விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து Editorial / 2018 டிசெம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83) நியூசிலாந்து: 311/2 (துடுப்பாட்டம்: டொம் லேதம் அ.இ 121, …
-
- 1 reply
- 471 views
-
-
இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/
-
- 1 reply
- 675 views
-
-
சர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி இந்து தமிழ் திசைபெர்த் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தத…
-
- 0 replies
- 431 views
-
-
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது December 15, 2018 1 Min Read பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில்…
-
- 0 replies
- 529 views
-
-
இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் டிம் பெய்ன் 16 ஓட்டங்களுடனும், பெட் கம்மிண்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ்…
-
- 0 replies
- 408 views
-
-
2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான் எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 1894 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதேவேளை இவ் ஆண்டு இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந் நிலையில் எதிர்வரும் 2020 ஆம்…
-
- 1 reply
- 529 views
-
-
ஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அதில் டெஸ்ட் போட்டியை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஒருநாள் போட்டியையும் இழந்திருந்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று பங்களாதேஷ் அணியுண்ட பலப்பரிட்சை நடத்தியது. டாக்காவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய த…
-
- 0 replies
- 696 views
-
-
உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த் – எதில் தெரியுமா? December 10, 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தைவிட, பந்துவீச்சு மற்றும் களத்;தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயற்;பட்டது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ர…
-
- 0 replies
- 607 views
-
-
அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை December 11, 2018 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமானதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. http://globaltamilnews.net/2018/106276/
-
- 0 replies
- 496 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி December 10, 2018 அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா 235 ஓட்டங்களும் பெற்றிருந்த நிலையில் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 307 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் 323 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 291 ஓட்டங்கள் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந…
-
- 3 replies
- 566 views
-
-
சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…
-
- 0 replies
- 440 views
-
-
உலககோப்பை ஹாக்கி போட்டி - கனடாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது இந்தியா ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #India #Canada புவனேஸ்வர்: 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் இன்று மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 1…
-
- 0 replies
- 382 views
-
-
7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 2…
-
- 1 reply
- 644 views
-
-
புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
‘விளையாட்டை ஆடுகிற தேசமாக மாற வேண்டும்’ - சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் – மிகச் சிறந்த ஆட்டக்காரர். சந்தேகம் இல்லை. அவரது ஆட்டத்தை வியந்து மகிழ்ச்சியுடன் பார்த்தது உண்டு. ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் அவரை, கடவுள் அளவுக்குத் துதி பாடுகிற போதெல்லாம் இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றும். மாநிலங்களவை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டபோது பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதற்கேற்றாற்போல் கடந்த 4 ஆண்டுகளாக அவர் மாநிலங்களவையில் எதுவும் பேசவில்லை. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தார். ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அவரது சமீபத்திய பேச்சு, ஓர் ஆனந்த அதிர்ச்சி தந்தது. அவையில் சச்சின் ஆ…
-
- 0 replies
- 847 views
-
-
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 வருடாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வரும் கம்பீருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்புகள் கை நழுவிப் போன காரணத்தினாலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 37 வயதாகும் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் 104 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 4154 ஓட்டங்களையும் 9 சதங்களையும், 22 அரை சதங்களையும் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொற…
-
- 0 replies
- 593 views
-
-
என் அணிக்கு இவர் கட்டாயம் வேண்டும்… அடம் பிடிக்கும் விராட் கோஹ்லி..! இந்திய அணியில் தற்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திற்கும் தலைமையேற்றுள்ளார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. டி 20 தொடரில் முதல் முறையாக தலைவர் பதவியை வகித்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் கோஹ்லி. இந்திய அணிக்கு தலைவராக உள்ள கோஹ்லி, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்படும் ஐபி…
-
- 0 replies
- 564 views
-
-
புது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்' இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கில…
-
- 0 replies
- 566 views
-
-
உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர். இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நில…
-
- 0 replies
- 449 views
-
-
மூன்று போட்டிகளையும் இழந்து 'வைட் வொஷ்' ஆனது இலங்கை இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் மூன்று தொடர்களையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்…
-
- 0 replies
- 656 views
-
-
`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட…
-
- 0 replies
- 879 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-கிரிக்கெட்-நிறுவ-3/
-
- 0 replies
- 512 views
-
-
பதிலடி கொடுத்து தொடரை சம நிலையில் முடித்த இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிட்டினியில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. 165 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஒட்டம் அடங்களா…
-
- 0 replies
- 581 views
-
-
இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்ட் நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை? Editorial / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, பி.ப. 11:40 Comments - 0 இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கின்றது. இந்நிலையில், குறித்த போட்டியில் எந்தமுடிவு பெறப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, ஆறாமிடத்திலிருக்கும் இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்குமென்றபோதும் தமது நம்…
-
- 2 replies
- 771 views
-
-
பெண்களுக்கான 20 -20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 10 அணிகள் பங்குபற்றிய 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் கடந்த 09 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா அணி மேற்கிந்தியத் தீவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து. இதனையடுத்து நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக…
-
- 0 replies
- 525 views
-