Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாக்., வீரருக்கு 2 ஆண்டு தடை * ஊக்கமருந்து விவகாரத்தில் நடவடிக்கை கராச்சி: ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரேஜா ஹசனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் ரேஜா ஹசன், 22. ஒரே ஒருநாள் போட்டி, 10 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் ‘பென்டாங்குலர்’ கோப்பை தொடரின் போது நடத்தப்பட்ட சோதனையில், ஹசன் ‘கோகைன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணைக்கு 14 நாட்களுக்குள் வர வேண்டும் என, கடந்த மார்ச் 24ல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) விடுத்த அழைப்பை, ஹசன் ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த இவர், லாகூர் ஓட்டல் ஒன்ற…

  2. முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…

  3. பென் ஸ்டோக்ஸுக்கு அநீதி இழைத்ததை ஆஸி. வீரர்கள் ஒரு நாள் உணர்வர்: மெக்கல்லம் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ராய்ட்டர்ஸ். பென் ஸ்டோக்ஸின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தவறிழைத்து விட்டார் என்கிறார் பிரெண்டன் மெக்கல்லம். களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மீது நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அதிருப்தி தெரிவித்துள்ளார். டெய்லி மெயிலில் மெக்கல்லம் இது பற்றி எழுதிய பத்தியில், “ஸ்மித் முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கலாம், இதன் மூலம் அவரது தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் நல்லுணர்வுடன…

  4. கிராண்ட் ஸ்லாம் விநோதம்: வென்றார்...சென்றார்! நியூயார்க்: இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு ஓய்வு அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை 33 வயது நிரம்பிய பென்னட்டா சகநாட்டு வீராங்கனை ராபர்ட்டா வின்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 7-6 (7-4), 6- 2 என்ற செட் கணக்கில் பென்னட்டா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பென்னட்டாவுக்கு கிடைத்தது. பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுதான். இந்த போட்டி முடிந்த கையோடு டென்னிசில் இருந்து விடை பெறுவதா…

  5. இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். எல்லையோரத்தில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அர…

  6. ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…

  7. நாளை பீபா தலைவருக்கான தேர்தல் பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது. கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார். மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அள…

  8. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்…

  9. ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த By Mohamed Azarudeen கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்று முடிந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை, அம்பாறையின் ஹிமிதுராவ ஈகிள்ஸ் கழகம் 93 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்த கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தினர்களான ஹிமிதுராவ கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியிருந்த…

  10. பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…

  11. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. T20 உலக கிண்ண சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் , மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ளன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குறித்த T20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின், பூளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான T20 தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதே மைதானத்தில்தா…

  12. சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …

  13. இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு. வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன. இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு…

  14. தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…

  15. கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…

  16. 4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு Image courtesy - AFP ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார். ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும் ஐரோப்பிய விளையாட்டு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் சங்கங்களினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற இவ்விருது வழங்கும் விழா நேற்று (24) பார்சிலோனாவில் நடைபெற்றது. 2016ஆம் மற்றும் 2017ஆம் பருவகாலத்தில் லாலிகா உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய கால்பந்து போட…

  17. 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…

  18. தலைகுனிவுதான் அதற்காக ஓடி ஒளியவா முடியும்?- இங்கிலாந்து சரிவு குறித்து கிரஹாம் தோர்ப் கிரஹாம் தோர்ப். - படம். | கெட்டி இமேஜஸ். ஒரு அணி ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென ஒரு அருமையான பந்து வீச்சு அல்லது பொறுப்பற்ற பேட்டிங் ஆகியவற்றினால் சிறுமை ஏற்படும் என்பது கிரிக்கெட் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் தவிர்க்க முடியாததே என்பதாக சூசகமாகத் தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப், 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணிக்காக வாதாடுகிறார். ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் 17 பந்துகள் வீசிய பிறகு மழை காரணமாக தொடர முடியாமல் கைவிடப்பட்டு…

  19. பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற…

  20. ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர். இதில், ஆண்களுக்கான கோல…

  21. பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் லா லிகா உதைப்பந்தாட்ட போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், "கிளஸ்சிக்' மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மெட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால், ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டிய…

  22. பிரேசில் ‘பார்முலா–1’: ராஸ்பர்க் சாம்பியன் நவம்பர் 10, 2014 , சாவ் பாலோ: பிரேசிலில் நடந்த ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயத்தில், ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில், நடப்பு ஆண்டின் 18வது சுற்று ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 32 நிமிடம், 58.710 வினாடிகளில் கடந்த ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற 5வது பட்டம். பந்தய துாரத்தை கடக்க, ராஸ்பர்க்கை விட 1.4 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்ட ‘மெர்சிடஸ்’ அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ…

  23. 1000 ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து இங்­கி­லாந்து அணி 1000ஆவது டெஸ்டில் கள­மி­றங்கக் காத்­தி­ருக்­கின்­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் டெஸ்டில் இச் சாத­னையை எட்­ட­வுள்­ளது. இங்­கி­லாந்து கிரிக்கெட் அணிக்கு 1877ஆம் ஆண்டு டெஸ்ட் அந்­தஸ்து கிடைத்­தது. அதே ஆண்டில் முதல் டெஸ்டில் கள­மி­றங்­கி­யது இங்­கி­லாந்து. அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இப்­போட்டி மெல்­போர்னில் நடை­பெற்­றது. இது­வரை 999 டெஸ்ட் போட் டிகளில் இங்கிலாந்து பங்­கேற்­றுள்­ளது. இதில் 357 போட்­டி­களில் வெற் றியும் (35.73 சத­வீதம்) 297 போட்­டி­களில் தோல்வியும் கண்ட இங்­கி­லாந்து 345 போட்­டி­களை சம­நி­லையில் முடித்­துள்­ளது. …

  24. டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 …

  25. நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…

    • 0 replies
    • 974 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.