Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…

  2. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…

  3. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 உலக கோப்பை அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நிவேதன் ராதாகிருஷ்ணன் (கீழ் வரிசையில் இடமிருந்து 2ஆவது) கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. ஆனால் இங்கு ஒரு 19 வயது தமிழர், இரண்டு கைகளாலும் மிகத்துல்லியமாக சுழற்பந்து வீசுவதோடு U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அத்தியாயம் படைக்க முனைப்பு காட்டும் அந்த தமிழக வீரரின் பெயர் நிவேதன் ராதாகிருஷ்…

  4. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அ…

  5. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் ஜேம்ஸ் நீஷம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீ…

  6. ஆஸ்திரேலிய தோல்விகளை ஆய்வு செய்யும் சென்னை நிறுவனம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 2-0 என்று படுதோல்வி தழுவியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது. சென்னையில் உள்ள கிரிக்கெட் 21 என்ற ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் தொடரை முழுமையாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முன்னாள் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் 21 நிறுவனம். துணைக்கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள் என்ன என்பதை முழுதும் ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல் திறன் கமிட்டியின் தலை…

  7. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'! ஆ தொடரில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 60 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கேப்டன் மைக்கேல் கிளார்க்கில் இருந்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர், கொஞ்சம் நிலைத்து விளையாடினார். ஆனால் அவரும் 13 ரன்களில் அவுட் ஆகி விட்டார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக உதிரிகளாக 14 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தது எக்ஸ்ட்ராதான். ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே தனிவீரர்…

  8. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …

  9. ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…

  10. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்? - ஐசிசி விளக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திர கேட்ச் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. கடைசி ஓவரில் 2 ரன்களை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, பாகிஸ்தான் தோற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்தி வந்தது. அப்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் சேவியர் டோஹெர்ட்டி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மென் பவாத்…

  11. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார். ஹோபர்ட்: கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வ…

  12. ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி... ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ? ரமணி மோகனகிருஷ்ணன் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி ஐ.பி.எல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நின…

  13. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோப்புபடம்: டோவ் போலிங்கர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான டக்கி போலிங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 36 வயதான போலிங்கர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலிங்கர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்…

  14. ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வருகை - இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட் சீசன் இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த…

  15. ஆஸ்திரேலியன் ஓபனில் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஃபெடரர்.!! ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். இருவரும் 2-2 செட்களை கைப்பற்றவே 5-வது செட்டில் அரங்கமே நுனி சீட்டுக்கு வந்தது. இறுதி செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், நடாலை திக்குமுக்காட வைத்தார். இது ரோஜர் ஃபெடரரின் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79088-roger-federer-beats-rafael-nadal-and-wins-australian-open-title.art

  16. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆனார் வோஸ்னியாக்கி வோஸ்னியாக்கி | படம்: ஏஎப்பி. ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வோஸ்னியாக்கி முதல் முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றும் நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியும்,…

  17. ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று? 2015 வேர்ல்டு கப். சிட்னியில இந்தியா - ஆஸ்திரேலியா செமி ஃபைனல். அதுவரைக்கும் இந்தியா ஒரு மேட்ச் கூடத் தோக்கல. ஆனாலும் ஒரு பயம். அந்த பயம் 2011 உலகக்கோப்பை குவாட்டர் ஃபைனல்லயும் இருந்துச்சு. இந்த செமி சிட்னியில, அந்த காலிறுதி அஹமதாபாத்ல. வெளியூர்ல ஆடுனப்போ இருந்த பயம் இந்தியால ஆடுனப்போவும் இருந்துச்சு. 2011 செமி ஃபைனல், ஃபைனல் மேட்ச் அப்பெல்லாம்கூட இல்லாத பயம், அந்த குவாட்டர் ஃபைனல்ல இருந்துச்சு. மேட்ச் முடியுற வரைக்கும் அந்த பயம் கொஞ்சம் கூட குறையல. மேட்ச்சோட எந்த தருணத்துலயும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியல. இதுக்கு ஒரே காரணம் - அந்த 2 மேட்ச்லயும் இந்தியா எதிர்த்து விளையாடுனது ஆஸ்திரேலியா. அந்த பயம…

  18. ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்­நாட்டு அணி­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் விளை­யா­டு­கி­றது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­று­கின்­றது. தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா சென்றடைந்தது இலங்கை அணி. பெரும் நம்­பிக்­கை­யுடன் இருக்கும் இளம் இலங்கை அணி,…

  19. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்க…

  20. ஆஸ்திரலியா எதிர் இங்கிலாந்து 16 ஜனவரி சிட்னி ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 18 ஜனவரி மெல்போர்ன் இங்கிலாந்து எதிர் இந்தியா 20 ஜனவரி பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து 23 ஜனவரி ஹோபார்ட் ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 26 ஜனவரி சிட்னி இங்கிலாந்து எதிர் இந்தியா 30 ஜனவரி பேர்த் இறுதி போட்டி 01 பிப்ரவரி பேர்த்

  21. ஆஸ்திரேலியா 62 ரன் Friday, 25 January, 2008 09:44 AM . அடிலெய்டு, ஜன.25: அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. . இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் 16 ரன்கள் எடுத்திருந்த டோனி, ஜான்சன் பந்துவீச்சில் சைமன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கருடன் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹாக்கிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் 153 ரன்கள…

  22. ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது அ-அ+ ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தல…

  23. ஆஸ்திரேலியா அபார வெற்றி அக்டோபர் 06, 2014. துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ போட்டி, துபாயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் ஜியா (3), அமின் (0), மக்சூத் (0), ஷேசாத் (10) நிலைக்கவில்லை. பின் வரிசையில் உமர் அக்மல் (1), அப்ரிதி (2), அன்வர் அலி (5) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். நசிம் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. ஹசன் (13), இர்பான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். எளிய இலக்கைத் துரத்தி…

  24. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல …

  25. பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.