விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 228 views
-
-
தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்கள் கெளரவிப்பு ஜனாதிபதி கனவுடன் உள்ள நாமல் ராஜபக்ஸவின் விளையாட்டுத்துறை தொடர்பான வாக்கெடுப்பின்போது வட, கிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்குமாறு அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட …
-
- 0 replies
- 228 views
-
-
தோனி இடித்த வங்கதேச பந்துவீச்சாளரை உருவாக்கியதே இந்தியர்தான்...! இந்திய கேப்டன் தோனியால் இடித்து தள்ளப்பட்ட வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியர் ஒருவர்தான் உருவாக்கியுள்ளார். மிர்பூரில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில், வங்கதேசத்தின் 19 வயது பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அதே வேளையில் ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரன் எடுக்க ஓடும் போது பிட்சின் குறுக்கே அடிக்கடி ஓடினார். ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் தோனியால் இடித்தும் தள்ளப்பட்டார். இந்த சம்பவத்தில் ரக்மானுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீ…
-
- 0 replies
- 227 views
-
-
உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடும் 32 அணிகளையும் தீர்மானிக்கும் இறுதிக் கட்ட தகுதிகாண் போட்டிகள் இன்று (9) ஆரம்பமாகவுள்ளன. பிரேசில், ஆர்ஜன்டீனா, ஜெர்மனி என பல பலம்மிக்க அணிகளும் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ள நிலையில் உலகெங்கும் மேலும் சில அணிகள் தமது உலகக் கிண்ண வாய்ப்புக்காக இறுதி முயற்சியில் ஈடுபடவுள்ளன. ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டாவது சுற்றின் கடைசிக் கட்ட குழுநிலைப் போட்டிகள் நாளை (10) தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவில் இருந்து நைஜீரியா, எகிப்து அணிகள் ஏற்கனவே …
-
- 0 replies
- 227 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி! Chennai: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விட…
-
- 0 replies
- 227 views
-
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம் Image Courtesy- PTV 2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று (9) இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) நிர்வாக கூட்டத்தினை அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பாரிய விளையாட்டுத் தொடர் ஒன்று நடைபெறும் போது அத்தொடருக்காக விஷேட வரிவிலக்கு வழங்கப்படும். இப்படியான சலுகை ஒன்றை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்திருந்தது. எனினும், இதுவரையில் அப்படியான ஒரு வர…
-
- 0 replies
- 226 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலே…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டி நிறைவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில் இன்றைய 3 வதும் இறுதியுமான போட்டியை வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்று சொந்தமாக்கியது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் களத்தடுப்பு தீர்மானத்தை மேற்கொண்டார், அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந…
-
- 0 replies
- 226 views
-
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவி…
-
- 0 replies
- 226 views
-
-
தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…
-
- 0 replies
- 226 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். சாபாவ்லோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ…
-
- 0 replies
- 226 views
-
-
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட் ஹாமில்டனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 314 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் அனது. ஹாமில்டன்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 41 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து இருந்தபோது மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இன்று 2-வது ந…
-
- 1 reply
- 226 views
-
-
மாறுவேடத்தில் தெருவில் விளையாடிய கால்பந்து ஜாம்பவான்! (வீடியோ) நம்ம ஊரில் பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தனியாக தெருக்களில் நடந்து சென்றால் தேனீக்கள் போல் தொற்றி கொள்வார்கள் ரசிகர்கள். அதுவும், பிரபல கால்பந்து ஜாம்பவான் தனியாக தெருவில் விளையாடியால் விட்டு வைப்பார்களா ரசிகர்கள். போர்ச்சுக்கல்லை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை யாரும் அடையாளம் தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் ஸ்பெயினில் உள்ள தெருவில் கால்பந்து விளையாடி அசத்தியுள்ளார். கடைசி வரை யாரும் அவரை அடையாளம் காணமுடியவில்லை. இறுதியாக சிறுவன் ஒருவனிடம் விளையாடிய ரொனால்டோ, தனது மாறுவேடத்தை கலைத்துவிட்டார். அவர் தனது வேஷத்தை கலைத்ததுதான் மிச்சம். ரசிகர்கள் அவரை சூழ்ந்து கெ…
-
- 0 replies
- 226 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 12 நிமிடங்களுக்கு முன்னர் 2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது. இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார். எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்? சமூக வலைதளங்களில் ஆக்டிவ…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
இரண்டாவது போட்டியிலும் வீழ்ந்தது இலங்கை ; தொடர் இங்கிலாந்து வசம் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெறும் டி-20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து 8 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்டது. அதன் பின்னர் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்றிரிவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறை…
-
- 0 replies
- 225 views
-
-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று அந்த அணியின் தேர்வு குழு உறுப்பினர் காவின் லார்சென் தெரிவித்துள்ளார். வெலிங்டன் : தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே டுனெடினில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்…
-
- 0 replies
- 225 views
-
-
என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன்: டுபிளெசிஸ் ஆறுதல் மெசேஜ் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ். - படம். | கெட்டி இமேஜஸ். 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானதுதான் என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ருந்துகிறேன். ஒருவருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால்தான் அவருக்காக குறுஞ்செய்தி அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன்…
-
- 0 replies
- 225 views
-
-
3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 04:31 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓ…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு விபரீதம் : மைதானத்துக்குள் நுளைந்த அம்பூயலன்ஸ் : பாகிஸ்தான் வீரர் வைத்தியசாலையில்! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக போட்டியின் போது விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் அஹமட் சேஷாட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் செமியல்ஸ் ஆகியோர் மோதிக் கொண்டதில் சேஷாட்டின் கழுத்துப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்துக்குள் அம்புயூலன் கொண்டுவரப்பட்டு, சேஷாட் வைத்தியசாலைக்…
-
- 0 replies
- 224 views
-
-
ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்! 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார். பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் …
-
- 0 replies
- 224 views
-
-
இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம் ( வீடியோ) அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உலகின் ஜாம்பவன் ரோஜர் பெடரரின் டென்னிஸ் மட்டையில் இருந்துதான் அந்த புயல் உருவாகிறது.பெடரர்க்கு அறிமுகம் தேவையில்லை.கிரிக்கெட்டுக்கு ஓர் சச்சின்,கூடைபந்துக்கு ஓர் மைக்கேல் ஜோர்டான் போல டென்னிஸ்க்கு பெடரர். கடந்த 2003ஆம் ஆண்டு விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர் அன்று முதல் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஆக வலம் வருகிறார்.டென்னிஸ் உலகில் 17 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ள பெடரர்க்கு நடால்,முரே,ஜோகோவிச் முதலிய இளம் வீரர்களின் வருகையால் கிராண்ட் ஸ்லாம் பட்டங்…
-
- 0 replies
- 224 views
-
-
ரியல் மாட்ரிட்டில் இருந்து கெசிலாஸ் விலகல்: மான்செஸ்டர் யுனைடெட்டில் ஜெர்மனி கேப்டன்! ரியல்மாட்ரிட் அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான இகெர் கெசிலாஸ் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மனி அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வான்ஸ்டைகர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ளார். ஐரோப்பிய டிரான்ஸ்பர் விண்டோ தற்போது நடந்து வருகிறது. பல முன்ணணி வீரர்கள் அணிகள் மாறி வருகின்றனர். அந்த வகையில் ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் இகெர் கெசிலாஸ் ரியல்மாட்ரிட்டில் இருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் ரியல்மாட்ரிட் சப்ஜுனியர் அணியில் இணைந்து விளையாடத் தொடங்கிய இகெர் கெசிலாஸ் அந்த அணிக்காக 16 சீசன்களில் 725 போட்டிகளில் விளையாடியுள்ளா…
-
- 0 replies
- 224 views
-
-
தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் பார்சிலோனா: ரியல் பெட்டிஸ் அணியை 5-0 என வீழ்த்தியது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றும் வரும் கால்பந்து லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் பார்சிலோனா பயணம் செல்கிறது. #Laliga #Barcelona லா லிகா தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் அசுர பலத்துடன் விளையாடிய ரியல் பெட்டிஸ் அணி முதல் பாதி நேரம் வரை பார்சிலோனா அணியை கோல் அடிக்க விடவில்லை. 2-வது பா…
-
- 0 replies
- 224 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம் நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது. தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோட…
-
- 0 replies
- 224 views
-
-
முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து அ-அ+ துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துபாய்: துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …
-
- 0 replies
- 224 views
-