Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர். அத்தோடு பக…

  2. 178 ஓட்டத்துக்குள் சுருண்டது நியூஸிலாந்து hare1 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்ப…

  3. சர்வதேச கிரிக்கெட்டிற்கு நான் புதியவன்- நோபோல் சர்ச்சையில் சிக்கிய நடுவர்Share1 பங்களாதேஸ் மேற்கிந்திய அணிகளிற்கு எதிரான ரி20 போட்டியில் தொடர்ச்சியாக தவறுதலாக நோபோல் தீர்ப்பு வழங்கியதன் மூலம் கடும் சர்ச்சைக்கு காரணமாக நடுவர் தன்வீர் அகமட் தனது தவறினை ஏற்றுக்கொண்டுள்ளார். நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதியவன் இதனால் நான் தவறிழைத்தேன் என அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளரின் காலிற்கும் கோட்டிற்கும் இடையிலான நெருக்கம் காரணமாக நோபோல் என்பது எப்போதும் பிரச்சினைக்குரிய விடயமே என குறிப்பிட்டுள்ள தன்வீர் அகமட் பந்து வீச்சாளர் வேகமாக பாய்ந்தால் நோபோலை கண்டுபிடிப்பது கடினம் எனவும் தெரிவித்துள்ளார். நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பு…

  4. ரிஷப் பந்த்-ன் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம்: ஆஸி.க்கு மேக்ஸ்வெல் எச்சரிக்கை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார். 7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரி…

  5. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, தொடரை சமநிலையில் முடித்த பங்களாதேஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன் இவ் விரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள…

  6. சமநிலையில் முடிந்தது முதல் போட்டி இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வயின்றி முடிவுக்கு வந்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை வெலிங்டகனில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 282 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களையும் பெற்றது. இதன் பின்னர் 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 116 ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 117 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இலங்கை அணிக்கு வலு சேர்த்தனர். …

  7. ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? -சிவா ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம். ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளு…

  8. மத்தியூஸ், மென்டிஸின் சதங்களோடு போராடுகிறது இலங்கை Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் முடிவில், முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸின் சதங்களோடு இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83…

  9. இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி December 18, 2018 பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களும் இந்தியா 283 ஓட்டங்களும் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து 43 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 243 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்த…

  10. சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை! சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலி அணி சார்பாக மாக்கஸ் ஹரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் வின்ஞ் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர். இதனிடையே, இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றி…

  11. கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு பி.டி.ஐபெர்த், பிடிஐ ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியின் விராட் கோலியும், ஆஸி.கேப்டன் டிம் பெய்னும் ஏற்கெனவே நேற்று வார்த்தையில் மோதிக்கொண்ட நிலையில், இன்றும் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நண்பகல் உணவு இடையே…

  12. இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து Editorial / 2018 டிசெம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83) நியூசிலாந்து: 311/2 (துடுப்பாட்டம்: டொம் லேதம் அ.இ 121, …

  13. இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/

  14. சர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி இந்து தமிழ் திசைபெர்த் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தத…

  15. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது December 15, 2018 1 Min Read பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில்…

  16. இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் டிம் பெய்ன் 16 ஓட்டங்களுடனும், பெட் கம்மிண்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ்…

  17. 2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான் எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 1894 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதேவேளை இவ் ஆண்டு இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந் நிலையில் எதிர்வரும் 2020 ஆம்…

  18. ஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அதில் டெஸ்ட் போட்டியை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஒருநாள் போட்டியையும் இழந்திருந்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று பங்களாதேஷ் அணியுண்ட பலப்பரிட்சை நடத்தியது. டாக்காவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய த…

  19. உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த் – எதில் தெரியுமா? December 10, 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தைவிட, பந்துவீச்சு மற்றும் களத்;தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயற்;பட்டது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ர…

  20. அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை December 11, 2018 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமானதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. http://globaltamilnews.net/2018/106276/

  21. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி December 10, 2018 அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா 235 ஓட்டங்களும் பெற்றிருந்த நிலையில் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 307 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் 323 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 291 ஓட்டங்கள் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந…

  22. சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…

  23. உலககோப்பை ஹாக்கி போட்டி - கனடாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது இந்தியா ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #India #Canada புவனேஸ்வர்: 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் இன்று மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 1…

    • 0 replies
    • 388 views
  24. 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 2…

  25. புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.