான்கு போட்டிக்கான தடையை பிஃபா மேல்முறையீடு குழு ரத்து செய்துள்ளது. இதனால் உருகுவே, வெனிசுலா, பெரு நாடுகளுக்கு எதிராக விளையாடுகிறார். அர்ஜென்டினா அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரான போட்டியின்போது நடுவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்கு தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பை போட்…

  5. ஃபீஃபா தேர்தல் பெப்ரவரி 26 இல் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­விக்­கான தேர்தல் 2016 பெப்­ர­வரி 26ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதனை சம்­மே­ளனம் நேற்று உறுதி செய்தது. 1998முதல் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ராக பதவி வகித்­து­வந்து செப் ப்ளட்டர், மோசடி குற்­றச்­சாட்டில் சிக்கி விசா­ரணையை எதிர்­கொ­ண்­டுள்­ளதால் அப் பத­வி­யிலி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். அவ­ரது இடத்­திற்கு புதிய தலைவர் யார் என்பதை இத் தேர்தல் தீர்மானிக்கும். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12838#sthash.bsEbvurW.dpuf

  6. கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…

  7. மீண்டும் ஒரு வீரரை பதம் பார்த்த பெளன்சர்...கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கம்! (வீடியோ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார். முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்ட…

  8. பவுன்சரைப் போட்டு சேவாகை காலி செய்து விடுவார்கள் என்று கேலி பேசினர்: சேவாக், தோனியை செதுக்கி வளர்த்தது பற்றி கங்குலி ருசிகரப் பதிவு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்தியக் கிரிக்கெட்டில் இரு பெரும் சாதனையாளர்களான வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்ததிலும், செதுக்கியதிலும் முன்னாள் கேப்டன், வீரர் சவுரவ் கங்குலிக்கு முக்கியப்பங்கு உண்டு இந்தியக் கிரிக்கெட்டில் கேப்டன்களாக இருந்தவர்களில் கங்குலியின் காலம் என்பது மிக அற்புதமான காலமாகும். இளைஞர்கள் அதிகமானோர் வெளிக்கொண்டு வரப்பட்டனர். அதிகமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறத் தொடங்கி இருந்த காலம். …

  9. வங்கதேச அணி எழுச்சியில் இருப்பதால் விராட் கோலி விளையாட வேண்டும்: சுனில் கவாஸ்கர் வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலக்கு கோரியதாக செய்திகள் எழுந்ததையடுத்து அவர் விளையாடுவது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். "விராட் கோலி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஒருநாள் போட்டிகளின் போது விலகிக் கொள்ளலாம். உண்மையில் விராட் கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு தேவையே. கடந்த 4 மாதங்களாக சில வீரர்களுக்கு பணிச்சுமை கடுமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வங்கதேசத்துக்கு வலுவான இந்திய அணி செல்வது மிக முக்கியம். பாகிஸ்தானை அவர்கள் ஒருநாள் தொடரில் மிகவும் எளிதான வீழ்த்தியதைப் ப…

  10. முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம் 19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கி…

  11. உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?! கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டு…

  12. ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…

  13. 46 பந்தில் ஜாஸ் பட்லர் சதம் விளாசல் 46 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்ட…

  14. டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…

  15. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…

  16. அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: October 25, 2018 அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில்; முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 156 னெற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஅவுஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 89 ஓட்டங்களை மாத்திரN ம பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இ…

  17. எம். எஸ். தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும…

  18. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…

  19. கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. கராச்சி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 6 போட்டி தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங…

  20. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த இரணடு வருட கால போட்டித் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருத்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டிற்காக மரியா ஷரபோவாவிற்கு இரணடு வருட கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்கு எதிராக மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை அடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமை அவர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போட்டிகளில் பங்குப…

  21. பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்தவர் வக்கார் யூனிஸ்: அப்துல் ரசாக் கடும் சாடல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். | படம்: ஏ.எஃப்.பி. அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். வக்கார் யூனிஸ் பிற வீரர்கள், நிர்வாகிகளைக் குறைகூறுவதை விடுத்து தன் பக்கம் உள்ள கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். “இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, நானே பார்த்திருக்கிறேன், மூத்த வீரர்களுக்கு வக்கார் மதிப்பளிக்க மாட்டார், வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த மாட்டார். அவர்கள் சிறப்பாக ஆட அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங…

  22. சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …

  23. பிரேசிலில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடும் வித்தியாசமான மாரத்தான் ஓட்டம் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. அமேசான் காட்டுக்குள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட 17 நாடுகளை சோர்ந்த 65 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அடர்ந்த காட்டுக்குள் ஓடும் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், செங்குத்தான பாதைகள் ஆகியவற்றை கடந்து ஓட வேண்டி இருந்ததால் போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள். சகதி மற்றும் சேறு நிறைந்த சிலர் சிக்கி கொண்டு பெரும் அவதி பட்டனர். இரவு நேரத்தில் சற்று இழைப்பாறி காயங்களுக்கு சற்று மருந்து எடுத்து கொண்ட அவர்கள் விளக்கின் வெளிச்சத்தில் போட்டியை தொடர்ந்தனர். கடும் சவால்களுக்கு மத…

  24. கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த…

  25. ஜேம்ஸ் ரோட்ரிக்சை 2 வருடம் கடனாக பெற்றது பேயர்ன் முனிச் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை 2 வருடத்திற்கு கடனாக பெற்றுள்ளது பேயர்ன் முனிச். ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட். இந்த அணியில் கொலம்பியாவின் முன்னணி ஸ்ட்ரைக்கரான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இடம்பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கராத் பேலே ஆகியோர் இருப்பதால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிற்கு களமிறங்குவதற்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகளில் மாற்று வீரர்களாக களமிறங்கும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காததால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வேறு அணிக்கு செல்ல …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.