விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்! சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும். பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கி…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன் 2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும…
-
- 0 replies
- 882 views
-
-
கெயில் உலக சாதனை கரிபீயன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்காத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற கடைசி 90 போட்டிகளில் கெயில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்கவில்லை. மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தான் அணி யின் வீரர் மாலிக் (89தடவை) இங்கிலாந்தின் ஸ்ரீவன் (82தடவை) டோனி(80தடவை) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/08/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
-
- 0 replies
- 496 views
-
-
'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ் லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார். பிறகு கொஞ்சம் நகைச…
-
- 0 replies
- 759 views
-
-
மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி! எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி …
-
- 0 replies
- 874 views
-
-
மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…
-
- 0 replies
- 593 views
-
-
வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய தோனியிடம் பரிந்துரை! இந்திய அணிக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மானை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய அந்த அணியின் கேப்டன் மோர்டசா, தோனியிடம் பரிந்துரை செய்துள்ளார். மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இரு போட்டியிலும், மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, முஸ்தாபீசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியின்போது தோனி ரன் எடுக்க சென்ற போது, பிட்சின்…
-
- 0 replies
- 298 views
-
-
1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது. * இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - வில்ஸ் உலகக் கிணண்ம் ( Wills world cup) * 26 மைதானங்களில் மொத்தமாக 37 போட்டிகளில் * 12 அணிகள் கலந்துகொண்டன (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து, சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரகம்,…
-
- 0 replies
- 1.1k views
-
-
33 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஒரு ஓவர் வீசி திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்! இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் உள்ள கார்டீப் நகரில் நடைபெற்றது. இந்த ஒரே ஒரு போட்டிக்கான டி20 ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளர் கேமரான் பாயிஸ் இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் இருந்து கார்டீப் நகருக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்து கேமரான் பாயிஸ் போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றிருக்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான அணியிலும் கேமரான் பாயிஸ் இடம் பெறவில்லை.எனவே இந்த டி 20 போட்டி முடிந்தவுடன் அவர் உடனடியாக தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். …
-
- 0 replies
- 973 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார். சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வா…
-
- 0 replies
- 606 views
-
-
மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார். குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார். தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு விபரம் வீடியோ கீழ…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 433 views
-
-
சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமையால் மன்னிப்பு கேட்டார் சங்கா பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 105 ஓட்டங்களே எடுத்தார். அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதால் சங்கக்காரா வீரர்களிடம் மன்னிப்பு கோரியதா…
-
- 0 replies
- 391 views
-
-
அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் February 24, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்டில் வெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 370 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 505 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 135 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடி…
-
- 0 replies
- 350 views
-
-
தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு - டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன். என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என…
-
- 0 replies
- 606 views
-
-
வட்பேர்ட்டிடம் தோற்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்ற லிவர்பூல் தோற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல் பெறும் பல வாய்ப்புகளை வட்பேர்ட் கொண்டிருந்தபோதும், அவ்வணியின் அணித்தலைவரும் முன்களவீரருமான ட்ரோய் டீனியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வட்பேர…
-
- 0 replies
- 471 views
-
-
தென்னாபிரிக்காவில் வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் கட்டாயம் தென்னாபிரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகளையும் கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவரல்லாத ஏனையோரும் பின்தங்கியுள்ளமையை நிவர்த்தி செய்யுமுகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில், வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் இடம்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிர்வாக சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு காரணமாக, நிற ஒதுக்கீடென்பது, உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது. இதில், வெள்ளையரல்லாத 6 பேரில் குறைந்தது இரண்டு பேர், நிச்சயமாக கறுப்பினத்தவர்களாக இருக்க வேண…
-
- 0 replies
- 424 views
-
-
பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது. பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிரு…
-
- 0 replies
- 688 views
-
-
டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். விராட் கோலி தன் தந்தையார் இறந்ததற்கு அடுத்த நாளே டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய கோலி, துக்கத்துக்கு நடுவிலும் 90 ரன்களைக் குவித்தார். கோலிக்கு டாட்டூக்கள் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்தது சாமுராய் வீரன் உருவம் பொறித்த டாட்டூ. ரவீந்திர ஜடேஜா இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடே…
-
- 0 replies
- 396 views
-
-
பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது. இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார். மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை. எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில்,…
-
- 0 replies
- 278 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வேய்ன் ரூனே(வயது 31). இங்கிலாந்து அணிக்காக 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சொந்த அணியான எவர்ட்…
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப…
-
- 0 replies
- 232 views
-
-
-
"போட்டியை வெல்ல திறமை வேண்டும்" தினேஷ் சந்திமால் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதம் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று பாகிஸ்தானுடன் விளையாடிய இலங்கை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதித்தது. இந்தத் டெஸ்ட் தொடரை சந்திமால் தலைமையிலான இலங்கை அணி வெல்வதற்கு எனது ஆசீர்வாதமே காரணம் என்று பெண் ஆன்மீகவாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றிய படம் ஒன்று பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊ…
-
- 0 replies
- 476 views
-