Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது. இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணியி…

    • 2 replies
    • 598 views
  2. சச்சின் டெண்டுல்கர் முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட…

  3. மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை …

    • 0 replies
    • 1k views
  4. ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ். அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையா…

    • 0 replies
    • 826 views
  5. India vs West Indies : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை வான்கிடே மைதானத்தில் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெற்றி பெறும் அணியை தொடரைக் கைப்பற்றும். © AFP இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி, 20 ஓவர் போட்டிகளில் அந்த இடத்திற்கு செல்ல தவறி விட்டது. இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் 5-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 6 20 ஓவர் போட்டிகளில் இந்தியா 2-ல் ம…

  6. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில், நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவின் வெற்றியாளர்களாக விலகல் முறையிலான சுற்றுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆ…

    • 0 replies
    • 579 views
  7. முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது…

  8. SAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல் By Mohammed Rishad நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றச் சென்ற இலங்கையின் 13 வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளளர். இதில் 7 வீரர்களுக்கு இலங்கையில் இருந்த போதே டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கத்மண்டுவில் உள்ள ப்ளு குரொஸ் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற இந்த வீரர்களில் ஒருவர் தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 5 வீரர்கள் வைத்திய…

  9. நேரம்: 19:00 (IST) 13:30(GMT) December 08, 2019டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ்பவுலிங் தேர்வுவானிலை: க்ளியர்ஆட்ட நாயகன்: லென்டில் சிம்மன்ஸ்தொடரின் நிலை: 3 டீ20ஐ தொடர் லெவல் 1-1முடிவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றதுஅதிகாரிகள்: நடுவர்: அனில் குமார் சவுத்ரி, செட்டிதோடி ஷாம்ஷூதின், நிதின் நரேந்திர மேனன் | ரெஃப்ரி: டேவிட் பூன் https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-t20i-thiruvananthapuram-inwi12082019190935 மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா! மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது. தற்போ…

    • 2 replies
    • 1.2k views
  10. லா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை தோற்கடித்தது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 ஆவது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி ‘ஹெட்ரிக்’ கோல் அடித்ததமையும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும். இது அவருக்கு 35 ஆவது ‘ஹாட்ரிக்’ ஆகும். இதன் மூலம் லா லிகா …

    • 0 replies
    • 500 views
  11. 2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட…

    • 0 replies
    • 422 views
  12. இலங்கை – பாகி. டெஸ்ட் தொடரில் சிறப்பு விருந்தினராக வர்ணபுர, ஜாவேட் By Mohamed Azarudeen - பாகிஸ்தான் மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாவேட் மியான்டாட் மற்றும் பந்துல வர்ணபுர ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைக்கவுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. தற்போது …

    • 0 replies
    • 766 views
  13. 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்­ரல்-,மே மாதங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தப் போட்­டிக்­கான வீரர்கள் ஏலம் கொல்­கத்­தாவில் எதிர்­வரும் 19ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. ஐ.பி.எல். ஏலப்­பட்­டி­யலில் மொத்தம் 971 வீரர்கள் இடம்பெற்­றுள்­ளனர். இதில் 713 பேர் இந்­தி­யர்கள். மீதி­யுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்­த­வர்கள். இந்தப் பட்­டி­யலில் இலங்கை வீரர்கள் 39 பேர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். இதி­லி­ருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்­கப்­ப­டு­கி­றார்கள். ஏலப்­பட்­டி­யலில் இடம்பெற்­றி­ருப்­ப­வர்­களில் 215 வீரர்கள் சர்­வ­தேச போட்­டியில் ஆடி­ய­வர்கள். 754 பேர் உள்ளூர் போட்­டி களில் விளை­யா­டி­ய­வர்கள். வெளிநாட்டு வீரர்­களில் அதி­க­பட்­ச­மாக …

  14. விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. 208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக…

    • 0 replies
    • 443 views
  15. தனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13 ஓவருக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த இவன் லிவ…

    • 0 replies
    • 496 views
  16. இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டம் மற்றும் 'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், வேகப் பந்து பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர் மற்றும் அபிவிருத்தியாளர் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளருக்கான தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றார். 51 வயதான தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆர்த்தர், தென்னாபிரிக்கா, (2005 முதல் 2010 வரை), அவுஸ்திரேலியா (2011 முதல் 2013 வரை) மற்றும் பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுக்கும் தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார். து…

  17. SAG 2019 – 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன் By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார். 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் …

    • 2 replies
    • 555 views
  18. நியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது By Mohammed Rishad - ©Getty image இந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்’ (Sprit of Cricket) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு போட்டி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டியாக அது இருந்தது. லீக் போட்டிகளில் ஆதிக்கம் …

    • 0 replies
    • 468 views
  19. SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா! By A.Pradhap - நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளின் தங்கப் பதக்கங்களை இந்தியா சுவீகரித்துக்கொண்டது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற…

    • 0 replies
    • 325 views
  20. ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான் இங்கிலாந்து வீரர் மைக்கலே வான் : கோப்புப்படம் லண்டன், ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியி…

    • 0 replies
    • 579 views
  21. SAG மெய்வல்லுனரில் நிலானிக்கு முதல் தங்கம்: மயிரிழையில் தங்கத்தை இழந்த ஹிமாஷ By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை நிலானி ரத்நாயக்க பெற்றுக் கொடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (03) காலை இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை பெற்றுக் கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. …

    • 0 replies
    • 544 views
  22. பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி By Mohamed Arshad - கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். கடந்த பருவகாலத்தில் ரியல் மட்ரிட்டில் இருந்து பிரிந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்காக ஆடி Serie A கிண்ணத்தை வென்று கொடுத்தவரும் போர்த்துக்கல்லின் அணித் தலைவருமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இம்…

    • 0 replies
    • 434 views
  23. SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை By Mohamed Arshad - தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு கொண்ட மாலைத்தீவு அணியுடனான முதலாவது போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவு செய்துள்ளது. நேபாளத்தில் இடம்பெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (02), கால்பந்து ஆட்டமும் ஆரம்பமாகியது. கத்மண்டு டசரத் அரங்கில் இடம்பெற்ற முதல் மோதலில் இலங்கை – மாலைத்தீவு அணிகள் மோதின. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான இந்த போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான சுஜான் பெரேரா, மொஹமட் பசால் ம…

    • 0 replies
    • 408 views
  24. மெஸ்ஸியின் கடைசி நேர கோலால் பார்சிலோனா மீண்டும் முதலிடத்தில் By Mohamed Arshad - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் சரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருவமாறு, பார்சிலோனா எதிர் அட்லடிகோ மெட்ரிட் லியோனல் மெஸ்ஸி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 1-0 என வெற்றியீட்டி லா லிகா புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இன்னும் நான்கு நிமிடங்களே இருக்கும்போது பெனால்டி பெட…

    • 2 replies
    • 499 views
  25. சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் 20 ஃப்ரேங்க் என்ற வெள்ளி நாணயக் குற்றியிலேயே இவ்வாறு அவரது முகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி குறித்த நாணயம் புலக்கத்திற்கு விடப்படவுள்ளது. இதன்மூலம் ரோஜர் பெடரர் சுவிஸ் நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல் உயிருள்ள நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த நம்ப முடியாத கெளரவத்துக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்குத பெடரர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். 38 வயதான ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் சிலாம் எனப…

    • 0 replies
    • 455 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.