விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
யார் இந்த இயன் சாப்பல்? - கிறிஸ் கெய்ல் காட்டம் கிறிஸ் கெய்ல். | ஏ.எப்.பி. பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும் புகழ் பெற்ற கிறிஸ் கெய்ல் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர். தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் மது அருந்துவேன்” என்றார். இ…
-
- 0 replies
- 496 views
-
-
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர…
-
- 0 replies
- 260 views
-
-
இந்திய அணிக்கே ஸ்பின் சவாலா? 4 ஸ்பின்னர்களுடன் ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு. | ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த அணியில் இளம் முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷீத் கான், ஜாகிர் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கி இந்தியப் பிட்ச்கள் பற்றி அனுபவம் பெற்றுள்ளனர், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான் க…
-
- 0 replies
- 591 views
-
-
தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகள் வெற்றிகளைப் பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன. சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி …
-
- 1 reply
- 709 views
-
-
யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இன்று இலங்கை அபிவிருத்தி அணியை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை தேசிய அணியினர் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். அதேபோன்று, இன்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணி இங்கிலாந்தின் PSTAR கழக அணியினரை இலகுவாக வெற்றி கொண்டனர். சிங்கப்பூர் எதிர் PSTAR இன்றைய முதல் மோதலாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் அனுபவம் கொண்ட சிங்கப்பூர் வீராங்கனைகள் PSTAR அணியினருக்கு பெரும் அழுத்தமாகவே இருந்தனர். போட்டி ஆரம்பித்தது முதல் ஆதிக்கம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்) ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தத…
-
- 3 replies
- 1.5k views
-
-
36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness இரண்டாண்டு தடைக்காலம் முடிந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ், மீண்டும் ஒருமுறை வெற்றியை ருசி பார்த்திருக்கிறது. விளையாடப் போகிறவர்களுக்கான பட்டியலை வெளியிட்ட நாள் தொடங்கி, கடைசி நாள்வரை, சென்னை அணியின் மேல் வைக்கப்பட்ட முக்கியமான ஒரு விமர்சனம், `டீம்ல 9 பேர் 30 வயதைத் தாண்டினவங்க... இவங்க எப்படி எனர்ஜெட்டிக்கா விளையாடி கப்பை தட்டிட்டுப் போவாங்க?' என்பதுதான். நேற்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் தோனி பேட்டி ஒன்றில் 'வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்' (Age is Just a Number) என்று கூறி அந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்திருந்தார். எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் த…
-
- 0 replies
- 572 views
-
-
ஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? பகிர்க படத்தின் காப்புரிமைANDY LYONS ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன? வெவ்வேறு ஜெர்ஸியில் அயல்நாட்டு வீரர்கள், இரைச்சல், இசை நிறைந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் தங்களது அணியையும், அணியின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் என அழைக்கப்படும் நடனமாடுபவர்கள் மற்றும் இந்திய அணிக்குள் நுழைவதற்காக தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி அணித் தேர்வாளராக்களை கவர முயற்சிக்கும் இளம் இந்திய வீரர்கள். ஐபிஎல் அணிகள் குறித்தும், இறுதிப் போட்டியில் எந்த அணி வெல்லக்கூடும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவதில்லை. ஒவ்வொர…
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங்: அல்ஜசீரா வீடியோவால் பரபரப்பு படம். | ஏ.பி. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2017-ல் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: அல்ஜஸீரா டிவி சேனல் ஆவண வீடியோ ஒன்றில் ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா 2017 தொடரில் ஆடிய டெஸ்ட் போட்டி பற்றி காட்டப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் நலன்களுக்காக ஸ்கோர் செய்தத…
-
- 0 replies
- 244 views
-
-
சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்…
-
- 1 reply
- 337 views
-
-
பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர். அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து த…
-
- 0 replies
- 403 views
-
-
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார். கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தட…
-
- 1 reply
- 558 views
-
-
`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்! கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. ந…
-
- 3 replies
- 915 views
-
-
ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட் காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன. புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர். …
-
- 2 replies
- 542 views
-
-
100 பந்துகள் கிரிக்கெட்: தோனி, கோலி, ரோகித் சர்மா பங்கேற்பு இந்திய அணி : கோப்புப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீ…
-
- 0 replies
- 504 views
-
-
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணிய…
-
- 0 replies
- 336 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. …
-
- 0 replies
- 501 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…
-
- 0 replies
- 466 views
-
-
ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக் தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆ…
-
- 11 replies
- 1.2k views
-
-
மோடிக்கும், தோனிக்கும் ‘சவால்’ விடுத்த விராட் கோலி விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி பதில் ட்வீட் செய்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் பிரதமர் …
-
- 0 replies
- 1k views
-
-
இது சிக்ஸர்களின் காலம் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள். முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள்…
-
- 19 replies
- 4.3k views
-
-
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #ICC #pakistanfanvideo கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு …
-
- 0 replies
- 546 views
-
-
அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360 ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
நியூசிலாந்து பிரபலம் வாய்ந்த ஆக்லாந்து ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தை கைவிடுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெ…
-
- 0 replies
- 379 views
-
-
ஆஸ்திரிய உடற்கட்டழகர் போட்டியில் லூசியன் புஷ்பராஜுக்கு வெள்ளிப் பதக்கம் Photo Courtesy - Lucion Pushparaj Facebook page தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான லூசியன் புஷ்பராஜ், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது ஆஸ்திரிய சர்வதேச உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமான வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். இதில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசியன் புஷ்பராஜ், உலகின் நட்சத்திர உடற்கட்டழகரையெல்ல…
-
- 0 replies
- 702 views
-