விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
பகலிரவு டெஸ்ட் போட்டிக்குச் சம்மதித்தது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது. நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து, இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது. எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை …
-
- 0 replies
- 305 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகள் ஒயிட்வாஷ் தொடரின் நாயகன் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி. 33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இல…
-
- 0 replies
- 314 views
-
-
ரியோ பராலிம்பிக்கில் 9 பேர் பங்கேற்பு "எமக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும்" இம்முறை நடைபெறும் 15ஆவது பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வென்றெடுக்க முடியும் என இலங்கை பராலிம்பிக் சபையின் செயலாளர் கேர்ணல் ராஜா குணசேகர வீரகேசரி வார வெளியீட்டு க்குத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவி க்கையில், ''ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பராலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை அடங்கலாக 9 பேர் பங்குகொள்கின்றனர். இம்முறை இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வெற்றி பெற முடியும் என நம்பிக்கைக் கொள்கிறேன். இலங்கை அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் பிரசன்ன ஜயலத் மற்றும் தினேஸ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் பதக்கங்களை வென்று தரக்கூடியவ…
-
- 0 replies
- 481 views
-
-
ஆசிய கிண்ணம் 2016 ; இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு, ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா க…
-
- 0 replies
- 242 views
-
-
9005 பந்துகளில் 9000 ரன்கள்... கங்குலி சாதனை முறியடிப்பு... அதிர ‘டி’ வில்லியர்ஸ்! ஒருநாள் கிரிக்கெட்டில் 9005 பந்துகளில் 9 ஆயிரம் ரன்கள் அடித்து தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். கங்குலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 112 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 80 பந்துகளை சந்தித்து 85 ரன்களை எடுத்தார…
-
- 0 replies
- 302 views
-
-
ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …
-
- 0 replies
- 499 views
-
-
பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி வெற்றிக்குப் பிறகு.. - படம்.| பிடிஐ. தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்க…
-
- 0 replies
- 328 views
-
-
அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவை கிரிக்கெட் சுற்றுப் பயணங்களின் போது தெரிவுக்குழு உறுப்பினராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி வழங்கியது. மூன்று பிரதான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (07) எஸ்.எஸ்.சி மைதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை சட்டவிதிகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைத்தல், புதிய செயலாளரைத் தெரிவு செய்தல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டமைப்…
-
- 0 replies
- 311 views
-
-
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்கள் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 5ஆவது வீரராக வலம்வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.…
-
- 0 replies
- 333 views
-
-
100 பந்துகள் கிரிக்கெட்: தோனி, கோலி, ரோகித் சர்மா பங்கேற்பு இந்திய அணி : கோப்புப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீ…
-
- 0 replies
- 504 views
-
-
கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்: ஓய்வு தேவை என்ற தொனியில் தோனி கூறியது உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் அதனை வைத்து விட வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து…
-
- 0 replies
- 564 views
-
-
தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண விபரம் : அக். 22ஆம் தேதி சென்னையில் மோதல் தென்ஆப்ரிக்க அணி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென்ஆப்ரிக்க அணி விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னரே இந்தியாவில் இருந்து கிளம்புகிறது. முதலில் நடைபெறும் டி20 போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்ரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் அக்டோபர் 22- ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. …
-
- 0 replies
- 386 views
-
-
இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…
-
- 0 replies
- 467 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 231 views
-
-
தரவரிசையில் சரிந்த கோலி... காரணம் என்ன? இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஸ்மித், வில்லியம்சன், இரட்டை சதமடித்த வார்னர், ராஸ் டெய்லர் ஆகியோர் தரவரிசையில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கின்றனர். பேட்டிங் தரவரிசை: தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடம் டி வில்லி…
-
- 0 replies
- 324 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது - 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 …
-
- 0 replies
- 525 views
-
-
மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்... February 13, 2016 10:09 am 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76994
-
- 0 replies
- 465 views
-
-
ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …
-
- 0 replies
- 357 views
-
-
வித்தியாசமான அணுகுமுறை: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்: தோனி யின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. புல் லென்த் பந்தை, அதிக வலுவுடன் அவர் தனது மணிக்கட்டு உதவியால் சிக்ஸருக்கு விரட்டுவது ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகும். http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 547 views
-
-
ட்ரிபிள் ஹிட் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..! டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது டி 20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டாட்டம்: புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்ட…
-
- 0 replies
- 461 views
-
-
பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…
-
- 0 replies
- 333 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 536 views
-
-
கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்! (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்ட…
-
- 0 replies
- 274 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 604 views
-