விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
பின் தள்ளப்பட்டார் ஜஸ்பிரிட் பும்ரா..!! சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் கிரிக்கட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரப்பட்டியல் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் குறித்த தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். …
-
- 0 replies
- 463 views
-
-
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, பரிஸ் ஸா ஜெர்மைன், லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. டியோனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது. இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் டியோனின் முன்களவீரர் மெளனிர் செளயர் பெற்ற கோலின் கோலெண்ணிக்கையை டியோன் சமப்படுத்தியது. இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் …
-
- 0 replies
- 616 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 11 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐப்பான் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக்கில் போட்டியிடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா நோய் இல்லை என்பதை கமிட்டி உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.polimernews.com/dnews/100313/கொரோனா-வைரஸ்-காரணமா…
-
- 0 replies
- 427 views
-
-
அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி By Mohammed Rishad - சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா கிரிக்கெட் அணி தம்மைப் பதிவு செய்துள்ளது. ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் 2 தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமெரிக்கா அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒரு மணித்தியாலயம் 39 நிமிடங்களில் முடிந்த இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது. நேபாளத்தில் முதன்முறையாக நேபா…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி By Mohamed Azarudeen - கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட். பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
டி20 போட்டிகளுக்கு அறிமுகமாகும் புதிய சுப்பர் ஓவர் விதிமுறைகள் By Mohammed Rishad - சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இங்கிலாந்தில் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் அணிகள் பெற்ற பௌண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐ.சி.சி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப…
-
- 0 replies
- 583 views
-
-
பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல். http://www.thepapare.com/video-jaffna-st-johns-college-fast-bowler-anton-abishek-interview-tamil/
-
- 0 replies
- 576 views
-
-
St. John’s அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறும் சௌமியன் பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலை கிரிக்கெட் போட்டியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு மற்றும் அணியின் வெற்றிக்கான காரணம் என்பவற்றை விளக்கும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் நாகேந்திரராஜா சௌமியன்.
-
- 0 replies
- 434 views
-
-
தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்! By A.Pradhap - தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மெக்ஸ்வெல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளென் மெக்ஸ்வெலின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது, இடது முழங்க…
-
- 0 replies
- 410 views
-
-
முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று.. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்னாபிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் இன்றிரவு இடம்பெறவுள்ள முதலாவது 20 க்கு 20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று 20 க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு By Akeel Shihab - இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில…
-
- 0 replies
- 729 views
-
-
நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் 32 Views சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தது…
-
- 5 replies
- 987 views
- 1 follower
-
-
இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ் இளையோர் அணி 1,034 Views தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி உலகக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி முதன்முறையாக கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய இளையோர் அணியுடன் இன்று Potchefstroom மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியே உலக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல…
-
- 6 replies
- 634 views
- 1 follower
-
-
உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த By Mohamed Azarudeen - ©ICC இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்தது. இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் இளையோர் அணி, இந்திய இளையோர் அணியை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடரின் சிறந்த பதினொருவர் அணி, ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 638 views
-
-
பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 44, லிட்டன் தாஸ் 33. மொமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தஜியுல் இஸ்லாம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/53, மொஹமட் அப்பாஸ் 2/19, ஹரீஸ் சொஹைல் 2/11, நசீம் ஷா 1/61) பாகிஸ்தான்: 445/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 143, ஷண் மசூட் 100, ஹரீஸ் சொஹைல் 75, அசட் ஷஃபிக் 65, அஸார் அலி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 3/86, ருபெல் ஹொஸைன் 3/113, தஜியுல் இஸ்லாம் 2/139, எபடட் ஹொஸைன் 1/97)…
-
- 0 replies
- 448 views
-
-
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதுடன், மழை காரணமாக இரண்டாவது போட்டியில் முடிவேதும் கிடைக்கப் பெறாத நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வென்றே தொடரை 1-1 என்ற இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து தென்னாபிரிக்கா: 256/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் ஆ.இ 69 (53), குயின்டன் டி கொக் 69 (81), ஜோ ஜோ ஸ்மட்ஸ் 31 (38), தெம்பா பவுமா 29 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/51 [10], சஹிப் மஹ்மூட் 1/17 [5], மொயின் அலி 1/42 [10]) இங்கிலாந்து: 257/8 (43.2 ஓவ. …
-
- 0 replies
- 380 views
-
-
சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர் By Mohammed Rishad நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான கௌஷால் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிர்திபூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது…
-
- 0 replies
- 363 views
-
-
ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த By Mohamed Azarudeen கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்று முடிந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை, அம்பாறையின் ஹிமிதுராவ ஈகிள்ஸ் கழகம் 93 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்த கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தினர்களான ஹிமிதுராவ கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியிருந்த…
-
- 0 replies
- 339 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி By Mohamed Shibly ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் …
-
- 0 replies
- 441 views
-
-
த்ரில் வெற்றியுடன் ஒருநாள் தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து By A.Pradhap ICC Twitter தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வொண்டரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று (9) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இங்கிலா…
-
- 0 replies
- 288 views
-
-
இறுதி போட்டிக்கு தெரிவான பங்களாதேஷ் அணி..! தென் ஆப்ரிக்காவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக இவ்வாறு இறுதி போட்டிக்கு தெரிவிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 விக்கட்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து வெற்றிஇலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44வது ஓவ…
-
- 0 replies
- 498 views
-
-
சங்கக்காரவை உலகின் சமாதானத் தூதராக கௌரவித்த எஸ்.பி பாலசுப்ரமணியம் By Mohammed Rishad - இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாக விளங்குகின்ற கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் சுயநலமற்ற செயற்பாடுகளால் பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வழங்கப்படுகின்ற உயர் சான்றோர் விருதை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் விளையாட்டு வீரரொருவரை கௌரவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கொழும்பு கம்பன் கழகத்தின் வெள்…
-
- 0 replies
- 394 views
-
-
சஷிகலா சிறிவர்தன ஓய்வு By Mohammed Rishad - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான சஷிகலா சிறிவர்தன, இம்மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை பெண்கள் அணி நேற்று (6) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், அதற்குமுன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் அணியின் பயிற்சியாளர் சஷிகலாவின் ஓய்வு பற்றிய …
-
- 0 replies
- 404 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி திடீர் விஜயம் செய்யவேண்டும்- அர்ஜுன கோரிக்கை! by : Litharsan அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெ…
-
- 0 replies
- 496 views
-
-
வெளியேற்றப்பட்ட டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. வேடர் பிளீமனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக எர்லிங் பிறோட் ஹலான்ட், ஜியோவனி றெய்னா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், வேடர் பிளீமன்…
-
- 0 replies
- 495 views
-