விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…
-
- 0 replies
- 548 views
-
-
இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை 19 AUG, 2025 | 06:16 PM தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார். https://www.virakesari.lk/article/222900
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
கைவிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடாத்த வாய்ப்பு.! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடாத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையேயான விரிசல் நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் உலகளாவிய…
-
- 0 replies
- 478 views
-
-
ஒரே வீரருக்கு மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பை வழங்கிய தர்மசேன இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கள நடுவராக செயற்பட்ட குமார் தர்மசேன ஒரே வீரருக்கு மூன்று முறை தவறான ஆட்டமிழப்பை வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே பந்துவீச்சாளர் வீசிய பந்துகளில் ஒரே வீரருக்கு மேற்படி மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் 26 ஆவது ஓவரை வீசிய சகிப் அல் ஹசனின் பந்துவீச்சை இங்கிலாந்தின் மொயின் அலி எதிர்கொண்டார். இதன்போது விக்கெட்டை மறைத்…
-
- 0 replies
- 411 views
-
-
கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்! வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது. ஜான் ட்ரைகோஸ் (John Traicos) விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே. 1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் …
-
- 0 replies
- 522 views
-
-
தரப்பட்டுத்தல் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜெர்மனி உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது. முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ : ஜேர்மனி , ப…
-
- 0 replies
- 298 views
-
-
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து ருசிகர விவாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், சக வீரர் விஜய் சங்கருடன் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு வாகனத்தில் பயணித்து புலிகளை பார்த்து ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்…
-
- 0 replies
- 267 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது - நார்வே முதலிடம் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. #WinterOlympics2018 #Closingceremony #Pyeongchanggames பியாங்சங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை …
-
- 0 replies
- 271 views
-
-
தொடரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சர்வதேச கிரிக்கெட் என்பது மலர்ப் படுக்கை அல்ல என்பது இந்திய டெஸ்ட் அணியின் இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும். இங்கே வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் சறுக்கலும் மிக விரைவில் மாறிவிடும். திறமை அல்ல, சீராகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படும் திறமையே இங்கு முக்கியம். அதுவும் ஒருவரோ இருவரோ திறமை காட்டினால் போதாது. மட்டையிலும் பந்து வீச்சிலுமாகச் சேர்ந்து குறைந்தது ஐந்து பேராவது நன்கு ஆடினால்தான் வெற்றிபெற முடியும். இந்த யதார்த்தத்தை இப்போது இந்திய அணியின் இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். முரளி விஜய், அஜிங்க்ய ரஹானேயின் மட்டை வீச்சு, இஷாந்த் ஷர்மாவின் துல்லியமான எகிறு பந்துகள், இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுப்…
-
- 0 replies
- 451 views
-
-
50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை அ-அ+ ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7 கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். லா லிகாவில…
-
- 0 replies
- 503 views
-
-
உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேன்: மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நம்பிக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதையொட்டி அந்த வங்கி ‘யெல்லோ ஆர்மி’ என்ற சேமிப்பு கணக்கினை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், வங்கியின் தலைவர் சஞ்ஜீவ் ஸ்ரீவஸ்தவா, துணைத்தலைவர் விக்னேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், பிராவோ ஆகியோர் கலந்து கொண்டனர். - படம்: வி.கணேசன் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கான வா…
-
- 0 replies
- 179 views
-
-
நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 462 views
-
-
பிடிவாத அலிஸ்டர் குக்கை நீக்க வேண்டும்: மைக்கேல் வான் காட்டம் அலிஸ்டர் குக் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை உதற மறுத்தால் அவரை நீக்குவதுதான் ஒரே வழி என்று முன்னாள் ஈகேப்டன் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார். "ஒருநாள் கிரிக்கெட் வித்தியாசமானது. அலிஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து இறங்க மறுத்தால் அவரை நீக்குவதுதான் சிறந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை, ஜேம்ஸ் விடேகர், பால் டவுண்டன் போன்ற வாரிய நிர்வாகிகளும் மாற்றம் வேண்டும் என்பதை உணரவில்லையெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்கால நன்மை குறித்த இவர்களது நோக்கத்தை நான் சீரியசாகக் கேள்வி கேட்க நேரிடும். டெஸ்ட் தொடரை வென்று அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்…
-
- 0 replies
- 364 views
-
-
சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்தில்தானே ஆடினோம்... வங்கதேசத்தில் இல்லையே?- விராட் கோலியின் விகடம் இங்கிலாந்து தொடருக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சாஸ்திரி, விராட் கோலி. இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி 2014 தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தது பற்றி மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்ப கொஞ்சம் சீரியசாக ஆனால் நிறைய விகடத்துடன் பதிலளித்தார் விராட் க…
-
- 0 replies
- 665 views
-
-
காத்திருந்து சாதனை படைத்த கோலி: தோனி புதிய மைல்கல்; இன்னும் சுவாரஸ்ய தகவல்கள் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம் ஓல்டுடிராபோர்டு நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது, டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதில் கேப்டன் விராட் கோலியும், தோனியும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சே…
-
- 0 replies
- 381 views
-
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 873 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 NOV, 2023 | 12:04 PM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது. அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்ப…
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 438 views
-
-
மேற்கிந்தியத்தீவுகளை 'வைட் வோஷ்' செய்த இந்தியா! இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்றைய தினம் கயானவில் இடம்பெற்றது. தொடரில் ஏற்கனேவ கைப்பற்றிய நிலையில் இப் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டியில் நா…
-
- 0 replies
- 713 views
-
-
ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …
-
- 0 replies
- 199 views
-
-
கைகுலுக்கல் விவகாரம் கௌதம் கம்பீர் காட்டம் December 30, 2015 இந்தியாவின் உள்ளூர் ஆட்டத்தில் (விஜய் ஹசாரே கிண்ணம்) டெல்லி அணியின் தலைவர் கம்பீர், ஜார்கன்ட் அணியின் வீரரான டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கு கம்பீர், டோனியுடன் கைலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நானும், டோனியும் கைகுலுக்கி கொண்ட புகைப்படம் இது தான். இந்த கைகுலுக்கல் விவகாரம் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் செரிப் பேச்சுவார்த்தையை விட பெ…
-
- 0 replies
- 679 views
-
-
மைதானத்தில் ஆடுவதை விட கிரிக்கெட் ஆட்டம் டிவி-யில் பார்க்க சுலபமானது: தோனி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி. மற்றெந்த விவகாரங்களை விடவும் கிரிக்கெட்டை பற்றி கருத்து தெரிவிப்பதில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மிகவும் தாராளமாக செயல்படுகிறது என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றனர் என்றே நான் கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் உள்ளது, அதனால் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. அதாவது இப்படிச் செய், அப்படிச் செய், இப்படி விளையாடு, அப்படி விளையாடு என்று கூறப்படுக…
-
- 0 replies
- 417 views
-
-
ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்! முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில் கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து, கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா சறுக்கியது எப்படி? அரையிறுதியில் நியூசிலாந்துக்கு ஏன் அதிர்ச்சி தோல்வி? இங்கிலாந்து எப்படி ஃபைனலுக்கு வந்தது? ஆப்கானிஸ்தான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.... 1. வங்கதேசம் பிளஸ் : இந்த உலகக்கோப்பையில…
-
- 0 replies
- 573 views
-
-
ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் தடுப்பாட்ட சாதனையை முறியடித்த ஆஸி. ஜோடி மாரத்தான் தடுப்பாட்டம் ஆடிய பீட்டர் நெவில். | படம்: ஏ.பி. பல்லக்கிலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜோடி புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 5-ம் நாளான இன்று 268 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும் கனவுடன் 83/3 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 157/8 என்று தவிர்க்க முடியாத தோல்வி நிலைக்குச் சென்றது, ஆனால் மழையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் மற்றும் ஓ’கீஃப் ஜோடி எப்பாடுப்பட்டாவது போட்டியை டிரா செய்யலாம் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் செய்த இந்த மாரத்தான் முயற்சி ‘ப்ளாக்க…
-
- 0 replies
- 312 views
-