விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஜெர்மனி கால்பந்து கிளப்பில் சென்னை மாணவன் பி.ஜே.ரெக்ஸ். சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட…
-
- 0 replies
- 404 views
-
-
சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய ,இந்தாண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கா பெற்றுக் கொண்டார். நேற்று கொழும்பு, காலதாரி விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான 2 வது வருடமாகவும் சரித் அசலாங்க தனதாக்கினார். இவருக்கான விருதை ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன வழங்கி வைத்தார். காலி ரிச்மன்ட் கல்லூரியின் வீரராகவும், இலங்கை 19 வயத…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…
-
- 0 replies
- 522 views
-
-
அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணி…
-
- 0 replies
- 286 views
-
-
முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான்சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின்விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளபோட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல…
-
- 0 replies
- 301 views
-
-
தேசிய மட்டத்தில் முதல் பதக்கம் வென்ற மண்டூர் சாதனை வீரன் குகேந்திரன் தேசிய அரங்கிற்குள் நுழைந்து பதக்கமொன்று வெல்வது வார்த்தைகளால் சொல்லும் அளவுக்கு இலகுவான விடயமல்ல. இந்த வெற்றிக்காக செய்யவேண்டிய தியாகம்,படவேண்டிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வாறானதொரு பின்னணியில் தடைகளையெல்லாம் தாண்டி 33 வருடகால அகில இலங்கை பாடசாலைகள்விளையாட்டு விழா வரலாற்றில் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த குகேந்திரன் உடன்.
-
- 0 replies
- 474 views
-
-
இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி... சென்னையின் மறக்க முடியாத நாள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பாலி உம்ரிகர் - படஉதவி: கெட்டி இமேஜஸ் சென்னை இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் வெற்றியை இன்றுதான் பெற்றது. அதுவும் இந்த வெற்றி சென்னை மைதானத்தில் கிடைத்தது மிகச்சிறப்பாகும். கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த இந்திய அணி தனது முதல் வெற்றியை ருசிக்க ஏறக்குறைய 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. முதல் டெஸ்ட் வெற்றி பெற்று இந்திய அணி இன்றுடன் 66-வது ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 1952-ம் ஆண்டு பி…
-
- 0 replies
- 213 views
-
-
பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?! ``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்? 2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்ப…
-
- 0 replies
- 622 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். #EPL எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் ரோமா அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிக்கு மாறினார். 36.9 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் அணி வாங்…
-
- 0 replies
- 334 views
-
-
சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர் – மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி EAST RUTHERFORD, NJ – JULY 25: Mohamed Salah #11 of Liverpool celebrates his goal with teammates during the International Champions Cup match between Liverpool FC and Manchester City FC at MetLife Stadium on July 25, 2018 in East Rutherford, NJ. Liverpool won the match with a score of 2 to 1. (Photo by Ira L. Black/Corbis via Getty Images) சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல். அணி 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வென்றுள்ளது. கால்பந்து லீக் …
-
- 0 replies
- 450 views
-
-
ஒரு பால்.. ஒரு ரன் - சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நேபாளம் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. …
-
- 0 replies
- 354 views
-
-
இறுதிச்சுற்று நோக்கி தமிழீழ அணி / CONIFA Asia Cup 2023
-
- 0 replies
- 704 views
-
-
ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா வரிசையில் விராட் கோலியை வைக்கும் மைக்கேல் ஹோல்டிங் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் சிரித்துப் பேசும் மைக்கேல் ஹோல்டிங். | கோப்புப் படம்: பிடிஐ. மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், சில பேட்ஸ்மென்களுக்கு பந்து வீசுவது குறித்து கூறும் போது ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா, வரிசையில் விராட் கோலியை வைத்து பேசினார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு ஹோல்டிங் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார். அதாவது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ உலகின் தலை சிறந்த ஒருநாள் வீரராக விவ் ரிச்சர்ட்ஸை கூறியுள்ளது, அவருக்கு பவுலிங் வீசுவது பற்றிய கேள்விக்கு ஹோல்டிங் கூறும் போது, “வெவ்வேறு பவ…
-
- 0 replies
- 318 views
-
-
ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…
-
- 0 replies
- 259 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணியை எதிர்த்து குருநகர் சென்.ஜேம்ஸ் மகளிர் வித்தியாலய அணி மோதியது https://newuthayan.com/story/14/திருக்குடும்ப-கன்னியர்-ம.html
-
- 0 replies
- 516 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் : அணித் தலைவராகிறார் ஹசீம் அம்லா தென்னாபிரிக்க கிரிக்கெட்அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் விளையாட வில்லை. அவரை அணியில் இருந்து நிர்வாகம் விடுவித்தது. உலக கிண்ண அரை இறுதியில் மெதுவாகப் பந்து வீசியதற்காக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் ஆட்டத்தில் அவர் விளையாட இயலாது. இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் ஹசிம் அம்லா தலைவராக பணியாற்றுகிறார். …
-
- 0 replies
- 305 views
-
-
செய்தித் துளிகள் இஷாந்த் சர்மா. | கோப்புப் படம். மீண்டும் இஷாந்த் தேர்வுக் குழு தலைவரின் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் டெல்லி ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, விதர்பாவுடனான 2-வது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா விவகாரத்தைக் கையாண்ட விதம் காரணமாக டெல்லி அணியின் தேர்வுக் குழுவுக்கு பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ---------------------------------------------- சமிர் படேலுக்கு வாய்ப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியில் சமிர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாபர் அன்சாரி காயமடைந்ததையடுத்து, படேலுக்கு வாய்ப்பு …
-
- 0 replies
- 225 views
-
-
நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு வி…
-
- 0 replies
- 914 views
-
-
ஒரே ஓவரில் 34 ரன் விளாசிய ஹர்திக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி 20 உள் ளூர் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன் விளாசினார். வேகப்பந்து வீச்சாளர் அகேஷ் சுதன் வீசிய 19வது ஓவரில் இந்த ரன்ளை ஹர்திக் பாண்டியா குவித்தார். மேலும் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது. சிக்ஸர் அடித்த பந்தில் ஒரு நோ பாலும் அடங்கும். இதன்மூலம் அந்த ஓவரில் 39 ரன் சேர்க்கப்பட்டது. இந்த வகையில் உள்ளூர் டி 20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப் பட்டதும் தற்போது தான் நடந்துள் ளது. இதற்கு முன்னர் நியூஸிலாந் தின் ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளூர் தொடரில் ஓரே ஓவரில் 38 ரன்கள் விளாசியி…
-
- 0 replies
- 528 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில், நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவின் வெற்றியாளர்களாக விலகல் முறையிலான சுற்றுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆ…
-
- 0 replies
- 579 views
-
-
கரீபியன் பிரிமியர் லீக் February 13, 2016 கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தாங்கள் நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் நடத்தி வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதில் விளையாடும் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டிவில்லியர்சை ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஜமைக்கா டாலாவாஸ் அணிக…
-
- 0 replies
- 507 views
-
-
எவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி By Mohammed Rishad - @AFP மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான எவின் லுவிஸின் அபார சதத்தின் உதவியுடன் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு…
-
- 0 replies
- 628 views
-
-
இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …
-
- 0 replies
- 447 views
-
-
விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பணப்பரிசு இவ் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் தூய்மையின் அடையாளமாக விளங்குவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளாகும். இப் போட்டிகளில் பங்குபற்றும் அனைவரும் வெள்ளை அங்கிகளையே அணிய வேண்டும் என்பது விம்பிள்டன் ஏற்பாட்டுக் குழுவின் நியதியாகும். இதன் மூலம் தூய்மையின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் …
-
- 0 replies
- 628 views
-