விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
வலைகளின் துளை வழியே இனி எதிர்காலத்தை பார்க்க முடியாது: உருக்கமாக விடை பெற்றார் பிரான்செஸ்கோ டோட்டி பிரான்செஸ்கோ டோட்டி இத்தாலியின் ஏஎஸ் ரோமா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த பிரான்செஸ்கோ டோட்டி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். 24 ஆண்டு காலம் ரோமா அணிக்காக விளையாடி வந்த டோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி சீரி ஏ போட்டியில் ஜெனோவா அணிக்கு எதிராக விளையாடினார். தலைநகரான ரோமில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ரோமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் எடின் ஸேகோ, டேனியல் டி ரோஸ்ஸி, தியாகோ பெரோட்டி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தின் 54-வது நிம…
-
- 0 replies
- 230 views
-
-
ஆசிய கிண்ண மகளிர் இ 20 கிரிக்கெட்: 75 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 2016-12-01 10:25:30 தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி ஒன்றில் தாய்லாந்து மகளிர் அணியை 75 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹசினி பெரேரா (அணித் தலைவி) 55 ஓட்டங்களையும் சமரி அத்தப்பத்து (முன்னாள் இலங்கை அணித் தலைவி) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ச…
-
- 0 replies
- 230 views
-
-
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…
-
- 0 replies
- 230 views
-
-
23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
50 ஆண்டுகால பாரம்பரிய பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட்டை ரத்து செய்த பிசிசிஐ 2012-ம் ஆண்டு துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டல வீரர்கள் கொண்டாடும் காட்சி. | கோப்புப் படம்: கே.பிச்சுமணி. வரும் கிரிக்கெட் சீசனில் இந்திய கிரிக்கெட்டின் 50 ஆண்டு கால பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இடம் பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ மவுனம் சாதித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் நெரிசல் காரணமாக, ரஞ்சி டிராபிக்குப் பிறகு பழம்பெருமை வாய்ந்த மண்டலங்களுக்கு இடையேயான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சீசனில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் இந்த புதிய கிரிக்கெட் சீசனில் 6 மாத காலக்கட்டத்தில் 900 கிரிக்கெட் போட்டிகளை நடத்…
-
- 0 replies
- 230 views
-
-
16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…
-
- 0 replies
- 230 views
-
-
அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா?- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில் இல்லை அம்பத்தி ராயுடு : கோப்புப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்த திறமையான, அதிரடி பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணி, துலீப் டிராபியில் விளையாடும் 3 அணிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். திறமையான பேட்டிங் இருந்தும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து அம்பத்தி ராயுடுவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது. …
-
- 0 replies
- 230 views
-
-
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்- ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளினார் செபஸ்டியான் வெட்டல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் லெவிஸ் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். #BritishGP ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 10-வது சுற்று பிரட்டனில் இன்று நடைபெற்றது. இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதற்கான தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமை மற்றும் சன…
-
- 0 replies
- 230 views
-
-
ஆஷஸ் தோல்வி: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு. | கோப்புப் படம். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் அணியின் சார்பாக மன்னிப்பு கோரினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் இதுபற்றி கூறியதாவது: நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்களைவிடவும் சிறப்பான அணியிடம் தோல்வி அடைந்தோம். ஒரு பயிற்சியாளராக, வீரர்கள், அணித் தேர்வாளர்கள் ஆகியோர் சார்பில் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். பொறுப்பிலிருந்து ஒருநாளும் வெளியேற மாட்டோம். தோல்விகளுக்கு சாக்குபோக்குகள் கூற விரும்பவில்லை. எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, தோற்ற விதத்து…
-
- 0 replies
- 230 views
-
-
சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி! சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது. எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரு…
-
- 0 replies
- 229 views
-
-
ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இருந்தும் பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் லாகூரில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷயார்கான் கூறுகையில், வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை யு.ஏ.ஈ நாட்டில் பாகிஸ்தான் சூ…
-
- 0 replies
- 229 views
-
-
இரட்டை ஆதாய விவகாரம்: பிசிசிஐயின் முடிவுக்கு கங்குலி ஆதரவு இரட்டை ஆதாயம் பெறும் வகையில் எந்த பணியிலும் ஈடுபடவில்லை என மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உறுதியளிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் முடிவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியதால் இரட்டை ஆதாய விவகாரத்தில் சிக்கினார். ஐபிஎல் சூதாட்ட பிரச்சினை எழுந்தபோது இரட்டை ஆதாய விவகாரம் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளானது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து இரட்டை ஆதாய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதில் பிசிசிஐ தீவிரமாக இருக்கிறது. அது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கடிதம் எழுதி…
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்து சென்றது நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் கிரிக்கெட் தரப்படுத்தலுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சர்வதேச மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்றைய தினம் நியூஸிலாந்து சென்றடைந்தனர். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஷஷிகலா சிறிவர்தன தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமரி அத்தப்பத்து உதவி அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்ற உதேஷிகா பிரபோதினி சுகவீனமுற்றதன் காரணமாக அவருக்குப் பதிலாக அச்சினி குலசூரிய குழாமில் இணைத்துக்கொ…
-
- 0 replies
- 229 views
-
-
ஒருநாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா! இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி தொடரை வென்று இந்தியா அணியை, வைட் வோஷ் செய்துள்ளது. கேப் டவுனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அத…
-
- 0 replies
- 229 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்ஜ் டவுன்: பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 312 ரன்னும், பாகிஸ்தான் 393 ரன்னும் எடுத்தன. யாசிர்ஷாவன் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது. 4-வது …
-
- 0 replies
- 229 views
-
-
இங்கிலாந்து வெற்றி : நியூசி., ஏமாற்றம் மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டியில் பங்கேற்றது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜோ ரூட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ராய் (23), ஹேல்ஸ் (27) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பேரிஸ்டோவ் (1), கேப்டன் மார்கன் (4) ஆகியோர் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ரூட், ‘டுவென்டி-20’ அரங்கில் தனது இரண்டாவது அரைசதத…
-
- 0 replies
- 229 views
-
-
மழையால் இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் டிரா: நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை டிரா செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரா…
-
- 0 replies
- 229 views
-
-
பாகிஸ்தானுடனான தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என்கிறார் மெத்யூஸ் பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ‘‘பல்லேகலையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 377 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தபோது நாங்கள் சிறந்த நிலையில் இருந்ததாக நான் கருதினேன். எனினும் இறுதியில் அடைந்த தோல்வியை ஜீரணிப்பதற்கு நிச்சயமாக சில காலம் செல்லும். எமது அணியினரிடமிருந்து இத்தகைய ஆற்றல் வெளிப்பாடுகளை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணியினரோ கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர்’…
-
- 0 replies
- 229 views
-
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 228 views
-
-
செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. …
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இலங்கை – இந்திய அணிகள் மோதும் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 -ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தப் போட்டித் தொடர…
-
- 0 replies
- 228 views
-
-
வயது இரண்டரை தான். இந்தச் சென்னை சிறுவனின் கிரிக்கெட் ஆட்டம் உங்களை கவரக்கூடும் சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார். படத்தின் காப்புரிமைSANUSH தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார். இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த…
-
- 0 replies
- 228 views
-
-
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வீராங்கனை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோ மீற்றர் தூர சைக்களிள் ஓட்டப்போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141633&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 228 views
-